இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கை - தமிழகத்தில் அறிமுகம்

(News: Special reporter - photos by Gavaskar) 



சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வெளியிட்டு பேசிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இப்படி குறிப்பிட்டார்.

" ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி அரசு க‌‌‌ல்‌வி, வேலைவா‌‌ய்‌ப்பு, பெ‌ண்களு‌க்கான இடஒது‌க்‌கீடு போ‌ன்ற அனை‌த்து துறைக‌ளிலு‌ம் கொடு‌த்த வா‌க்குறு‌தியை ‌நிறைவே‌ற்ற‌வி‌ல்லை. எனவேதா‌ன் நா‌‌ங்க‌ள் 9 க‌ட்‌சிக‌ள் ஒ‌ன்‌றிணை‌ந்து 3வது அ‌ணியை உருவா‌க்‌கியு‌ள்ளோ‌ம்.

த‌மிழக‌த்‌தி‌ல் அ.‌தி.மு.க, பா.ம.க போ‌ன்ற க‌ட்‌சிக‌ள் எ‌ங்களு‌ட‌ன் இணை‌ந்து‌‌ள்ளன. இது எ‌ங்க‌ள் ந‌ம்‌பி‌க்கையை மேலு‌ம் அ‌திக‌ப்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்‌தியா‌வி‌ல் இதுவரை கா‌‌‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க ஆ‌கிய இரு க‌ட்‌சிக‌ள் ம‌ட்டுமே இரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது வலுவான 3வது அ‌ணி உருவ‌ா‌கியு‌ள்ளது உ‌த்தர‌‌பிரதேச‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க.வை தோ‌ற்கடி‌க்க பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மாயாவ‌தி ‌தீ‌விர நடவடி‌க்கை எடு‌த்து வரு‌கிறா‌ர்.

தே‌‌சிய அள‌விலு‌ம் அ‌ந்த க‌‌ட்‌சிகளை தோ‌ற்கடி‌‌ப்பதி‌ல் மாயாவ‌தி மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்றுவா‌ர். எ‌ங்களது 3வது அ‌ணி‌யி‌ல் த‌‌ற்போது 9 க‌ட்‌சிக‌‌ள் உ‌ள்ளன. இது 15 க‌ட்‌சிக‌ள் வரை அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கிறோ‌ம். எ‌ங்களது 3வது அ‌ணி‌யி‌‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள ‌க‌‌ட்‌சி‌க‌ள் வெ‌‌வ்வேறான கொ‌ள்கைக‌ள் கொ‌‌ண்டிரு‌ந்த போ‌திலு‌ம் கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க.வு‌க்கு மா‌ற்றாக ஓ‌ர் மா‌ற்று அ‌ணி அமைய வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ந‌ா‌ங்க‌ள் ஒ‌ன்‌றிணை‌ந்து‌ள்ளோ‌ம்.

இந்த அணி வரும் தேர்தலில் மகத்தான வெற்றி படைக்கும். அவரின் உறுதியைக் கண்டு அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் ஆச்சரியத்தில் அதிசயித்தனர்.

இன்றைய நிலையில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிருக்கு இடதுசாரிகளுக்கு உற்சாகம் கூடியுள்ளது. ஊடகங்கள் எல்லாம் "தேர்தல் முடிவுகள் குழப்பமானதாக இருக்கும்" என்று கூறிவருகின்றன. ஆனால் நடப்பது என்ன? இடதுசாரிகள் சொல்லுகிற மாற்று அணியின் பக்கம் மக்கள் உறுதியாக நிற்ப்பார்கள் என்பதைத்தான்.

வேலை இழந்து, சொந்த வாழ்க்கைக்கான அச்சாணியை தொலைத்து நிற்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நிற்பவர்கள் இடதுசாரிகள். கடந்து நான்கரை ஆண்டுகளில் அவர்கள் அரசிற்கு ஆதரவளித்த போது, மக்களுக்கான கொள்கைகளை வலியுறுத்தினார்கள், அவர்களால் நிறைய சாதிக்க முடிந்திருக்கிறது. இப்போதைய தேர்தல் அறிக்கையை படித்தால் இது புலப்படுகிறது.

இதுவரை நாடாளுமன்றத்தில் "வலியுறுத்துவோம்", "போராடுவோம்" என்று அறிக்கை வெளியிட்டு வந்த இடதுசாரிகள், நாங்கள் கோரிக்கைகளை "நிறைவேற்றுவோம்" என்று இப்போதைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். ஆம், அவர்கள் வரப்போகிற ஆட்சியில் பங்கேற்ப்பார்கள் என்பதும் இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுகிறது.

ஒருவேளை அப்படி முக்கிய மாற்றம் நடைபெற்றால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? எந்த விசயங்களை அவர்கள் மையப்படுத்துவார்கள்? என்பதற்கான பதில்கள் இந்த அறிக்கையில் அடங்கியிருக்கிறது. அதுபோக ஒவ்வொரு துறையினையும் மையப்படுத்தியும் தனித்தனி கையடக்க பிரசுரங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அவை நமது தளத்திலேயே ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. இந்த அறிக்கை மற்றும் பிரசுரங்களை படிக்கும் எவரும் இடதுசாரிகளின் அகண்ட பார்வையைக் கண்டு, அவர்களின் தீர்க்கமான அணுகுமுறை குறித்து அதிசயிக்காமல் இருக்க முடியாது.

இனி வரப்போகிற தேர்தலில் வெற்றி நிச்சயம் . . ஆனால் முதலாளித்துவ ஊடகங்களின் பொய் பித்தலாட்டங்களை மீறி, மக்கள் நல கொள்கைகளை மக்களின் மத்தியில் வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆம் இவர்களின் கொள்கைகள் மக்களை அடைந்து, அவற்றை ஓட்டாக மாற்றவேண்டிய கடமை நம் ஒவொருவரின் கைகளிலும் இருக்கிறது.






அறிக்கை விரைவில் நமது தளத்தில் வெளியிடப்படும் - காத்திருங்கள் ... !!

2 கருத்துகள்:

hariharan சொன்னது…

இடதுசாரிகளின் தலைமையில் அரசு அமைந்தால் என்னவெல்லாம் செய்யும் என்று தெஹல்கா இணையதளத்தில் செய்தி வந்தது, இது மக்களிடம் சென்றடையவேண்டும். இடதுசாரிகளின் தலைமையில் ஆட்சி அமைந்தால் அதை நீடிக்கவிடாத சக்திகள் உள்ளன, ஆனாலும் தலைமையேற்றவுடன் செய்யும் செயல்களை மக்கள் மறக்கமாட்டார்கள்,இடதுசாரிகள் யார் என்பதை மக்களுக்கு உணர்த்தவேண்டிய காலம் வந்துவிட்டது, அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டியது சிபிஎம் கடமையாகும்.

Sindhan R சொன்னது…

ஆமாம் நண்பர் ஹரிஹரன் ... மக்கள் உணரவேண்டும், அதற்க்கு நாமும் உதவ வேண்டும். ஊடகங்கங்கள் எப்போதும் இடதுசாரிகளுக்கு எதிராகத்தான் இருந்துள்ளன. இப்போதும் கூட அவர்கள் இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கைக்கு ஒன்றும் பெரிய முக்கியத்துவம் தரப்போவதில்லை. ஆனால் நாம் செயல்படவேண்டும். நமது செயல்பாடு ஒரு மாற்றத்திற்கு உதவவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?!!