ஈவோ மொரேல்ஸ் மீண்டும் மகத்தான வெற்றி


அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது சாகசங்களை மீண்டும் மீண்டும் உலகம் முழுவதும் அமலாக்கம் செய்துக் கொண்டே இருக்கிறது. தனது நாட்டின் பொருளாதார நெருக்கடியை மீட்கமுடியாமல் தடுமாற்றம் அடைந்திருந்தாலும் கூட அது தன்னை உலக காவல்காரன் என்ற நிலையிலிருந்துதான் அனுகுகிறது. இந்தியாவுடன் அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெப்பம் இட நெருக்கடி கொடுத்த போது இந்தியாவில் உள்ள இடதுசாரிகள் அது ஆபத்தில் முடியும் ஒப்பந்தம் என்றார்கள் ஆனால் காங்கிரஸ் கேட்க்க தயாரில்லை. இந்தியாவின் சுயசார்பு கேள்விக்குறியாக மாறும் என்றனர், நமது ஊடகங்கள் இடதுசாரிகளுக்கு வேறு வேலை இல்லை என்றனர். ஆனால் இதோ ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக இந்தியா மாற்றப்பட்டதன் முதல் விணை ஈரானுக்கு எதிராக அணு பயன்படுத்தல் தீர்மானத்தில் இந்தியா கையெப்பம் இட்டுள்ளது. இந்தியா கட்டிக்காத்து வந்த அணிசேரா கொள்கை என்ற தத்துவம் மூட்டைக்கட்டப்பட்டுள்ளது.இப்போதும் சில அப்பாவிகள் அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டு இந்தியா வல்லரசாக மாற முடியாது என்று பேசுகின்றனர். இந்தியா வல்லராசாக மாறுவது இருக்கட்டும் இந்தியாவில் அனைவருக்கும் கல்வி என்ற இலக்காவது முதலில் எட்டப்பட வேண்டும் என்பதுதான் நமது ஆசை. லத்தின் அமெரிக்க நாடுகள் ஒரு காலத்தில் அமெரிக்காவில் வேட்டைக்காடாக இருந்தது. ஆனால் அங்கு அடித்த சிகப்புக் காற்று அந்த நிலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சே, பிடல், லூலா, மொரோலஸ் என்று தலைவர்கள் எழுந்துக்கொண்டே இருக்கின்றர்கள். இதோ மீண்டும் ஒரு எழுச்சி பொலிவியாவில் நடந்த தேர்தலில்.


இது குறித்து இன்றைய தீக்கதிர் தலையங்கத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். .........................எஸ்.ஜி.ரமேஷ்பாபு

“பூமித்தாய் பெற்றெடுத்த உலகக் கதாநாயகன்” என்று கடந்த அக்டோபர் மாதம் ஐ.நா. பொதுச்சபையால் புகழாரம் சூட்டப்பட்ட பொலிவியா ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் மீண்டும் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.


சுமார் 470 ஆண்டுகளாக ஸ்பெயின் ஆதிக் கத்தின் கீழ் இருந்த பொலிவியாவில் முதல் முறையாக அய்மாரா பூர்வ குடியைச் சேர்ந்த மொரேல்ஸ் 2006ம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது 45 சதவீதம் வாக்குகள் பெற்ற அவர், 2008 ஆகஸ்ட் 14ந்தேதி நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் 57 சதவீதம் வாக்குகள் பெற்றார். இந்த தேர்தலில் மேலும் 10 சதவீத வாக்குகள் அதிகரித்து, 67 சதவீத வாக்கு கள் பெற்று, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அசைக்க முடியாத சக்தியினை பெற்றுள்ளார்.

மொரேல்ஸின் “சோசலிசத்திற்கான இயக் கம்” என்ற கட்சி மிகப்பெருவாரியான பொலிவிய மக்களின் மனதில் இடம்பெற்றிருப்பதற்கு, அவர்களின் நம்பிக்கையை மீண்டும் மேலும் வலுவான முறையில் பெற்றிருப்பதற்கு, கடந்த நான்காண்டுகளில் மொரேல்ஸ் ஆற்றிய மகத்தான பணிகளே காரணம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வேட்டைக் களமாக இருந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் முக்கியமான நாடு பொலிவியா. அமெரிக்க பெரும் நிறுவனங்களின் ஆடுகளமாகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு முக்கிய மைய மாகவும் இருந்த பொலிவியாவில், மொரேல்ஸ் தலைமையிலான இடதுசாரிச் சார்பு கொண்ட ஆட்சி அமைந்த பின்னர் நிலச்சீர்திருத்தம் தீவிரப்படுத்தப்பட்டது; அந்நாட்டின் மிகப்பெரு வாரியான பூர்வகுடி ஏழை மக்களுக்கு நிலமும், கல்வியும், வேலைவாய்ப்பும் உத்தரவாதப்படுத் தப்படும் வகையிலான புதிய கொள்கைகள் அமலாக்கப்பட்டன; சமீபத்தில் எண்ணெய் நிறு வனங்களை தேசியமயமாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; கடந்த மூன்றாண்டு களில் எழுத்தறிவின்மை கிட்டத்தட்ட முற்றிலு மாக ஒழிக்கப்பட்டுவிட்டது; லத்தீன் அமெரிக் காவில் கியூபா, வெனிசுலாவைத் தொடர்ந்து எழுத்தறிவின்மையிலிருந்து முற்றிலும் விடு தலைபெற்ற நாடாக பொலிவியா திகழ்கிறது; லட் சக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்தியது மொரேல்ஸ் அரசு.

சமீபத்தில் கியூபாவின் மகத்தான தலைவர் பிடல்காஸ்ட்ரோ எழுதிய கட்டுரையில், மொரேல்ஸின் இந்த சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு, உலகை நாசப்பாதைக்கு கொண்டுசென்ற அமெரிக்க ஏகாதிபத்திய தேர்ந் தெடுத்த ஜனாதிபதி ஒபாமாவுக்கு அறிவிக்கப் பட்ட நோபல் பரிசு நியாயமாக மொரேல்ஸுக்குத் தான் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

டிசம்பர் 6ந்தேதி ஜனாதிபதி தேர்தலில் மேலும் பெருவாரியான மக்களின் இதயங்களை வென்று மொரேல்ஸ் மகத்தான வெற்றி பெறுவார் என்று பிடல் காஸ்ட்ரோ கூறியிருந்தார். அவரது வாக்கு இன்று நனவாகியுள்ளது. பொலிவிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியுடன் ஆலோ சனை நடத்தாமலே அரசியல் அமைப்புச் சட் டத்தைக் கூட மாற்றும் அளவிற்கு தற்போது மொரேல்ஸுக்கு பலம் கிடைத்துள்ளது. எனினும், “எமது இலக்கு ஒட்டுமொத்த பொலிவியாவின் வளர்ச்சி; மாற்றுப்பாதையில் நடைபோடும் வளர்ச்சி; அனைத்துத் தரப்பு மக்களையும் இணைத்துப் புதிய பாதையில் பொலிவியாவை முன்னேற்றுவோம்” என்று வெற்றி ஊர்வலத்தில் கூறியுள்ளார்.

வெல்க, மொரேல்ஸின் மகத்தான முன்னேற்றப் பயணம்!

மதுரை தினகரன் ஊழியர்களுக்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
கருணாநிதியின் குடும்ப சண்டையின் காரணமாக மதுரையில் தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு இன்றோடு இரு ஆண்டு நிறைவடைகிறது. 2007ம் ஆண்டில் இதே தினத்தில் கொழுந்துவிட்டு எரிந்து சூழ்ந்த நெருப்பில் தனது இறுதி நிமிடங்களை நரக வேதனையுடன் அனுபவித்து தோல் தீய, நரம்புகள் வெடிக்க, கரிக்கட்டையாய் உதிர்ந்து போன அந்த மூன்று உயிர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவது தமிழக மக்களின் கடமையாகும்.


தேர்தல் நேரம், கருத்துக்கணிப்புக் காலம் என்பதால் அந்த கருத்துக் கணிப்பை மறந்துவிடக்கூடாது என்று நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். மதுரையில் தனது ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பும் அண்ணனுக்கு (அவருக்கு அஞ்சாநெஞ்சன் என்ற பெயரும் உள்ளதாம். போங்கடாங்க...) எதிராக கருத்துக்கணிப்பை வெளியிட்ட பத்திரிகை அலுவலகத்தை கொலைவெறியுடன் தாக்கிய, மூன்று உயிர்களை உயிரோடு கொளுத்திய அந்த நரவேட்டை மிருகங்கள் இன்று அண்ணனுக்கு தேர்தல் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். சிலர் அண்ணன் வாகனத்தில் சிரித்தபடி கையசைத்துச் செல்கின்றனர். அண்ணனும் புன்னகை சிந்தும் முகத்துடன் வாக்குகளை சேகரித்துக்கொண்டிருக்கிறார்.


ஆனால் தங்களது குடும்பங்களில் வருமானத்திற்கு ஆதரவாக இருந்த ஒரு ஜீவனை இழந்த அந்த குடும்பங்கள் சோகங்களை நெஞ்சில் சுமந்து மௌனமாக அழுதுக்கொண்டு இருக்கிறார்கள். கொலை மற்றும் கலவர குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட மதுரை நகரின் மேயர் தேன்மொழி, அவரது கணவர் கோபிநாதன் மற்றும் பி.பிரபு, எம்.சரவணன், கே.மாரி, பி.இருளாண்டி உள்ளிட்டவர்கள் இப்போது எங்கே, எப்படி சுபிட்சமாக உள்ளனர் என்று மதுரை நகர மக்கள் மட்டுமல்ல அனைவரும் அறிவர். தங்கள் குடும்பத்தில் எழுந்த அதிகார போட்டியின் வெறியை தீர்த்துக்கொள்ள அவர்களுக்கு மூன்று உயிர்கள் தேவைப்பட்டுள்ளது.


தினகரன் பத்திரிகை அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு, உள்ளே ஊழியர்கள் இருக்கும் போதே கொளுத்தப்பட்டு மரண ஓலம் அடங்கிய போது அங்கு வந்த கலாநிதிமாறன் இதை சும்மாவிடப்போவதில்லை என்று சபதமிட்டார். அப்போது யாரும் நினைக்கவில்லை, அது வெற்று வார்த்தைகளாக காற்றில் கரையும் என்றும், நிறம் மாறுமென்றும். அதன் பிறகு தயாநிதி மாறனின் பதவி போனதும் சற்று கோபம் அதிகமானது. அதன் விளைவு சன் தொலைக்காட்சியில் மற்ற கட்சிகளின் தலைவர்கள் தலைகாட்டத் துவங்கினர். தினகரன் பத்திரிகையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் படங்களும் பேட்டியும் வரத்தொடங்கியது.


1990ல் துவங்கிய டீவி ராஜ்ஜியம் மெல்ல மெல்ல தனது வலையை விரித்து இன்று சன் நியூஸ், கிரன் நியூஸ், உதயா நியூஸ், ஜெமினி நியூஸ், சன் மியூசிக், உதயா மியூசிக், ஜெமினி மியூசிக், உதயா கேபிள் விஷன், சுட்டி டீவி, கே டீவி, ஆதித்தியா டீவி, தேஜா டீவி, சூர்யா டீவி, ஜெமினி டீவி, உதயா டீவி, சிந்து டீவி, குஷி டீவி, கிரன் டீவி, உதயா வர்தகளு, உதயா மூவிஸ் போன்ற 22 தொலைகாட்சி சேனல்களும், சூரியன் எப்.எம் போல நாற்பதுக்கும் மேற்பட்ட பண்பலை அலைவரிசைகளையும் கொண்டு பிரமாண்ட வளர்ச்சி பெற்றுள்ளது அதை சமாளிக்க வேண்டுமெனில் ஆளும் கட்சிக்கு பலமான ஊடக பலம் தேவைப்பட்டது.


எனவே உடன் கலைஞர் டீவி துவக்கப்பட்டது. சன் டீவி நிர்வாகத்தில் உள்ள பலர் மிரட்டப்பட்டு அல்லது அன்பாக கவனிக்கப்பட்டு கலைஞர் டீவி நிர்வாகத்திற்கு கொண்டுவரப்பட்டனர். பலநிகழ்ச்சிகள் சன் டீவியிலிருந்து கலைஞர் டீவிக்கு மாற்றப்பட்டது. சிரிப்பு நிகழ்ச்சி கலைஞர்கள் மிரட்டப்பட்டடு கண்ணீருடன் கலைஞர் டீவியில் இணைந்தனர். தினகரனுக்கு எதிராக எதிரொலி என்ற பத்திரிக்கை முளைத்து வந்தது. சுமங்களி கேபிள் நிறுவனத்திற்கு எதிராக அரசு கேபிள் விஷன் துவக்கப்பட்டது, மதுரையில் அண்ணன் ராயல் கேபிள் விஷனை துவக்கினார்.


அவரது அடிப்பொடிகள் தங்களிடமே தொடர்புகளை பெறவேண்டுமென கேபிள் ஆப்ரேட்டர்களை மிரட்டினர் அல்லது உதைத்தனர். சன்னுக்கு எதிராக முழுமையான போராட்டத்தை அண்ணன் அழகிரி துவங்கிட மதுரை மண்டலத்தில் சன் தெரியாமல் போனது. அதே நேரம் அண்ணா அறிவாலயத்திலிருந்தும் சன் நிறுவனம் துரத்தப்பட்டது.


ஆட்சி அதிகாரம், பணபலத்தால் நெருக்கடி அதிகமாகன நேரத்தில்தான் தினகரனுக்கு மத்திய மந்திரி ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் என்ற பெயரில் உதவிக்கரம் நீட்டினார்.


இந்திய நாட்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை நட்டப்படுத்தி கோடி கோடியாய் கொள்ளையடித்த, தொலைத்தொடர்புத்துறையில் ஸ்பெக்ட்ரம் என்ற பூதத்தை தினகரன் கையில் எடுத்ததும் கலைஞர் தரப்பு கொஞ்சம் அடக்கி வாசிக்கத்துவங்கியது. தினம் தினம் தினகரன் நாளிதழில் ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமாக விபரங்கள் பக்கம் பக்கமாக வரத்தொடங்கியது. இந்த தகவல் மத்திய அரசுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.


இதற்கிடையில் தாத்தாவை பார்க்க பேரன்கள் அழைக்கப்பட்டனர். கலாநிதி மற்றும் தயாநிதி என்ற பேரன்கள் கருணாநிதி என்ற தாத்தாவை பார்க்கும் போகும்போது, ஸ்டாலின் மற்றும் அழகிரி என்ற மாமாக்களும் உடன் இருந்தனர். பிரிந்தவர்கள் சேர்ந்தனர். அவர் கண்ணீர் சிந்த, இவர் அதை துடைக்க, பலகோடி தமிழ்மக்கள் இளித்த வாயர்களாக மீண்டும் ஒருமுறை மாற்றப்பட்டனர். குடும்பத்துடன் அனைவரும் சிரித்தபடி பத்திரிகைகளுக்கு போஸ் கொடுத்தனர். எங்களுக்குள் காற்று கூட நுழைய முடியாது என்று அண்ணன் அழகிரி தயாநிதி மாறனை கட்டிப்பிடித்து பேட்டி கொடுக்க இவர்களது நாடகத்திற்கு சுபம் போடப்பட்டது.


இதற்கிடையில் மற்றொரு காட்சியும் அரங்கேறியது. எம்.ஜி.ஆருக்கு எதிராக நடிகனாக களமிறக்கப்பட்டு மூக்குடைப்பட்ட மூத்த மகன் மு.க.முத்து வந்து ஒட்டிக்கொண்டார், அவரது மகன் உலக புகழ்பெற்ற (!!!!?) பாடகராக அடையாளப்படுத்தப்பட்டார். முக்கு முத்தான வைரமுத்துவும் முடிந்த அளவு தூது சென்று கல்லாக்கட்டினார்.


இந்த நாடகத்தால் கருனாநிதி குடும்பம் அடைந்த நன்மைகள் பல- புதிய சேனல்களும், பத்திரிகையும் துவக்கபட்டது.- ஸ்பெக்ட்ரம் லஞ்சம் பலருக்கு (அவர் குடும்பத்தினுள்தான்) பங்குபிரிக்கப்பட்டது.- டெல்லியை கவனிக்க கனிமொழியும் பதவியேற்றுக்கொண்டார். (கனிமொழி அம்மா எனக்கு சும்மா என்ற வசனம் உங்கள் நினைவுக்கு வந்தால் கட்டுரையாளர் பொறுப்பல்ல) - அண்ணன் அழகிரி அதிகார பலம் அதிகரித்தது.


தமிழக மக்கள் திடீரென ஏற்பட்ட இந்த பரபரப்பூட்டும் நாடக காட்சியை வழக்கம் போல சுவராசியமாக விவாதித்தனர். ஊடகங்கள் வழக்கம் போல தங்களது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டு "கவர்" ஸ்டோரிகள் எழுதினர். ஆனால் இதற்கு பின்னால் மறைந்துகிடக்கும் பல கேள்விகள் நிச்சயம் எழும் என்பதை பலர் மறந்தே போனார்கள்.


- தனது தாத்தாவுடன் ஏற்பட்ட மோதலின் போது பக்கம் பக்கமாய் எழுதிய ஸ்பெக்ட்ரம் ஊழல் சம்பந்தமான செய்தி திடீரென நின்று போனதன் காரணம் என்ன என்பதை தினகரன் மறைப்பது ஏன்?


- அண்ணனின் ராயல் கேபிள் விஷனால் பாதிக்கப்பட்ட அப்பாவி கேபிள் ஆப்ரேடர்களின் கதி என்ன?


- அரசு கேபிள் திட்டம் என்ன ஆனது என்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுமா?


- தனது குடும்ப உறுப்பினர்களின் நலன் காக்கப்பட தினம் தினம் உழைக்கும் முதல்வர் மதுரையில் அண்ணனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்?


- தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் உயிரோடு கொளுத்தப்பட்ட மூன்று அப்பாவி ஊழியர்களின் குடும்பங்களின் கதி என்ன?


- அந்த ஊழியர்களின் குடும்பங்கள் கொடுத்த வழக்கு இனி என்னாகும்?


- பணம் இருப்பவர்கள் மோதிக்கொண்டால் இடையில் இருக்கும் சாதாரண மக்களின் கதி இனியும் இப்படிதான் ஆகுமா? கேள்விகள் நீண்டுகொண்டே போகிறது...


மதுரையில் போட்டியிடும் அண்ணன் இன்று கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து, தனது அதிகார எல்லையை இந்திய நாட்டின் தலைநகர் வரை கொண்டு செல்லத் துடிக்கிறார். மதுரை நகர மக்கள் என்ன செய்யப்போகிறார்கள்?!

பிரகாஷ் காரத்தின் "மாஸ்டர் பிளான்'!

- சத்தீஷ் 

மூன்றாவது அணி என்பது மூன்றாவதாக வரும் அணி என்று பலராலும் பலமுறை எள்ளி நகையாடப்பட்டிருந்தாலும், 2009 மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை மூன்றாவது அணிக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கான ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்ட நாள்முதலே, மூன்றாவது அணிக்கான முயற்சியில் இறங்கிவிட்டார் அவர்.

  தில்லி ஹுமாயூன் சாலையிலுள்ள உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதியின் வீட்டிற்குப் போய் அவரைத் துணைக்கு அழைத்தது முதல், ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் கைகுலுக்கி பிஜு ஜனதா தளத்தை மூன்றாவது அணியில் இணைத்துக் கொண்டதுவரை பிரகாஷ் காரத் அசுர வேகத்தில் தனது பகடைக் காய்களை உருட்டி உருட்டி செயல்பட்டார். தேர்தல் முடிவுகளுக்குப்பின் இடதுசாரிகளின் விரலசைப்பில் மட்டும்தான் ஓர் அரசு அமைந்தாக வேண்டும் என்கிற நிலைமையை ஏற்படுத்துவதுதான் பிரகாஷ் காரத்தின் மாஸ்டர் பிளான்!

  பிரகாஷ் காரத் பிறந்தது பர்மாவின் (இன்றைய மியான்மர்) தலைநகரான ரங்கூனில் (இப்போது யங்கூன்). இவர் பிறந்த தேதி பிப்ரவரி 7, 1948 என்றாலும் அதிகாரபூர்வமான பிறந்த தேதி அக்டோபர் 19, 1947. பிரகாஷ் காரத்தின் தந்தை அன்றைய பிரிட்டிஷ் ரயில்வேயில் அதிகாரியாக இருந்தவர்.

  பள்ளியில் படிக்கும்போதே தனது தந்தையை இழந்த பிரகாஷும் தாயார் ராதாவும் சொந்த ஊரான கேரளத்துக்குப் போகாமல், தஞ்சமடைந்தது நமது தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில். சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பொருளாதாரம் படித்த பிரகாஷ் காரத், பல்கலைக்கழகத்திலேயே சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் பெற்றதுடன் இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு உதவித் தொகையும் பெற்றார்.

  பிரகாஷ் காரத்தின் எடின்பர்க் பல்கலைக்கழக வாழ்க்கைதான் அவரை ஒரு பொதுவுடைமை சிந்தனையாளராக மாற்றியது. மார்க்ஸýம், ஏங்கல்ஸýம் பிரகாஷுக்கு அறிமுகமானது அங்குதான். 1970-ல் இந்தியாவுக்குத் திரும்பிய பிரகாஷ் காரத், தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படிப்பைத் தொடர முற்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சம்மேளனத்தின் (எஸ்.எப்.ஐ.) நிறுவனத் தலைவர்களில் பிரகாஷ் காரத்தும் ஒருவர், தெரியுமா?

  எஸ்.எப்.ஐ.யின் தள நாயகர்களில் ஒருவராக இருந்த காலத்தில் கட்சித் தலைவராக இருந்த ஏ.கே. கோபாலனின் உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பு காரத்துக்குக் கிடைத்தது. அவசரநிலைச் சட்டப் பிரகடனமும், அதை எதிர்த்து நடந்த போராட்டமும், அவரைத் தலைமறைவு வாழ்க்கை வாழவும், காவல்துறையால் பிடிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிக்கவும் உள்படுத்தியது. சுமார் ஒன்றரை வருடம் அரசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுத் தலைமறைவாக வாழ்ந்தவர் பிரகாஷ் காரத் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

  எண்பதுகளின் ஆரம்பத்தில் பிரகாஷ் காரத் மீண்டும் சென்னைவாசியானார். இந்த முறை அவர் தொழிற்சங்கத் தலைவர் வி.பி. சிந்தனின் வலது கரமாகத் தொழிலாளர் பிரச்னைகளில் முழுநேர கவனமும் செலுத்த நேர்ந்தது. 1985-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடின் பார்வையில் பட்டார். அடுத்த சில வருடங்கள், ஈ.எம்.எஸ்.சின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட்டது காரத் தான் என்பது தில்லியிலுள்ள கட்சித் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனுடன் தொடர்பு கொண்டிருந்த அனைவருக்கும் தெரியும்.

  பிரகாஷ் காரத் 1992-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியின் "பொலிட்பீரோ'வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, இந்திய அரசியல் மிகப்பெரிய மாற்றங்களுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நேரம். ஹர்ஷத் மேத்தா ஊழலில் தொடங்கி பாபர் மசூதி இடிப்புப் பிரச்னைவரை, நாளும் பொழுதும் அன்றைய நரசிம்ம ராவ் அரசு தனது செல்வாக்கை இழந்து வந்த நேரம். பாஜகவும், இடதுசாரிகளும் நரசிம்ம ராவுக்குத் தந்து கொண்டிருந்த மறைமுக ஆதரவை விலக்கிக் கொண்ட நேரமும்கூட.

  ஈ.எம்.எஸ்.ஸýக்குப் பிறகு பொதுச் செயலாளராகப் பதவி ஏற்ற ஹர்கிஷண்சிங் சுர்ஜித்தின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகப் பிரகாஷ் காரத் தொடர்ந்ததில் ஆச்சரியமில்லை. ஈ.எம்.எஸ்.ஸýக்குப் பிறகு கட்சியின் தத்துவ போதகர்களில் பிரகாஷ் காரத் முன்னிலை வகித்தார் என்பதுதான் நிஜம். 1996-ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தபோதும், அதற்குப் பிறகும் கட்சியின் வெளியில் தெரிந்த முகமாக ஹர்கிஷண்சிங் சுர்ஜித் இருந்தாலும், பின்னணியில் நிழலாகச் செயல்பட்டவர் பிரகாஷ் காரத்தான்.

  1996-ல் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் நடந்த ஒரு மிகப்பெரிய சரித்திர நிகழ்வு வெளியில் தெரியாமலே போய்விட்டது. ஐக்கிய முன்னணி அரசில் இடதுசாரிகள் பங்கேற்பதா இல்லையா என்கிற சர்ச்சை நடந்து வந்த நேரம் அது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களான இந்திரஜித் குப்தா, சதுரானன் மிஸ்ரா, பி.கே. வாசுதேவன் நாயர் போன்றவர்கள் ஆட்சியில் பங்கு பெறக் கூடாது என்று நினைத்தார்கள். ஆனால், முற்றிலும் விபரீதமாக சி.பி.ஐ.யின் பொதுக்குழு, ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்று தீர்மானித்தது.

  மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான சுர்ஜித், ஈ.கே. நாயனார் மற்றும் ஜோதிபாசு போன்றவர்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று விழைந்தனர். மார்க்சிஸ்ட் கட்சி சம்மதித்திருந்தால் ஜோதிபாசு ஒருவேளை பிரதமராகக்கூடத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார். ஒரு கம்யூனிஸ்ட்டின் தலைமையிலான கூட்டணி அரசு இந்தியாவில் பதவி ஏற்றிருக்கும்.

  ஆனால், தலைவர்களின் விருப்பத்திற்கு விரோதமாக, மார்க்சிஸ்ட் கட்சியின் "பொலிட்பீரோ', ஆட்சியில் பங்கு கொள்ளக் கூடாது என்று அந்தக் கோரிக்கையை நிராகரித்தது. அந்தத் தீர்மானத்தை எதிர்த்து முன்னணியில் இருந்தவர் பிரகாஷ் காரத் தான். அதற்கு அவர் கூறிய காரணம்: ""நமது கொள்கைகளையும் திட்டங்களையும் நிறைவேற்ற முடியாத, பதவிக்காக ஒவ்வொரு கட்டத்திலும் நமது கொள்கைகளைச் சமரசம் செய்து கொள்கிற விதத்தில் அமையும் ஆட்சியும் அதிகாரமும் நமது இயக்கத்தைப் பலமிழக்கச் செய்துவிடும். நாம் கேலிப்பொருளாகி விடுவோம்'' என்பதுதான்.

  "நாம் செய்த சரித்திரத் தவறு' என்று ஜோதிபாசுவால் விமர்சிக்கப்பட்ட அந்த முடிவுக்குக் காரணமான பிரகாஷ் காரத், அப்போதும் இப்போதும் ஒரு விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார். மாற்றங்களுக்கு வழிகாட்டும் நிலையில்தான் இடதுசாரிகள் இருக்கிறார்களே தவிர, மாற்றத்தை முன்னின்று வழிநடத்தும் எண்ணிக்கை பலம் பெற்றவர்களாக இல்லை என்பதுதான் அது.

    தில்லி கோல்மார்க்கெட் பகுதியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏ.கே.ஜி. பவனின் மூன்றாவது மாடியிலுள்ள ஓர் ஒதுக்குப்புறமான அறையில் அமர்ந்து மூன்றாவது முன்னணி பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறாரா காரத் என்றால் அதுதான் இல்லை. இந்தியா முழுவதும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார். இப்போது அவரது கவலை எல்லாம் காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அரசு அமைய வேண்டும் என்பது மட்டுமே. ஏனைய மூன்றாவது அணித் தலைவர்களைப் போல, தான் பிரதமராக வேண்டும் என்பதல்ல!

  பிரகாஷ் காரத்தின் மனைவி பிருந்தா காரத்தும் மார்க்சிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியர். இருவருமே மாணவர் இயக்கத்திலிருந்து உயர்ந்தவர்கள். அவர் இப்போது மாநிலங்களவை உறுப்பினரும்கூட. 1975-ல் பிரகாஷ் காரத்தும் பிருந்தாவும் திருமணம் செய்து கொண்டபோது தங்களுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்கள். தங்களது கட்சிப் பணிக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்கள் எடுத்த முடிவு என்ன தெரியுமா? குழந்தை பெற்றுக் கொள்வது இல்லை என்பதுதான்!   

 நன்றி திணமனி நாள் :04.05.2009

நாடாளுமன்ற தேர்தலும் உழைக்கும் வர்க்கமும்

ஆர்.சிங்காரவேலு

2004ல் 61 இடதுசாரி எம்.பிக்க ளின் ஆதரவுடன் அமைந்த ஐ.மு.கூ. அரசு, குறைந் தபட்ச பொதுத்திட்டத்தை அறிவித்தது. இதில் உழைப்பாளர் நலன் குறித்து என் னென்ன வாக்குறுதி அளிக் கப்பட்டது?

“அனைத்து தொழிலாளர்களின் குறிப்பாக முறைசாரா தொழிலாளர்களின் நலன்கள் பேணப்படும். சமூக பாதுகாப்பு, சுகாதார காப் பீடு திட்டம் விஸ்தரிக்கப்படும். முதலாளிகள் இஷ்டம்போல் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதும், துரத்துவதும் என்ற கொள்கை யை புறக்கணிக்கிறோம். தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய வகையில் தொழிலாளர் சட்டங்களில் சில மாறுதல்கள் கொண்டுவரப்படும். இந்த மாறுதல்கள், தொழிற்சங்கங்களுடன் முழுமையாக கலந்தா லோசித்து கொண்டுவரப்படும். வேலை நிறுத்த உரிமை உட்பட அனைத்து உரிமை களும் பறிக்கப்படமாட்டாது. பொதுவாக லாப மீட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படமாட்டாது. கிராமப்புற, நகர்ப்புற ஏழை மற்றும் அடித்தட்டு, நடுத்தர மக்களின் குடும்பத்தில் ஒருவருக்கு ஆண்டில் 100 நாட்கள் வேலை உறுதிப்படுத்தப்படும்.

நடைமுறையில் மேற்கண்ட வாக் குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது. கிரா மப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வறு மைக் கோட்டிற்கும் கீழுள்ளவர்க்கே வேலை என மசோதா இருந்தது. இடதுசாரிகள் நிர்ப் பந்தத்தால் இந்த ஷரத்து நீக்கப்பட்டது.

மத்திய அரசு மீது ஒரு குற்றப்பத்திரிகையே தொடுக்கலாம். உழைக்கும் மக்களின் நலன் கள் குறித்த, கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை தொழிலாளர்கள் முன்வைக்கிறார்கள்.

வேலை வாய்ப்பு பறிப்பு

கடந்த 5 ஆண்டுகளாக, வேலை நியமன தடைச்சட்டம் நீடிக்கிறது. ரயில்வே உட்பட மத்திய அரசுப் பணிகளில் ஏராளமான பணி யிடங்கள் நீக்கப்பட்டுவிட்டன. ரயில்வே துறையில் பல பணிகள் வெளியிடங்களுக்கு மாற்றப்படுகிறது; தனியார்களிடம் ஒப்படைக் கப்படுகிறது. நிரந்தர தொழிலாளர்களை நிறுத் திவிட்டு, அவர்களுக்கு பதிலாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களை பணியில் அமர்த்துகின்ற னர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியமோ மிகக்குறைவு.

தனியார்துறையில் உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தும் தொழில்களில் கூட காண்ட் ராக்ட் தொழிலாளர் பயன்படுத்தப்படுகின்ற னர். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி நிரந் தர வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடியினால் கடந்த 6 மாதங்களில் 50 லட்சம் வேலைகள் இழக்கப் பட்டுள்ளன. தனியார்துறையில் நிலவும் உயர் சாதி ஆதிக்க மனோபாவத்தால், வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற் றப்படவில்லை. இச்சட்டம் கொண்டுவரும் அரசியல் உறுதிப்பாடும் மைய அரசுக்கு இல்லை.

கோலோச்சும் அடிமைத்தனம்

தொழிலாளர் சட்டங்கள் எதுவும் அநேக மாக அமலாக்கப்படுவதில்லை. எதற்கெடுத் தாலும் பணி நீக்கம் மற்றும் ஆட்குறைப்பு என் பது அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதேபோல் ஓவர்டைம் இரட்டிப்பு சம்பளம் இன்றி, 12 மணி நேர வேலை என்பது சாதாரணமாக அமலா கிறது. பல மாநிலங்களில் குறைந்தபட்ச ஊதிய ஆய்வாளர்கள் பணி நீக்கப்பட்டுவிட் டது. 30 கோடி உழைப்பாளிகள் தினசரி ரூ.50 கூட (ஒரு டாலர்) சம்பாதிக்க முடிவதில்லை என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் கூறு கிறது. 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழி லாளர் உள்ள நிறுவனங்களில் பி.எப்., இஎஸ்ஐ, போன்ற சட்ட சலுகைகள் கொடுக்க வேண் டும் என்பதால், பல நிறுவனங்கள் 19 தொழி லாளரை பணியில் அமர்த்தியுள்ளதாக கணக்கு காட்டி, சட்ட சலுகைகளிலிருந்து தப்பித்துவிடுகின்றன. ஒரே காம்பவுண்டிற் குள், 2,3 நிறுவனம் செயல்படுவதாக ஜோடிக் கப்படுவதும் உண்டு.

முறைசாரா தொழிலாளர்க்கு பட்டை நாமம்

2008 டிசம்பரில் அகில இந்திய முறை சாரா தொழிலாளர் ஒருங்கிணைந்த சமூக பாதுகாப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இச் சட்டத்தால் முறைசாரா தொழிலாளர்க்கு எந்த பயனுமில்லை. ‘அறுவை சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’ என்பது போன்றதே இச்சட்டம். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகள், அர்ஜூன் சென் குப்தா தலை மையிலான கமிஷனின் பரிந்துரைகள், சமூக பாதுகாப்பு சட்டம் குறித்து தேசிய தொழிலாளர் நிறுவனத்தில் நடந்த கருத்தரங்கு இறுதிப் படுத்திய பரிந்துரைகள் அனைத்தும் புறக் கணிக்கப்பட்டன.

விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் முழுமையாக அமலாக்கப்படும் என குறைந்தபட்ச பொதுத்திட்டம் கூறுகிறது. ஆனால் இதுவும் நிறைவேற்றப்படவில்லை.

உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்க ளுக்கு ஊட்டச்சத்து வழங்கிவரும் லட்சக் கணக்கான அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் 20 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றாலும், பென்சன் வழங்கப்படு வதில்லை.

கிராமப்புற சுகாதாரதிட்டம் அமலாக்கத் தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டுவரும் ஹளுழஹளு என்ற ஆயாக்களுக்கு மாதம் ரூ.600 ஊக்கத்தொகை என்று மட்டும் வழங்கப்படு கிறது. அலவன்ஸ், படிகள் எதுவும் இன்றி வஞ்சிக்கப்படுகின்றனர்.

சத்துணவு, மதிய உணவு ஊழியர் நிலை யும் துயரமாகவே உள்ளது.

பணியிடங்களில் பாலியல் பலாத்காரத் தை தடுப்பது குறித்து, சட்டம் இயற்றப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் 12 ஆண்டு களுக்கு முன்பே வழிகாட்டியது. இத்தகைய சட்டம் இதுவரை கொண்டுவரப்படவில்லை.

தகவல் தொழில்நுட்ப துறையில் இரவு ஷிப்டில் பெண்கள் பணியாற்றும்போது பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் பாதுகாப்பு குறித்து சட்டம் இல்லை.

பி.எப்/பென்சன்

நாடு முழுவதும் 4 கோடி பி.எப் சந்தா தாரர்கள் உள்ளனர். பி.எப். சட்டம், 10 அல்லது அதற்குமேல் தொழிலாளர் உள்ள நிறுவனத் திற்கும் பொருந்தும் என்ற சட்டதிருத்தம் கொண்டு வரப்படும் என அரசு அளித்த வாக் குறுதி, காகிதத்தில் உறங்குகிறது.

பி.எப். மீதான வட்டி 12 சதத்திலிருந்து 8.5 சதமாக குறைந்துவிட்டது. பி.எப் நிதி மற்றும் 1995 பென்சன் திட்டப்படி, நிறுவனங்களின் 8.33 சத ஊதிய பென்சன் பங்கு நிதி அரசின் ஸ்பெஷல் டெபாசிட் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டு அரசு கடந்த காலத்தில் 12 சத வட்டி வழங்கி வந்தது. பின்னர் இதை 8 சதமாக குறைத்துவிட்டது.

இடதுசாரிகள் மைய அரசுக்கு அளித்து வந்த ஆதரவு வாபஸ் ஆன பின்னர், பி.எப். நிதியை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற் காக, எச்எஸ்பிசி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ புருடன்சியல் ஆகிய தனியார் பி.எப் நிதி மேலாளர்களை அரசு நியமித்துள்ளது. உலகம் முழுவதும் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து வரும் நேரத்தில், மைய அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.

இடதுசாரி கட்சிகளின் சேவைகள்

உழைக்கும் வர்க்கத்தின் நலன்களை பாதுகாத்திட எண்ணற்ற போராட்டங்களை இடதுசாரி கட்சிகள் நடத்தியுள்ளன. இதனால் எந்த ஒரு நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமும் தனியார்மயமாக் கப்படவில்லை.

டில்லி, மும்பை விமான நிலையங்கள், இடதுசாரி கட்சிகள் மற்றும் தொழிலாளர் எதிர்ப்பை மீறி தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் ஏராளமான ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது.

பெல் பொதுத்துறை பங்கு விற்பனைக்கு மைய அரசு முயற்சித்தபோது, இடதுசாரிகள், ஐ.மு.கூ ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை புறக்கணிப்போம் என்ற முடிவை இடது சாரிகள் எடுத்ததால் பெல் பங்கு விற்பனை தடுக்கப்பட்டது.

நெய்வேலி, நேஷனல் அலுமினியம் கம் பெனிகளை, தனியார்மயமாக்க முயற்சிக்கப் பட்டதை ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் முறியடிக்கப்பட்டது.

வங்கி, இன்சூரன்ஸ் துறைகளில் நேரடி அந்நிய முதலீடு அதிகரிக்க மைய அரசு எடுத்த முயற்சிகளை இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அமெரிக்க நிதித்துறை நெருக்கடியினால், நமது நிதித்துறை பாதிக் கப்படாமல் பாதுகாக்க முடிந்தது.

‘வால்மார்ட்’ என்ற அமெரிக்க சில்லறை விற்பனை பகாசுர நிறுவனம் நம் நாட்டிற்குள் நுழை வதை இடதுசாரிகள் தடுத்து நிறுத் தினர்.

பென்சன் நிதியை பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வகை செய்யும் சட்டம், இடதுசாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.

இடதுசாரிகள் ஆளும் மேற்குவங்கத்தில், மூடிய ஆலை தொழிலாளர்க்கு மாத நிவா ரணம் ரூ.1000 அளிக்கப்படுகிறது. ரூ.5106 கோடி சிறப்பு திட்டத்தின் மூலம் கிலோ அரிசி ரூ.2, வீட்டு வசதி திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கு 4 சத வட்டியில் கடன், 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் நியமனம் ஆகியவை அமலாக்கப்படுகின்றன.

கேரளாவிலும், கிலோ அரிசி ரூ.2 திட்டம், ரூ.10 ஆயிரம் கோடியில் உள்முக கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் திட்டம் அமலாக்கப் படுகிறது. வெளிநாடுகளில் வேலையிழந்து தாயகம் திரும்பும் தொழிலாளர்க்கு நிவாரணம் வழங்கும் நலத்திட்டம் அறிவிக்கப்பட்டுள் ளது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் நலிவுற்ற நிலையிலிருந்து மீட்கப்பட்டு, லாபமீட்டுபவையாக மாற்றப்பட்டன.

உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை காக்கவும், வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வும், பொதுத்துறைகளை பாதுகாக்கவும், முறைசாரா தொழிலாளர்க்கு உருப்படியான சமூக பாதுகாப்பு சட்டம் கொண்டுவரவும், இடதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் ஆதர வுடன் போட்டியிடும் ஜனநாயக சக்திக ளுக்கு வாக்களிப்பதும், தேர்தல்களத்தில் முனைப்பாக தேனீக்கள் போல சுறுசுறுப்பாக ஈடுபடுவதும் தமிழக உழைப்பாளி மக்களின் கடமை.

நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மாற்றாக, குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் மக்களை அவமதிக்கும் நடவடிக்கை

-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்

2009 மார்ச் 26 அன்று, அருணாச் சலப் பிரதேசத்தில் ஒரு தேர்தல் கூட் டத்தில் உரையாற்றிய எல்.கே. அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங்கை, ‘‘அமெ ரிக்க ஜனாதிபதித் தேர்தல்கள் போன்று’’ இங்கும் நடத்துவது தொடர்பாக ஒரு தேசிய விவாதத்திற்குத் தயாரா என்று சவால் விடுத்திருக்கிறார். இது ஒன்றும் அப்பாவித்தனமான அழைப்பு அல்ல. இதற்கு முன் இவர் பேசும்போது, அமெ ரிக்காவில் இருப்பதைப்போலவே இங் கும் இரு கட்சி அரசியல்தான் என்று கூறினார். இவரது கூற்று, ஆர்எஸ்எஸ் என்னும் மதவாத அமைப்பின் ஓர் அங்க மாக இயங்கும் பாஜக, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை அமெரிக்காவில் இருப்பதுபோன்று ஜனாதிபதிக்கு அதி காரம் அளிக்கும் அமைப்பாக மாற்ற விரும்புவதை உறுதிப்படுத்துகிறது.


இந்தப் பிரச்சனை தொடர்பாக விவா தத்தை நாம் எடுத்துக்கொள்வதற்கு முன்னர், அத்வானி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், தங்கள் அணியின் சார்பில் அடுத்த பிரதமர் யார் என்று மதச்சார்பற்ற முன்னணி கூறவில் லையே என்று பேசி வருவது தொடர் பாகப் பதிலளிக்க வேண்டியது அவசியம். நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பைத் தழுவியுள்ள நம்முடைய அரசியலமைப்பு முறையில், நாடாளுமன்றத்திற்குத் தங் கள் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந் தெடுத்து அனுப்பும் விதத்தில் மக்களே மகத்தான அதிகாரங்களைப் பெற்றிருக் கிறார்கள். இவ்வாறு மக்களால் தேர்ந் தெடுக்கப்படும் பிரதிநிதிகள், அரசாங் கத்தை அமைக்கிறார்கள். தங்களுக்குள் ஒருவரைப் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கி றார்கள். எனவே, பிரதமர் தேர்வு செய் யப்படுவதென்கிற பிரச்சனை, தேர்த லுக்குப் பின்தான் எழுகிறது. தற்சமயம் ஒரு கட்சியாலோ அல்லது ஒரு கூட்டணியாலோ, பிரதமராகச் சித்தரிக்கப் படும் நபர், அவர் போட்டியிடும் தொகுதி யில் உள்ள மக்களால் ஒதுக்கித் தள்ளப் படும் வாய்ப்பு உண்டு. பிரதமராக இருந்த காலத்திலேயே, 1977இல் ரேப ரேலி தொகுதியில் அப்போது மாபெரும் வல்லமை படைத்தவராகக் கருதப்பட்ட இந்திரா காந்தி, அத்தொகுதி மக்களால் தோற்கடிக்கப்பட்டது கடந்த கால வரலாறு. ஆகையால், தேர்தலுக்கு முன் ஒருவரைப் பிரதமராகச் சித்தரிக்கும் செயல், மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல, நம்முடைய அரசியலமைப் புச் சட்டத்தால் மக்களுக்கு அளிக் கப்பட்டுள்ள மகத்தான அதிகாரத்தை மறுதலிப்பதுமாகும்.

நாட்டில் ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பைக் கொண்டு வர விரும்பும் பாஜக-வின் முயற்சிக ளுக்கு இப்போது நாம் வருவோம். பாஜக-வானது 1991 இல் வெளியிட்ட அதன் தேர்தல் அறிக்கையில், ‘‘தற்போதுள்ள நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறையைவிட, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித் திட ஓர் ஆணையம் அமைக்கப்படும்’’ என்று அறிவித்திருந்தது. இத்தகு அறி விப்பு அதன் 1996 மற்றும் 1998 தேர்தல் அறிக்கைகளில் மறுபதிப்பு செய்யப்பட வில்லை என்றபோதிலும், இன்றைய அரசியலமைப்பு முறையை மாற்றி அமைக்க வேண்டும் என்கிற அதன் அவாவில் எந்த மாற்றமும் கிடையாது.

ஆர்எஸ்எஸ் அமைப்பானது எப்போ துமே, தற்போதைய நாடாளுமன்ற ஜன நாயக அமைப்பை விட, ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு முறையையே விரும்புகிறது. ஏனெனில், அதன் மூலமாக இந்திய அரசியல மைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள மதச் சார்பற்ற ஜனநாயக குடியரசு என்னும் வடிவத்தை, தன்னுடைய குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்றி அமைத்திட வழிவகுக்கும் என்று அது நம்புகிறது.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது, அரசிய லமைப்புச் சட்டத்தில் உள்ள இப்போ தைய மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் வடிவமானது, ‘‘இந்து அல்ல’’ (ருn ழiனேர) என்று தொடர்ந்து கூறிவரு கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவ ராக இருந்த ராஜேந்திர சிங் எழுதி 1993 ஜனவரி 14 அன்று வெளியிட்ட ஒரு கட்டு ரையில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து ஆர்எஸ்எஸ் நிலைபாட் டினைத் தெளிவுபடுத்தி இருக்கிறார். அதில் அவர், ‘‘இந்நாட்டின் அரசியல மைப்புச் சட்டத்தில், நம் நாட்டின் பிரத்யேக அம்சங்கள் பிரதிபலித்திட வேண்டும். ‘பாரதம் என்கிற இந்தியா’ என்கிற இடத்தில், ‘இந்துஸ்தான் என்கிற பாரதம்’ என்று நாம் கூறியிருக்க வேண்டும். அரசின் அதிகாரப்பூர்வமான ஆவணங் கள், ‘பன்முகக் கலாச்சாரம்’ என்று குறிப் பிடுகின்றன. ஆனால், நம்முடையது நிச்சயமாகப் பன்முகக் கலாச்சாரம் கிடையாது. கலாச்சாரம் என்பது உடை உடுத்துவதோ, மொழிகளைப் பேசுவதோ அல்ல. அடிப்படையில் நம்முடைய நாடு தனித்தன்மை வாய்ந்த கலாச்சார ஒருமை (ரniளூரந உரடவரசயட டிநேநேளள)யைக் கொண்டுள்ளது. எந்த நாடும் அது ஒரு நாடாக நீடித்திருக்க வேண்டுமானால் அது பல்வேறு அடுக்குகளாக இருந்திடக் கூடாது. இவை அனைத்தும் அரசியல மைப்புச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை என்பதைக் காட்டுகின்றன. இந்நாட்டின் பண்புகள் மற்றும் மேதைமைக்கு (நவாடிள யனே பநnரைள)ப் பொருந்தக் கூடிய விதத்தில் ஓர் அரசியலமைப்புச் சட்டம் எதிர்காலத் தில் உருவாக்கப்பட வேண்டும்’’ என்று எழுதியிருந்தார். இவ்வாறு இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையில் உள்ள ஒருமுகத்தன்மையை மறுதலித்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் பண்புகள் மற்றும் மேதைமைக்குப் பொருந்தக் கூடிய விதத்தில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாகும்.

ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு முறையானது, அனைத்து அதிகாரங்களையும் ஒருவ ரின் கீழ் கொண்டுவருகிறது. அவர், நாடா ளுமன்றத்திற்குப் பதில் சொல்லக் கடப் பாடு இல்லாத நபர்களிடம் நாட்டை ஆளும் பொறுப்புகளை ஒப்படைக்கிறார். இத்தகைய முறையானது, ஆர்எஸ்எஸ் குறிக்கோளுக்கு வசதி செய்து தருகிறது. நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நீண்ட நெடிய விவாதங்களுக்குப் பின்பே, அரசியல் நிர்ணய சபையானது, நாடாளு மன்ற அமைப்பு முறையைத் தேர்ந்தெ டுத்தது. ஏனெனில், இதன் மூலம்தான் நாட்டின் மதச்சார்பற்ற அடித்தளத்திற் கும், இந்திய அரசியலமைப்பு முறையின் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் சேவை செய்திட முடியும் என்றும், அதே சமயத் தில், இந்திய சமூகத்தின் வேற்றுமைப் பன்முகத் தன்மைகளுக்கிடையிலான ஒருமுகத்தன்மையையும் பேணி வளர்த்திட முடியும் என்றும் கருதியது.

அத்வானி, அமெரிக்க பாணி, ஜனாதி பதி அமைப்பு முறை நம்நாட்டிற்கும் தேவை என்று சொல்வதன் மூலம், நம்முடைய இன்றைய நாடாளுமன்ற ஜன நாயக அமைப்பு முறையை, தங்களுடைய ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக விரும்பும் நிகழ்ச்சி நிரலை அமல்படுத்தக் கூடிய வகையில் மாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இப்போது 2009இல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங் கம் வகித்த கட்சிகள் அனைத்தும், பாஜ கவை கழட்டிவிட்டதை அடுத்து, பாஜக-வானது மீண்டும் அதே பல்லவியை - அதாவது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைக்கு மாற்றாக, அதனை சீர்குலையச் செய்து ஆர்எஸ்எஸ் விரும்பும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கும் அமைப்பு முறையைக் கொண்டு வர விழைகிறது.

தேர்தல்கள் நெருங்கி வந்துகொண் டிருக்கக்கூடிய நிலையில், பாஜக-வானது மதவெறியைக் கூர்மைப்படுத் தும் தன்னுடைய அரசியல் ஆதாயத்தை, மக்களிடம் செல்வாக்கு பெறுவதற்காக மீண்டும் கட்டிக்கொண்டிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபித் தொகு தியில், வருண் காந்தி கக்கிய மதவெறி விஷப்பிரச்சாரத்தை ஆதரித்து நிற்பது, கர்நாடக மாநிலத்தில் இளம் ஜோடி களிடையே அத்துமீறி நடந்து கொண்டி ருப்பது போன்ற நடவடிக்கைகள், அரசி யல் ஆதாயம் பெறுவதற்காக மதவெறிப் பிரச்சாரத்தைப் பரப்பிடும் முயற்சிக ளுக்குச் சான்றாகும்.

நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு என்னும் வடி வத்தைச் சீர்குலைத்திட முயலும் இத் தகைய மதவெறி சக்திகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவை, அதாவது பாரதத்தைக் காப்பதற்காக, தோற்கடிக்க வேண்டியது அவசியமாகும்.

-தமிழில்: ச. வீரமணி

மாற்றத்திற்கு இதுவே சரியான நேரம்!

-பிரபாத் பட்நாயக்


(நவீன தாராளவாதம் தோற்றுப் போய் பின்வாங்கிச் செல்லும் இந்த நேரத்தில், அதை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, ஒரு மாற்று வளர்ச்சிப் பாதையில் தேசம் செல்வதற்கு, 2009 நாடாளுமன்றத் தேர் தல் ஒரு சரியான வாய்ப்பாகும் என்று பிரபாத் பட்நாயக் கூறுகிறார். பிரண்ட் லைன் (10.4.2009) இதழில் பிரபாத் பட் நாயக் எழுதியுள்ள கட்டுரையின் சாராம்சம் இங்கு தரப்பட்டுள்ளது)

நவீன தாராளவாதம் இந்தியாவில் இன் னும் முழுமையாக வெற்றியடைந்து விட வில்லை. இன்றைக்கும், நாட்டுடைமையாக் கப்பட்ட வங்கிகளும், கேந்திரமான பொதுத் துறைத் தொழில்களும் தனியார்மயமாக்கப்பட் டுவிடவில்லை. பென்சன் நிதி ஊகமூல தனத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட வில்லை. இந்தியக் கரன்சியும், முழு மாற் றுக்கு உட்படுத்தப்படவில்லை. அந்நியச் செலாவணி கையிருப்பு தவிர, இந்திய நிதித் துறைக்கு பெருமளவில் அந்நிய நிதிச் சொத் துக்கள் எதுவுமில்லை. பொதுத்துறையை ஒழிப்பதும், உலக நிதி அமைப்புடன் இறுக் கமாக இணைப்பதும், ஒன்றுக்கொன்று தொடர்புடையது மட்டுமல்லாமல், ஒன்றை யொன்று வலுப்படுத்துவதுமாகும். நவீன தாராளவாதத்தின் அடிப்படையான இந்த இரண்டு அம்சங்களும் கட்டுப்படுத்தப்பட்டி ருக்கின்றன. நிதித்துறை தொழிற்சங்கங் களும், இடதுசாரிக் கட்சிகளும் இதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதன் காரணமாகத் தான் இது சாத்தியமானது. எனவே, நவீன தாராளவாதம் இதில் பாதி வெற்றியைத்தான் அடைய முடிந்தது. ஆனால், இந்திய சமூகத் திற்குள் நிலவும் இடைவெளியை மேலும் பெரிதாக்குவதற்கும், நவீன இந்திய சமூகத் தின் அஸ்திவாரத்தை அசைத்துப் பார்ப்பதற் கும் இந்தப் பாதி வெற்றியே போதுமானதாக இருக்கிறது.

சமூக ஒப்பந்தம்

சாதிகள், வர்க்கங்கள், பாலினம் மற்றும் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகி, அதனால் பெருமளவு பிளவுபட்டிருந்த கோடிக்கணக்கான மக்கள் ஒரு நவீன இந்திய சமூகமாக மாறியது வரலாற்றில் ஒரு மிகப்பெரிய அற்புதமாகும். விடுதலைப் போராட்டக் காலத்தில், குறிப்பாக, 1931 கராச்சி காங்கிரஸ் தீர்மானம் அதற்கு வழி கோலியது. உள்ளடக்கத்தில் ஒரு “சமூக ஒப்பந்தமாக”க் கருதப்பட்ட அதன் அம்சங் கள் சுதந்திர இந்தியாவின் அரசியல் சாச னத்தில் இடம் பெற்றன. அனைவருக்கும் வாக்குரிமை, மதச்சார்பின்மை, சிவில் உரி மைகள், சாதி மற்றும் பாலின அடிப்படை யிலான ஒடுக்குமுறைகள் ஒழிப்பு என்ற சமத் துவ சமுதாயத்தை உருவாக்குவது என்பதே அந்த அம்சங்கள். ஆனால், இன்று நிலைமை என்ன? ஒருபுறம், உலகத்தின் மிகப்பெரும் செல்வந்தர்களாக இந்தியர்கள், மறுபுறம் ஆயிரக்கணக்கான இந்திய விவசாயிகளின் தற்கொலை, அப்படியெனில், அந்த சமூக ஒப் பந்தத்தினை ஒழித்துக்கட்டும் வேலை தானே இது? மட்டுமல்லாமல், நவீன இந்திய தேசத்தின் அஸ்திவாரத்தையே அது அபா யத்துக்கு உள்ளாக்கியிருக்கிறதே?

விவசாய நெருக்கடி

விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியா ளர்களுக்கு ஆதரவான அரசின் தலையீட் டினை ஒழித்தது நவீன தாராளவாதமே. விவ சாய மானியங்களை வெட்டியதன் விளை வாக, வேளாண் இடுபொருள் செலவு அதிக ரித்தது. சமூக வங்கிக் கலாச்சாரம் மாறிப் போய், விவசாயிகளுக்கு நிறுவனக் கடன்கள் மறுக்கப்பட்ட நிலையில், அவர்கள் கொள்ளை வட்டிக்காரர்கள் தயவில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாய விரிவாக்கப் பணி களிலிருந்து அரசு வெளியேறி விட்டதால், விவசாயிகள் பன்னாட்டுக் கம்பெனிகளை நம்பி நிற்கும் நிலை ஏற்பட்டது. வர்த்தகத் தாராள மயம், இறக்குமதிச் சந்தையில் செயற்கையாக குறைத்து விற்கப்பட்ட தானிய விலைகளு டன் போட்டி போட முடியாத துயரத்திற்கு இந்திய விவசாயிகளை உள்ளாக்கியது. உள்நாட்டுக் கொள்முதல் தொடர்ந்து குறைக்கப்பட்ட நிலையில், விவசாய விளை பொருள் ஆணை யம் மூலம் கிடைத்து வந்த குறைந்தபட்ச பாது காப்பும் கூட பறிபோனது. கிராமப்புறங்களில் அரசின் பொதுச் செலவினங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டதன் காரணமாக, கிராமப்புற மக் களின் வாங்கும் சக்தியும் பெருமளவு குறைந் தது. இதன் காரணமாக விவசாயத்துறையில் தேக்கமும், உணவு உற்பத்தியில் வீழ்ச்சியும் ஏற்பட்டது. மறுபுறத்தில், தனிநபர் சராசரி நுகர்வும் சரிந்தது. மலிவான இறக்குமதி ஒருபுறமும், உற்பத்திச் செலவு உயர்வு மறு புறமும் என்ற நிலையில் விவசாயிகள் வறு மைக்கு ஆளாயினர். குறைந்தபட்சக் கூலி யை விட அவர்களது வருமானம் குறைவாகிப் போனது. சிறு உற்பத்தியாளர்களின் நிலை யும் இதுவே. சீர்திருத்தங்கள் ஏற்கெனவே இவர்களின் வாழ்க்கையைப் பாழாக்கியிருக் கிறதென்றால், இன்றைய நெருக்கடி, நிலை மையை மேலும் மோசமாக்கியிருக்கிறது.

அரசின் தலையீடு தேவை!

முதலாளித்துவத்தின் தாக்குதல்களிலி ருந்து விவசாயிகளையும், சிறு உற்பத்தி யாளர்களையும் காப்பாற்ற வேண்டுமென் றால், நம்போன்ற சமூகங்களில் அரசின் தலையீடு மிகவும் அவசியம். ஒருபுறம் சிறு உற்பத்தித் தொழில்கள் மறைந்து, மறுபுறம் முதலாளித்துவம் விரிவடையும் காலத்தில் இது போன்ற சிரமங்கள் தோன்றுகிறதோ என்று கூட சிலர் நினைக்கக் கூடும். எதார்த் தத்தில் என்ன நடக்கிறது என்றால், விவசாய மும், சிறு தொழில்களும் அழிவதால் அந்தத் துறையில் வேலைகள் பறிபோகின்றன; மறு புறம், வளர்ந்து வரும் முதலாளித்துவம் உரு வாக்கும் புதிய வேலைகள், பறிபோன வேலைகளுக்கு ஈடுகட்டும் இணையான எண்ணிக்கையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால், முதலாளித்துவத் துறை வளர்ச்சி அதிகமாக அதிகமாக, வேலை வாய்ப்பு குறைவதும், வறுமை பெருகுவதும் தவிர்க்க இயலாதது.

சிறு தொழில்கள் முதலாளித்துவ வளர்ச் சியினால் அழியாமல் இருக்க வேண்டுமென் றால், அரசு தலையிட வேண்டும். அது பெரிய தொழில்களிலும், சிறிய தொழில்களிலும் உழைக்கும் மக்களின் வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக தலையிட வேண் டும். அதற்காக பெருந்தொகையினைச் செல வழிக்க வேண்டும். ஆனால், இதையெல்லாம் ஒரு நவீன தாராளவாத அரசு செய்யாது. அதற்கு நேரெதிராகவே செயல்படும். ஏனெ னில், இது அரசுத் தலையீட்டுக் கொள்கை, நவீன தாராளவாதக் கொள்கை என எதிரெதி ரான இரு கொள்கைகள் சம்பந்தப்பட்ட விஷ யம் மட்டுமல்ல. அரசின் குணாம்சம் சம் பந்தப்பட்ட விஷயம். ஜவகர்லால் நேருவின் காலத்தில் இருந்ததும் முதலாளித்துவ சார்பு அரசுதான். முதலாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தாலும், அது வர்க்கங் களுக்கு இடையிலான பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு காணும் அரசாக இருந்தது. எனவே, அது சிறு உற்பத்தியாளர்களை பாது காப்பதையும் தனது கடமையாக ஏற்றுக் கொண்டது. ஆனால், இன்றைய அரசு நவீன தாராளவாத அரசாக மாறிவிட்டதால் அதைச் செய்யாது. நிதி உலகமயமாக்கல் பின் னணியில், உலகம் முழுவதுமுள்ள முதலா ளித்துவ அரசுகள் மாறியுள்ளன. அதன் ஒரு பகுதிதான் இந்திய அரசின் குணமாற்றமும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தீர்வு என்ன?

மக்களின், குறிப்பாக, விவசாயத்திலும், சிறுதொழில்களிலும் ஈடுபட்டுள்ள மக்களின் வாங்கும் சக்தியை பெருக்குவதன் மூலம் தான் இன்றைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். அதற்கான திட்டங்களை முன்வைக் கும்போது கூட இன்றைய அரசு, அரசு - தனி யார் கூட்டுப் பங்கேற்பு எனக் கூறுகிறது. கண்டிப்பாக, இதில் தனியார் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்யப் போவதில்லை. அப்படியானால், இந்தத் தீர்வில் கூட முத லாளிகள் பயனடைய வேண்டும் என்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடி யும்? இந்த முன்மொழிவு இரண்டு வகையில் ஜனநாயக விரோதமானது. எடுத்துக்காட்டாக, கட்டமைப்பு என்பது ஒரு பொதுவான பெயர். அதில் கிராமப்புற மக்கள் பயன்படுத்தும் சாலைகளும் அடங்கும்; ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் அடங்கும். தனியார் துறை எதற்கு முன்னுரிமை கொடுக்கும் எனத் தெரியாதா? இது ஒன்று. இரண்டாவதாக, இதில் ஈடுபடுத்தப்படும் பணம் ஏன் தனியார் கைகளுக்கு செல்ல வேண்டும்? அரசாங்கம் ஏன் நேரடியாக செலவழிக்கக் கூடாது? இவையே நாம் எழுப்பும் கேள்விகள்.

விவசாயிகளுக்கும், சிறு உற்பத்தியாளர் களுக்கும் பயனும் பாதுகாப்பும் அளிக்கும் வகையில், பெரியஅளவில் நிதி ஒதுக்கீடு செய்து மீட்டுயிர்ப்புத் திட்டங்களை உரு வாக்க வேண்டும். சுகாதாரம், கல்வி, தூய் மையான சுற்றுச் சூழல், குடிநீர், சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட கிராமப்புற கட்ட மைப்பு, விவசாய மேம்பாடு, உணவுப் பாது காப்பு, விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தி யாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு ஆதரவு விலை ஆகிய அனைத்தையும் அத்த கைய திட்டங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதையெல்லாம் செய்யும்போது, நமது நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறா மல் அதற்கு கடிவாளமிடுவதும் அவசியம்.

குழிதோண்டி புதைக்க வேண்டும்!

தாராளவாதத்திலிருந்து விடுபடுவது என்ற பெயரில், தற்காலிகமாக ஒரு மாற்றுப் பாதைக்குச் செல்வதில் பயனில்லை. விவ சாயிகளை மையப்படுத்திய விவசாயமும், அதன் அடிப்படையிலான வளர்ச்சியுமே தீர்வு எனும்போது அதற்கு இசைவான பொரு ளாதாரக்கொள்கைகளும் அவசியமாகிறது. அப்படியானால், நவீன தாராளவாதத்தை முற் றிலும் தோற்கடிக்க வேண்டும். சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தினையும் முறி யடிக்க வேண்டும். அதற்கு எதிராக நாம் நடத் திய போராட்டத்தின் விளைவாக, நவீன தாரா ளவாதம் பாதி அளவில்தான் வெற்றி பெற முடிந்தது. உலக அளவில் அது தோல்வி யைத் தழுவி பின்வாங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அதை மேலும் பின் னுக்குத் தள்ளி, குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அரசியல் சாசனம் உள்ளடக்கி யிருக்கும் சமூக ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய பகுதியான ஜனநாயகத் தேர்தல்கள் அதற்கு இன்று மிகப்பெரும் வாய்ப்பாக அமைந் துள்ளது. அதைப் பயன்படுத்த வேண்டியது அனைவரின் கடமையுமாகும்.

(கட்டுரை சுருக்கம் : இ.எம்.ஜோசப்)

இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கை - தமிழகத்தில் அறிமுகம்

(News: Special reporter - photos by Gavaskar) சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை வெளியிட்டு பேசிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் இப்படி குறிப்பிட்டார்.

" ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி அரசு க‌‌‌ல்‌வி, வேலைவா‌‌ய்‌ப்பு, பெ‌ண்களு‌க்கான இடஒது‌க்‌கீடு போ‌ன்ற அனை‌த்து துறைக‌ளிலு‌ம் கொடு‌த்த வா‌க்குறு‌தியை ‌நிறைவே‌ற்ற‌வி‌ல்லை. எனவேதா‌ன் நா‌‌ங்க‌ள் 9 க‌ட்‌சிக‌ள் ஒ‌ன்‌றிணை‌ந்து 3வது அ‌ணியை உருவா‌க்‌கியு‌ள்ளோ‌ம்.

த‌மிழக‌த்‌தி‌ல் அ.‌தி.மு.க, பா.ம.க போ‌ன்ற க‌ட்‌சிக‌ள் எ‌ங்களு‌ட‌ன் இணை‌ந்து‌‌ள்ளன. இது எ‌ங்க‌ள் ந‌ம்‌பி‌க்கையை மேலு‌ம் அ‌திக‌ப்படு‌த்‌தியு‌ள்ளது. இ‌ந்‌தியா‌வி‌ல் இதுவரை கா‌‌‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க ஆ‌கிய இரு க‌ட்‌சிக‌ள் ம‌ட்டுமே இரு‌ந்தது. ஆனா‌ல் த‌ற்போது வலுவான 3வது அ‌ணி உருவ‌ா‌கியு‌ள்ளது உ‌த்தர‌‌பிரதேச‌த்‌தி‌ல் கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க.வை தோ‌ற்கடி‌க்க பகுஜ‌ன் சமா‌ஜ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் மாயாவ‌தி ‌தீ‌விர நடவடி‌க்கை எடு‌த்து வரு‌கிறா‌ர்.

தே‌‌சிய அள‌விலு‌ம் அ‌ந்த க‌‌ட்‌சிகளை தோ‌ற்கடி‌‌ப்பதி‌ல் மாயாவ‌தி மு‌க்‌கிய ப‌ங்கா‌ற்றுவா‌ர். எ‌ங்களது 3வது அ‌ணி‌யி‌ல் த‌‌ற்போது 9 க‌ட்‌சிக‌‌ள் உ‌ள்ளன. இது 15 க‌ட்‌சிக‌ள் வரை அ‌திக‌ரி‌க்கு‌ம் எ‌ன்று ந‌ம்பு‌கிறோ‌ம். எ‌ங்களது 3வது அ‌ணி‌யி‌‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள ‌க‌‌ட்‌சி‌க‌ள் வெ‌‌வ்வேறான கொ‌ள்கைக‌ள் கொ‌‌ண்டிரு‌ந்த போ‌திலு‌ம் கா‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க.வு‌க்கு மா‌ற்றாக ஓ‌ர் மா‌ற்று அ‌ணி அமைய வே‌ண்டு‌ம் எ‌ன்ப‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ந‌ா‌ங்க‌ள் ஒ‌ன்‌றிணை‌ந்து‌ள்ளோ‌ம்.

இந்த அணி வரும் தேர்தலில் மகத்தான வெற்றி படைக்கும். அவரின் உறுதியைக் கண்டு அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் ஆச்சரியத்தில் அதிசயித்தனர்.

இன்றைய நிலையில் எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவிருக்கு இடதுசாரிகளுக்கு உற்சாகம் கூடியுள்ளது. ஊடகங்கள் எல்லாம் "தேர்தல் முடிவுகள் குழப்பமானதாக இருக்கும்" என்று கூறிவருகின்றன. ஆனால் நடப்பது என்ன? இடதுசாரிகள் சொல்லுகிற மாற்று அணியின் பக்கம் மக்கள் உறுதியாக நிற்ப்பார்கள் என்பதைத்தான்.

வேலை இழந்து, சொந்த வாழ்க்கைக்கான அச்சாணியை தொலைத்து நிற்கும் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பக்கம் உறுதியாக நிற்பவர்கள் இடதுசாரிகள். கடந்து நான்கரை ஆண்டுகளில் அவர்கள் அரசிற்கு ஆதரவளித்த போது, மக்களுக்கான கொள்கைகளை வலியுறுத்தினார்கள், அவர்களால் நிறைய சாதிக்க முடிந்திருக்கிறது. இப்போதைய தேர்தல் அறிக்கையை படித்தால் இது புலப்படுகிறது.

இதுவரை நாடாளுமன்றத்தில் "வலியுறுத்துவோம்", "போராடுவோம்" என்று அறிக்கை வெளியிட்டு வந்த இடதுசாரிகள், நாங்கள் கோரிக்கைகளை "நிறைவேற்றுவோம்" என்று இப்போதைய அறிக்கையில் சொல்லியிருக்கிறார்கள். ஆம், அவர்கள் வரப்போகிற ஆட்சியில் பங்கேற்ப்பார்கள் என்பதும் இந்த அறிக்கையின் மூலம் வெளிப்படுகிறது.

ஒருவேளை அப்படி முக்கிய மாற்றம் நடைபெற்றால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்? எந்த விசயங்களை அவர்கள் மையப்படுத்துவார்கள்? என்பதற்கான பதில்கள் இந்த அறிக்கையில் அடங்கியிருக்கிறது. அதுபோக ஒவ்வொரு துறையினையும் மையப்படுத்தியும் தனித்தனி கையடக்க பிரசுரங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

அவை நமது தளத்திலேயே ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. இந்த அறிக்கை மற்றும் பிரசுரங்களை படிக்கும் எவரும் இடதுசாரிகளின் அகண்ட பார்வையைக் கண்டு, அவர்களின் தீர்க்கமான அணுகுமுறை குறித்து அதிசயிக்காமல் இருக்க முடியாது.

இனி வரப்போகிற தேர்தலில் வெற்றி நிச்சயம் . . ஆனால் முதலாளித்துவ ஊடகங்களின் பொய் பித்தலாட்டங்களை மீறி, மக்கள் நல கொள்கைகளை மக்களின் மத்தியில் வலுவாக எடுத்துச் செல்ல வேண்டும்.

ஆம் இவர்களின் கொள்கைகள் மக்களை அடைந்து, அவற்றை ஓட்டாக மாற்றவேண்டிய கடமை நம் ஒவொருவரின் கைகளிலும் இருக்கிறது.


அறிக்கை விரைவில் நமது தளத்தில் வெளியிடப்படும் - காத்திருங்கள் ... !!

அத்வானியின் ஐ.டி. வாக்குறுதியும் என்.டி.ஏ-வின் கொள்கையும்

-எஸ்.ஏ. மாணிக்கம்

  • · கிராமப்புறங்களில் ஐடி துறையில் ஒருகோடியே 20 லட்சம் வேலை வாய்ப்பு.
  • · ஒருகோடி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் விலையில் இண்டர் நெட் இணைப்புடன் லேப் டாப்கள். 
  • · அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இண்டர்நெட் சேவையுடன் செயல் படுத்தப்படும். 

மேற்கண்டவை பில்கேட்ஸ்ஸின் அறிவிப்பல்ல. பாஜகவின் 30 பக்க தகவல் தொழில்நுட்ப (ஐடி) கொள்கை அறிக்கையில் உள்ளவை. இன்னும் இது போன்ற வாக்குறுதி பட்டியல் நீளுகின்றன. 

அத்வானி தேர்தலுக்கு புதியவர் அல்ல. அவருடைய பாஜகவும் புதிய கட் சியல்ல. அவருடைய கூட்டணியும் புதி யது அல்ல. இவர்கள் ஏற்கனவே ஆறு ஆண்டு காலம் மத்திய அரசில் இருந்த வர்கள் என்பதை (மக்களை) மறந்து விட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். 

அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வசதி செய்வது இருக்கட்டும், இவர்கள் ஆட்சியில் கல்வித்துறை எப்படி இருந் தது என்பதை அத்வானியின் சகாக்க ளுக்கும், நாட்டு மக்களுக்கும் மீண்டும் நினைவூட்டுவது நல்லது. 

  • · முரளி மனோகர் ஜோசியை அமைச்ச ராக கொண்ட மனித வள மேம்பாட்டு அமைச்சகம் 

கல்வித்துறையை காவி மயமாக்கும் திருப்பணியைத் தான் ஐந்தாண்டு காலம் செய்து வந்தது. 

  • · மூடநம்பிக்கைக்கு அடிகோலும் ஜோதிடத்தை பல்கலைக்கழக பாட மாக்க முயற்சித்தார்கள் என்பதை மறந்து விட முடியுமா? 

  • · தேசத்தின் வரலாற்றையே திருத்தி எழுதிய கூட்டம். 

இன்றைய அத்வானியின் ஐடி யுகப் பேச்சு, இளைஞர்களின் ஓட்டுக்களை கவரத்தானே தவிர வேறு எதுவும் இல்லை. காவி மயமாக்கும் அவர்களின் திருப்பணியே மீண்டும் தொடரும். 

ஒரு கோடி மாணவர்களுக்கு லேப் டாப். பார்த்தால் பிரமாதமாக தோன்றும். ஆனால் இவர்களின் விஷமத்தனமான கொள்கைகள் ஏழை மாணவர்களின் கல்வியை சூறையாடுவதே. 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் அரசின் புள்ளி விபரப்படி 6 முதல் 14 வயதுடைய குழந்தைகளில் பள்ளியை விட்டு வெளி யேறியவர்கள் எண்ணிக்கை 4.7 கோடி யிலிருந்து 5 கோடி வரை இருக்கும் என மதிப்பிட்டது. ஆனால் பாஜகவோ தங் களது ஆட்சிக் காலத்தில் 16ஆயிரம் கோடி செலவு செய்து 3 கோடி குழந்தை களை பள்ளியில் மீண்டும் சேர்க்க செய் தோம் என்றார்கள். அவர்கள் சொல்லும் படியே இருந்திருந்தாலும் மீதியுள்ள இரண்டு கோடி குழந்தைகளின் கதி.... 

இது ஒரு பக்கம். மறுபுறம் 16ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ததாக 2004 தேர்தலின்போது இதுபோன்ற தம்பட்டம் அடித்தார். மத்திய அரசு நியமித்த தபஸ் மஜூம்தார் கமிட்டி அனைத்து இந்திய குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியளிக் கும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு பத்தாண்டுகளில் ஒரு லட்சத்து 36ஆயி ரத்து 922 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பிட்டது. குறிப்பாக பாஜகவின் ஆட் சிக்காலத்தில் ரூ.47ஆயிரத்து 100 கோடி இதற்காக செலவிட்டிருக்க வேண்டும். அவர்கள் தெரிவித்த விளம்பரப்படி ஒதுக் கியது 16ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே. மொத்த தொகையில் 34 சதவீதம் மட்டுமே. ஆனால் உண்மையில் எஸ்எஸ்ஏ திட் டத்திற்கான மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியது 5ஆயிரத்து 810 கோடி மட்டுமே. உண்மை இவ்வாறு இருக்க 2004 தேர்தலி லேயே நாட்டு மக்களை முட்டாளாக்க பொய் யான விபரங்களை அளித்தவர்கள் என் பதை மறந்து விட வேண்டாம். 

உயர் கல்விக்கும் வேட்டு 

குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியை மறுத்தவர்கள், உயர் கல்வியை விட்டு வைத்திருப்பார்களா? 1998-99 முதல் 2003 -04 வரையிலான காலத்தில் மிகக் குறைவான தொகையினையே உயர் கல் விக்கு ஒதுக்கினார்கள். தனியார் கல்லூ ரிகள் புற்றீசல் போல பல்கி பெருகியதும் இவர்கள் ஆட்சியில் தான். தனியார் பொறியியற் கல்லுாரிகளின் எண்ணிக் கை 1998-99ல் 571 ஆக இருந்தது 2003-04ல் 1059 ஆக உயர்ந்தது. அசேமயம் அரசுபொறியியற் கல்லூரிகளின் எண் ணிக்கை 161லிருந்து 175ஆக மட்டுமே உயர்ந்திருந்தது. அதாவது அரசு கல்லூரி கள் 8.7 சதவீதமும், தனியார் கல்லுாரிகள் 85.5 சதவீதமாகவும் உயர்ந்தது. இது மட்டுமல்ல பல்கலைக்கழகங்களுக்கு அரசு வழங்கும் மானியத்தை படிப்படி யாக வெட்ட வேண்டும் என்று கொள்கை வகுத்தவர்களும் அத்வானியின் கூட்டம் தான். 

ஆறு ஆண்டு காலம் கல்வித்துறை யை காவிமயமாக்கியும், தனியார்மயப்படுத் தியும், நிதிகளை வெட்டி ஏழைக்குழந் தைகளுக்கு கல்வியை மறுத்தவர்கள். இதற்காகவே இந்திய மக்கள் 2004ல் பாடம் புகட்டினார்கள். இறந்த காலத்தை மறந்து மீண்டும் அத்வானியை நாற் காலியில் அமர்த்துவார்கள் என்று பகல் கனவு காண்கிறார்கள்

பாஜக-காங். சுருதி இறக்கம்

கூட்டணி ஆட்சி நடத்திய அனுபவத்தால் மாற்றத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சியும், அத்வானியைப் பிர தமராக ஏற்றுக்கொண்டால் யாருடனும் சேர்ந்து கொள்வோம் என்று பாஜகவும் கூறி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்று இல்லை என்ற இவர்கள், தங்கள் சுருதியை மாற்றி யுள்ளனர். இவர்களின் கூட்டாளிகள் கொஞ்சம், கொஞ்சமாக கழன்று கொண்டு விட்டதால்தான் மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர்.

காங்கிரசுக்கு, திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் தான் துணையாக உள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு பெரிய மாநிலங்களில் கூட் டாளிகளாக இருந்த சமாஜ்வாதி மற்றும் ராஷ் டிரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் காங் கிரஸ் தனிமரமாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத் தவரை, பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளதால், தென் இந்தியா விலும் காங்கிரசுக்கு இழப்புதான் மிஞ்சும்.

பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது 26 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட் டணி இருந்தது. தற்போது ஆறு கட்சிகள்தான் பாஜகவுடன் இணைந்து நிற்கின்றன. அதிலும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் முரண்பட்டு நிற்கிறது. அண்மையில் வருண் காந்தியின் வன்முறையைத் தூண்டும் பேச் சுக்கு நிதிஷ் குமார் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

பெரிய கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தை நீட்டிக்கொண்டே செல்ல விரும்புகின்றன. அத்வானியோ ஒருபடி மேலே போய் மன்மோகன்சிங்குடன் நேரடியாக விவா திக்கத் தயார் என்று அறைகூவல் விடுக்கிறார். தங்களின் ஆட்சியின் போது நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கு மதிப்பளிக்காத இரு கட்சிகளுமே இவ்வாறு பேசிக்கொள்வது ஆச்சரியமளிக்க வில்லை. ஆனாலும் இருவரும் பேசிக்கொள் வோம் என்ற அத்வானியின் கூற்று மாற்று அணியின் மீதான அச்சத்தையே காட்டுகிறது.

இந்த அணிகள் தகர்ந்துவரும் வேளையில், அதற்கு மாறாக, மூன்றாவது அணி என்று பொது வாக அழைக்கப்படும் மாற்று அணியின் பலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத் தட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த அணி யைச் சேர்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகி வருகிறது. இது மூன்றாவதாகத் தான் வரும் என்றெல்லாம் கிண்டலாகப் பேசிய வர்கள், இந்த அணி வெற்றி பெற்றால் யாரைப் பிர தமராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற விவாதத்திற்குத் தாவியுள்ளனர். மாற்று அணி வெற்றிபெறப்போவ தை இத்தகைய விவாதங்கள் உறுதி செய்கின்றன.

தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, உ.பி., கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான இடங்களையும், மற்ற மாநிலங் களில் கணிசமான இடங்களையும் கைப்பற்றப் போகும் மாற்று அணியை மூன்றாவது அணி என்று அழைப்பதை விட முதலாவது அணி என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக் கும். பெரிய மாநிலங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை கரணங்கள் போட்டாலும் பெரும்பான்மையை எட்ட முடியாது என்பதே தற்போதைய நிலை மையாகும்

காங். தேர்தல் அறிக்கை-காற்றில் கரையும் கற்பூரம்

-மதுக்கூர் இராமலிங்கம்

“துன்பத்தை கட்டி சுமக்கத் துணிந் தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே” 

என்பது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தங்கப்பதுமை படத்திற்காக எழுதிய பாடலில் வரும் வரிகளாகும். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப் பதை பார்க்கும்போது மக்கள் கவிஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

இந்தியாவில் நடப்பது அதிபர் ஆட்சி முறை அல்ல. எனவே தனிஒரு மனிதரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தவேண்டிய அவசியமும் இல்லை. பிரதமர் யார் என் பது தேர்தல் முடிவுக்குப் பிறகு முடிவு செய்ய வேண்டிய விஷயம். ஆனால் ஓராண்டுக்கு முன்னாலேயே அத்வானி தான் எங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாஜக அறிவித்தது. அத்வானியும் அன்று துவங்கி பிரதமர் போலவே தனக்குத் தானே பேசத்துவங்கிவிட்டார். ஆனால் அந்த கட்சிக்குள்ளேயே பைரோன் சிங் ஷெகாவத், நரேந்திர மோடி என அத்வா னிக்கு ஆப்பு வைக்கும்வகையில் உள் குத்து குத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியும் பாஜகவை பின்பற்றி, இதுவரை கிராமப் பஞ்சாயத்து வார்டு தேர்தலில் கூட நேரடி யாக போட்டியிடாத மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளர் என்று பட்டையைக் கட்டி களத்தில் இறக்கிவிட்டுள்ளது. 

அதிலும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, மன்மோகன் சிங்கால் மட்டுமே ஸ்திரத்தன்மையை தரமுடியும் என்று கூறியுள்ளார். அமெரிக்காவுடனான அடிமை சாசனத்தில் கையெழுத்திட ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசு முடிவெடுத்ததைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள், அரசுக்கு அளித்துவந்த ஆதர வை விலக்கிக்கொள்வதாக அறிவித்தன. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அரசைக் காப்பாற்றிக்கொள்ள மத்திய ஆட்சியாளர்கள் நடந்து கொண்ட விதம் கண்டு நாடே தலைகுனிந்தது. மக்கள வையின் மைய மண்டபத்தில் கொட்டப் பட்ட கரன்சி நோட்டுகளில் அச்சிடப்பட் டிருந்த காந்தி படம்கூட கண்ணீர் சிந்தியது. இத்தகைய ஸ்திரத்தன்மையை தந்தவர் தான் மன்மோகன் சிங். இதுதான் காங்கி ரஸ் கட்சி தரப்போகும் ஸ்திரத்தன்மை என்றால் விழிப்போடு இருக்க வேண்டி யது நாட்டு மக்கள்தான்.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக் கையில் வழக்கம் போலவே ஏராளமான வாக்குறுதிகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தல் துவங்கி 2009 தேர்தல்வரை காங்கிரஸ் கட்சி இந்திய மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை யும், தேர்தல் அறிக்கைகளையும் ஒருசேர அடுக்கி வைத்தால் இமயமலையைவிட உயரமான பெரும் பொய்மலையாக அது உயர்ந்து நிற்கும். 

வறுமையே வெளியேறு என்றார்கள், எருமைமாடு கூட அதைக் கண்டுகொள் ளவில்லை. வேலையின்மையே வெளியே போ என்றார்கள், இதன் பொருள் வேலை யில் உள்ளவர்களை வெளியே அனுப்பு வதுதான் என்பது பிறகுதான் புரிந்தது. 

கடந்த 2004 மக்களவை தேர்த லின்போதும் காங்கிரஸ் கட்சி வண்டி வண்டியாக மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளித்தந்தது. அந்த வாக்குறுதிகளில் ஒன்று- குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை என்பது. இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை குடும்பங்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது என்பதை காங்கிரஸ் கட்சி அறிவிக்கத் தயாரா? மன்மோகன் சிங் குடும்பத்தில் ஒருவருக்கு பிரதமர் வேலை கிடைத்தது, ஒருசில குடும்பங்களுக்கு மந்திரி வேலை கிடைத்தது என்பது மட்டும்தான் உண் மை. மறுபுறத்தில் உலகப் பொருளாதார நெருக்கடியை தாராளமய பாதையிலேயே சென்று காங்கிரஸ் தலைமையிலான அரசு சமாளிக்க முயன்றதால் கோடிக் கணக்கான குடும்பங்கள் வேலையிழந்து வீதிக்கு வந்துள்ளன என்பதுதான் உறுத் தும் உண்மை.

ஆண்டுக்கு ஒருகோடி புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் காங் கிரஸ் கட்சி 2004 தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தது. கடந்த ஐந்தாண்டு களில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக் கப்படவில்லை என்பது மட்டுமின்றி இருந்த வேலைகளும் பறிக்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம் பாட்டுத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறி யது. ஆனால் மூன்று வயதுக்கும் கீழான குழந்தைகளில் 40 சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்தின்மையால் குறைவான எடையை கொண்டுள்ளனர் என்பது புள்ளி விவரம் கூறும் உண்மை. பாதுகாப் பான குடிநீர் வழங்குவதற்கு முன்னுரிமை என்று கடந்த தேர்தலில் காங்கிரஸ் கூறி யது ஆனால் 2 லட்சத்து 19 ஆயிரம் குடும் பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்ப தில்லை என்பதுதான் உண்மை.

காங்கிரஸ் கட்சி இப்போதைய தேர் தல் அறிக்கையில் கூறியுள்ள பல வாக் குறுதிகள் கடந்த தேர்தல் அறிக்கையி லிருந்து அப்படியே எடுத்தாளப்பட் டுள்ளன. அன்றைக்கு ஒரு பேச்சு இன் றைக்கு ஒரு பேச்சு என்பது எங்கள் அகரா தியில் இல்லை என்று வேண்டுமானால் காங்கிரஸ்காரர்கள் பீற்றிக்கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சி இப்போது வெளியிட் டுள்ள தேர்தல் அறிக்கையில் பெண்க ளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 33 சத வீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த தேர் தல் அறிக்கையில் கூறியபடி நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற அந்த கட்சி தலைமையிலான அரசு, எந்தவிதமான உருப்படியான நடவடிக்கையும் எடுக்க வில்லை. நாட்டில் பெண்களுக்கு 33 சத வீத இடஒதுக்கீடு வழங்க வக்கற்றவர்கள் தற்போது, வீட்டில் உள்ள பெண்களுக்கு அரசு வேலையில் 33 சதவீதம் வழங்கு வோம் என்று கொஞ்சம் கூட கூச்சமில் லாமல் வாக்குறுதி தருகின்றனர். ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்’ என்ற கிராமத்து பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது. 

நாட்டு நலனுக்கேற்ற சுயேட்சையான வெளியுறவுக்கொள்கை தொடரும் என் றும் தேர்தல் அறிக்கை கூறுகிறது. ஆனால் மன்மோகன் சிங் ஆட்சியில்தான் இந் தியாவின் சுயேட்சையான அயல்துறை கொள்கையை காலில் போட்டு மிதித்து அமெரிக்க வல்லரசின் இளைய கூட்டா ளியாக நமது இந்திய திருநாட்டை மாற் றும் வகையில் அணுசக்தி உடன்பாட் டில் கையெழுத்திடப்பட்டது. அமெரிக்கா வின் கேந்திர ராணுவ கூட்டாளி நாடு களில் ஒன்றாக இந்தியா அவமானகர மான முறையில் மாற்றப்பட்டது. இஸ் ரேல், பாலஸ்தீனத்தின் மீது கொடூரத் தாக் குதல் தொடுத்தபோதும் மத்திய அரசு மவு னம் சாதித்தது. அமெரிக்காவுக்கு கூஜா தூக்க ஈரானுக்கு எதிராக ஐ.நா. சபையில் செயல்பட்டதோடு ஈரானிலிருந்து பைப் லைன் மூலம் எரிவாயு கொண்டுவரும் திட்டத்தையும் கிடப்பில் போட்டது. 

இவர்களது ஆட்சியில்தான் உலகிற்கு உணவு படைக்கும் விவசாயிகள் வாழ வழியின்றி பல்வேறு மாநிலங்களில் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த நிலையில் தற்போதைய தேர்தல் அறிக் கை, விவசாயம் என்றாலே லாபம் இல் லாத தொழில் என்ற நிலை மாற்றப்பட்டு அனைவரும் விரும்பி ஏற்கும் தொழிலாக விவசாயம் மாற்றப்படும் என்று கூறப்பட் டுள்ளது. விவசாயிகளின் வீட்டிற்கே சென்று அரசு சார்பில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் எனப் படும் முன்பேர வர்த்தக மோசடி முறை யை கொண்டுவந்து விவசாயிகளின் வாழ்க்கையை தரிசாக்கியது இவர்கள் தான். இடதுசாரி கட்சிகளும் நாடாளு மன்ற நிலைக்குழுவும் கடுமையாக வற் புறுத்தியபோதும் அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விற்பனையிலும் முன்பேர வர்த்தகமுறையை ரத்து செய்ய மறுத்தவர்கள்தான் இவர்கள். இன் றைக்கு வீட்டுக்கே வந்து விளைபொரு ளை வாங்கிக்கொள்கிறோம் என்று சின்ன குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் காட்டுவது போல ஏமாற்ற முயல்கிறார்கள். வேண்டு மானால் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் அவர்களது வீட்டு வாசலுக்கு வந்து பிணத்தை எடுத்து அடக்கம் செய்கிறோம் என்று இவர்கள் வாக்குறுதி தரலாம்.

மத்திய அரசின் உணவுக்கிடங்குகளில் தேங்கி வீணாகும் உணவு தானியங்களை மாநிலங்களில் பொது விநியோக முறைக்கு தர மறுத்த காங்கிரஸ் அரசு, உணவு பாது காப்பு குறித்து பேசுவது வெட்கக்கேடா னது. மின்வாரியங்களை மூன்றாக பிரித்து தனியாருக்கு தர ஆணைமேல் ஆணை யாக வெளியிட்டு மாநிலங்களை மிரட்டும் இவர்கள், மின்கட்டணத்தை குறைப்பார் களாம். கேட்பவன் கேணையாக இருந் தால் கேழ்வரகில் நெய் வடியுமாம். இவர் கள் கூறுவதையெல்லாம் இந்திய மக்கள் நம்பி விடுவார்கள் என்ற நினைப்பு.

காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்க கூட்டணி ஆட்சிக்கா லத்தில் உருப்படியான ஒருசில வேலை கள் நடந்தன என்றால் அதற்கெல்லாம் முழுமுதல் காரணம் இடதுசாரி கட்சி களின் நிர்பந்தமே. மறுபுறத்தில் இந்திய மக்களுக்கு எதிரான அனைத்து நட வடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சியே பொறுப்பேற்றாக வேண்டும். 

பெரும்பாலான மாநிலங்களில் காங் கிரசை அதன் கூட்டாளிகளே கழற்றி விட்ட நிலையில் தேர்தல் அறிக்கை எனும் காகிதப்படகில் ஏறி தப்பித்துவிட லாம் என்று காங்கிரஸ் கட்சி நம்புகிறது. மக்களின் கோபாவேச அலையில் இந்த படகு கவிழ்வது நிச்சயம். அதைப்பிடித் துக் கொண்டு தொங்குபவர்களும் பரிதா பமான நிலையையே அடைவார்கள்

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு றுப்பினர் தோழர் சீதாராம் எச்சூரி rediff இணைய இதழுக்கு aலித்துள்ள பேட்டியின் சில பகுதிகள்.

மொழியாக்கம்: இரா சிந்தன்.

1 வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மையமான பிரச்சனைகளாக எவை இருக்கும்?

இந்தியாவின் பொருளாதார நிலை. எப்போதும் அதுவே பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆனாலும் உலக நெருக்கடி அதனை எதிர்பார்த்ததற்கு மேலாக அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனையாக மாற்றி விட்டது.

2 கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில நிதி நிலை அறிக்கைகளில் "ஊக்க தொகைகள்" (stimulus packages) அறிவிக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் இடதுசாரிகள் சொல்ல வருவது என்ன?

நாங்கள் சொல்ல வருவது: அரசு தனது உள்கட்டமைப்பில் அதிக நிதியை முதலீடு செய்ய வலியுறுத்துவதே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி. அரசு முதலீட்டில் ஒரு பெரிய உயர்வு இருக்க வேண்டும். இப்போது சில முன்னேற்றங்கள் உள்ளன ஆனால் அவை போதுமானதல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ள சுமார் 40,000 கோடி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே. இது தேவைக்கும் மிகக் குறைவான ஒதுக்கீடு. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஊக்கத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ள தொகை அந்த மாநிலங்களின் மொத்த உற்பத்தியில் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானது. அதாவட்டிது, நாங்கள் இதை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம், -- இதுதான் நாங்கள் சொல்லுகிற செய்தி. பெரிய நிறுவனங்களுக்கான காப்புத் தொகை (bail-out) ஒரு எல்லை வரைக்கும் ஒரு வேலை தேவையாக இருக்கலாம். ஆனால் அதில் பணம் மற்றும் பொருளாதாரம் பற்றிய கொள்கைகளின் நியாமான கலப்பு தேவைப்படுகிறது. பொது செலவுகளை அதிகரிப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதிலும் மற்றும் அதற்காக உள்நாட்டு தேவையை அதிகரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.


3 மற்ற வளரும் நாடுகள் எல்லாம் வீழ்ச்சியைப் பதிவு செய்யும்போது இந்தியா எழு சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக அரசு சொல்லுகிறதே!

இந்த ஏழு சதவீத வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும் என்றே நினைக்கிறேன். (வருங்காலத்தில்) இந்தியா 5.5 சதவீதம் வளர்சியையாவது பராமரிக்க முயல வேண்டும். ஆனால் நம்மால் ஏழு சதவீத வளர்ச்சியை எப்படி எட்ட முடிந்தது?. அதற்கு அவர்கள் தங்களின் எதிரிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

இடதுசாரிகள் நான்கு முக்கிய விசயங்களை துவக்கத்திலேயே தடுத்ததன் மூலம் இந்த நாட்டை முழுமையான அழிவிலிருந்து காத்திருக்கிறோம்.
முதலாவது, முழுமையான நானைய மாற்றிற்கு ரூபாயை உட்படுத்தியதில் இருந்தும். இரண்டாவது, இந்திய தனியார் வங்கிகளில் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் பங்குகளை உயர்த்துவதையும், பங்குகளின் அளவிற்கு ஏற்றார்போல வெளிநாட்டு இயக்குனர்களை அனுமதிக்க ஏற்றுக்கொள்ளும் வகையிலான அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் தடுத்தோம். ஒருவேளை அது நடந்திருந்தால் பல அந்நிய நாடுகள் வீழ்ச்சியைச் சந்தித்த போது, அவைகளோடு சேர்ந்து பெரும்பாலான இந்திய வங்கிகளும் வீதிக்கு வந்திருக்கும். மூன்றாவது, தொழிலாளிகளின் பென்சன் தொகையை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுத்தோம். மற்றும் இறுதியாக இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டோம். இந்த முயற்சிகள் இந்திய பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்துள்ளன.
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் பெருமை இந்திரா காந்தியையே சாரும் என்று அவர்கள் (காங்கிரஸ்) கூறுகிறார்கள். ஆனால், வங்கிகள் மற்றும் நிலக்கரி தாதுக்கள் தேசிய மயமாக்கப்பட்டதும், முடி மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதும் 1969 இல் நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்ச்சொன்ன எல்லாமும் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக இந்திரா காந்தி நிறுத்திய வி.வி.கிரி யை ஆதரிப்பதற்காக இடதுசாரிகள் வைத்த நிபந்தனைகள். காங்கிரசில் இண்டிகேட்-சிண்டிகேட் யுத்தம் நடந்துகொண்டிருந்த பொழுது இந்திரா காந்தி யின் அரசு சிறுபான்மை அரசாக இருந்தது, அப்போது இந்திரா அரசு நிலைத்திருக்க அவருக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போதுதான் மேற்ச்சொன்னவைகள் எல்லாம் நடைபெற்றன. எனவே வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டது எனில் அதுவும் இடதுசாரிகளால் நடந்தது.


4 கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே முக்கிய பாலமாக இருந்திருக்கிறீர்கள். காங்கிரசை கையாளுவதில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? தேர்தலுக்கு பிறகு ஒரு மீண்டும் ஒரு கூட்டணிக்கான தேவை ஏற்பட்டால் உங்களின் விருப்பம் என்னவாக இருக்கும்??

உங்கள கேள்வியின் இரண்டாம் பாகத்தைப் பொறுத்தமட்டில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டோம். எனது விருப்பம் இந்த போரில் காங்கிரஸ் அல்லாத, வகுப்பு வாதிகள் அல்லாத மாற்றினை வெற்றிகொள்வதே. எனவே போருக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றிய கேள்விக்கே இப்போது இடமில்லை.

முதல் கேள்வியை பொறுத்த அளவில், ஆம், நாங்கள் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசோடு இணைந்து செயல்பட்டோம். ஆனால் இந்த காலத்தில் முழுவதும் காங்கிரஸ் தனது புதிய-பொருளாதார சீர்திருத்தத்தை தொடர்வதற்கே விரும்பியது. நாங்கள் சில விசயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் போது, அவர்கள் தங்களின் திட்டத்தை பின் வாசல் வழியாக நிறைவேற்றிக்கொள்ள நினைத்தார்கள்.

உதாரணத்திற்கு சிறு வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு. இதனை நாம் ஒரு முறை அனுமதித்தால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் தங்கள் வேளையி இழப்பார்கள். எனவே வேலை வாய்ப்பை குறைக்கக்கூடிய அந்நிய நேரடி முதலீட்டை சிறு வணிகத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னோம். ஆனால் அரசு அதனை பின் வாசல் வழியாக் அனுமதிக்க முயற்சித்தது. முதலில் மொத்த வியாபாரத்தில் மட்டும் அனுமதிப்பதாக கூறினார்கள், பிறகு ஒரே நிறுவனத்தின் பொருட்களை விற்க அனுமதி என்றார்கள். பின்பு விளையாட்டு பொருட்கள விற்க அனுமதி தருவதாகக் கூறினார்கள். இவ்வாறு நேர்மையற்ற வழியில் அவர்கள் அந்நிய முதலீட்டை அனுமதித்தார்கள்.

நெருக்கடி

ப.கு.ராஜன்

முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் உள்ளார்ந்த முரண்பாட்டை விளக்கும் ஆங்கிலக் கதை ஒன்றுண்டு. வட இங்கிலாந்தின் ஒருபகுதி. மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கத்தை ஒட்டிய குடியிருப்பு. அங்கே ஒரு சுரங்கத் தொழிலாளியின் இல்லம். வட இங்கிலாந்திற்கே உரிய எலும்பை உறைய வைக்கும் கடுங்குளிர் காலத்தின் முன்னிரவு நேரம். கனப்படுப்பின் முன்னே தொழிலாளியின் குட்டி மகள் தன்தாயை ஒட்டி அமர்ந்திருப்பாள். கனப்படுப்பின் நெருப்பு அணையும் தருணம். தாய் தன் கையிலிருந்த கடைசி நிலக்கரித் துண்டை அடுப்பில் இடுவாள். அந்தக் குட்டிப்பெண்ணுக்கு குளிர் தாங்காது. அம்மா எனக்குக் குளிர் தாங்கவில்லை, இன்னும் கொஞ் சம் நிலக்கரி போட்டு நெருப்பைப் பெரிதாக்கு என்பாள். அம்மாவி டம் நிலக்கரி இல்லை. என்னிடம் நிலக்கரி இல்லையென்பாள். ஏன் என்பாள் மகள். வாங்குவதற்கு காசில்லை என்பாள் தாய். மகளின் வினாக்களும் தாயின் விடைகளும் தொடரும். ஏன் காசில்லை? அப்பா விற்கு வேலை போய்விட்டது, அதனால் சம்பளம் இல்லை. ஏன் வேலை போனது? அப்பாவின் கம்பெனியில் நிலக்கரியை வெட்டிக் குவித்துவிட்டார்கள். வாங்க ஆள் இல்லை, அதனால் வேலையில்லை. தந்தை நிலக்கரியை வெட்டிக் குவித்தக் காரணத்தால் மகளுக்கு நிலக்கரி இல்லை. சுரங்கத் தொழிலாளியின் இல்லத்தில் நிலக்கரி தேவை. ஆனால் சுரங்கத்தில் விலைபோகாமல் நிலக்கரி. ஏன் என்பாள் மகள். மகளின் வினாவுக்கு அந்த தாயிடம் விடை இல்லை. ஆனால் மார்க்ஸிடம் விடையிருந்தது என்பர்.

மார்க்ஸியம் உதயமான காலத்தில், மேற்கத்திய அறிவுலகு அதனை தமது ஆழ்ந்த அமைதியாலும் பாராமுகத்தாலும் சந்தித்தது. ஆனால் மார்க்ஸியம் கிணற்றில் இட்ட கல்லாய் மறைந்து போகாமல் வலுவுற்று இயங்கிய போது, அதனைக் குறித்த விமர்சனம் என்று பேசவேண்டிய கட்டாயம் ஏற் பட்டது. மார்க்ஸியம் குறித்து வந்த முதல் விமர்சனமே அதுவொரு மூடுண்ட தத்துவம், அது காலாவதி யாகி விட்டது என்ற ரீதியில்தான் வந்தது. ஆக மார்க்ஸியத்தின் பிறப்பைப் பற்றிய அறிவிப்பே அதன் மரணச் சான்றிதழ் வடிவில்தான் வந்தது.

ஆனால், இந்த மரண அறிவிப்புகள், எதிர்ப்புகள், முதலாளித்துவத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், மார்க்ஸிய இயக்கங்களில் ஏற்பட்ட சரிவுகள், பிறழ்வுகள், தவறுகள் எல்லாவற்றையும் தாண்டி முதலா ளித்துவ பொருளாதார அமைப்பு குறித்த மார்க்ஸின் ஆய்வுகளும் முடிவுகளும் அடிப்படையில் சரியா னவை என நிரூபணம் ஆகியுள்ளது.

மார்க்ஸ் மூலதனத்தை வெளியிட்ட காலத்திற்குப் பின்பு ஏற்பட்ட பல நெருக்கடிகள், 1929ஆம் ஆண்டு ஏற் பட்ட பெருநெருக்கடி, பின்னர் 1970களில் துவங்கி மீண்டும்மீண்டும் ஏற்பட்ட நெருக் கடிகள், இப்போது கடந்த சில வருடங்களாக தொடரும் நெருக்கடி, எல்லாவற்றுக்கும் மேலாக இப்போ தைய நெருக்கடி என ஏராளமான நிகழ்வுகள் மார்க்சியத்தின் அறிவியல் பூர்வமான இந்தக் கோட்பாடு அடிப் படையில் இன்றும் பொருந்தக் கூடியதே என்று பறைசாற்றுகின்றன.

இதுகுறித்து 1933 ஆம் ஆண்டு இங்கி லாந்தில் ஒரு தொழிற்சங்கம் பதிப்பித்த சிறுபிரசுரத்தை, ஒரு இடதுசாரி இணையதளம் (Jay’s Leftist and Progressive Internet Resource Directory வெளியிட்டுள்ளது. அந்த கட்டுரை யின் மொழிபெயர்ப்பு இங்கே தரப்பட்டுள்ளது.

ப.கு.ராஜன், மொழிபெயர்ப்பாளர்

நெருக்கடியின் சாத்தியம்

நெருக்கடி என்பது முதலாளித்துவ சமூக அமைப்பின் அனைத்து முரண்பாடுகளின் மொத்த வெளிப்பாடு என மார்க்ஸ் கருதினார்.

உலகச்சந்தையில் பொது நெருக்கடியின்போது பூர்ஷ்வா உற்பத்திமுறையின் சகல முரண்பாடுகளும் ஒருங்கே வெடித்து எழுகின்றது... (மார்க்ஸ் - உபரி மதிப்புக் கோட்பாடுகள் - தொகுதி 2 - பகுதி 11 ப. 318) மார்க்ஸ் நெருக்கடியை அதன் பல்வேறு பரிமாணங்க ளோடும், பல்வேறு வெளிப்பாடுகளோடும் கண்டு விளக் கியுள்ளார். நெருக்கடி எவ்வாறு பன்முக விளைவுகளை ஏற்படுத்துகிறது, எப்படி முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் சகல அம்சங்களையும் பாதிக்கிறது, எப்படி எல்லாத்தரப்பிலும் உருவாகி வளர்கிறது என்பதை யெல்லாம் மார்க்ஸ் பகுத்து ஆய்ந்துள்ளார்.

சரக்கு உற்பத்தியின் முரண்பாடு- நெருக்கடியின் சாத்தியம்:

பொருள் உற்பத்தி, சரக்கு உற்பத்தி எனும் ரீதியில் நிகழ் வதில்தான் நெருக்கடியின் அடிப்படையான சாத்தியம் உள்ளது என்பதை மார்க்ஸ் கண்டறிந்து கூறினார். மார்க்ஸின் புகழ்பெற்ற நூலாகிய மூலதனத்தின் மையமே இந்த விளக்கம்தான் எனக் கூறுவோர் உண்டு. முதலாளித்துவத்தின் இயங்குவிதிகளைக் கண்டறிந்து விளக்கிய மார்க்ஸின் மிகமுக்கியக் கோட்பாடுகளில் ஒன்று, முதலாளித்துவ நெருக்கடி குறித்த மார்க்ஸியக் கோட்பாடு ஆகும். தொழில் மந்தம் என முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களால் அழைக்கப்படுவதுதான் மார்க்சிய இலக்கியத்தில் நெருக்கடி என அழைக்கப்படுகிறது.

பண்டமாற்று முறை வழக்கிலிருந்தபோது, உற்பத்தி என்பது உற்பத்தியாளரின் சொந்த நுகர்வுக்காகவே நடந் தது. பின் உற்பத்திச் சக்திகள் சிறிது வளர்ச்சியடைந்து, உற்பத்தியில் ஓரளவு வேலைப்பிரிவினை ஏற்பட்டது. இந்த கட்டத்தில் உற்பத்தி சொந்த நுகர்வுக்கு என்பதைத் தாண்டியது. சொந்த நுகர்வுக்கு பெருமளவும் சக உற்பத்தி யாளர்களின் நுகர்வுக்காக சிறிதளவுமாக நடந்தது. சொந்த நுகர்வுக்குப் போக உபரியாக இருந்த பொருட்கள் தாம் இந்தவகையில் சரக்காக பண்டமாற்றாக பரிவர்த்தனை செய்துகொள்ளப்பட்டன. உபரியாக இருந்த பொருட்க ளின் பரிவர்த்தனை அடிப்படையம்சமாக இருக்க வில்லை. ஆனால் சரக்கு உற்பத்திமுறையில் பொருட் களை பணமாக மாற்றுவது அதாவது விற்பனை என்பது நடந்தேத் தீரவேண்டிய ஓர் இன்றி யமையாகும். சொந்த நுகர்வுக்கான உற்பத்தி, எதார்த்தமாக நடைபெறக்கூடியது. சரக்கு உற்பத்திமுறையில் விற்பனை நடக்கவில்லையெனில் நெருக்கடிதான்.1

சமூகத்தின் பொருளுற்பத்தி சரக்கு உற்பத்தியாக இருக் கும் வரை, அதாவது சரக்கு பொருளாதார அமைப்பு உள்ள வரை நெருக்கடி ஏற்படும் சாத்தியத்தையும் சமூகம் தன் சரக்குப் பொருளாதார அமைப்பிற்குள் கொண்டுள்ளது. நேரடி பண்டமாற்று என்பது பரிவர்த்தனையின் ஆரம்ப நிலை. இந்த நிலையில் பொருட்கள் பெருமளவிற்கு சொந்த நுகர்வுக்காகவே உற்பத்தி செய்யப்பட்டன. சுய தேவையின் பூர்த்திக்குப் பிறகு உபரியாக இருந்த பொருட் கள் மட்டுமே சரக்காக மாறின. இவை மட்டுமே பிற நுகர்வுப் பொருட்களுக்காக நேரடியான பண்ட மாற்றாக பரிவர்த்தனை செய்துகொள்ளப்பட்டன.

சரக்கு உற்பத்திமுறையில் எல்லாப் பொருட்களும் பண மாக மாற்றப்படல் வேண்டும். ஒரு பொருளுக்கு உள்ள பயன்பாட்டு மதிப்புக்கும் அதற்கு சரக்கு என்ற வடிவில் ஏற்படும் மதிப்பிற்கும் இடையே ஒரு முரண்பாடு உள்ளது. இது சரக்கு பொருளுக்கும் பணத்திற்கும் இடை யேயான இடைவெளியில் வெளிப்படுகின்றது. சரக்கு பொருளாதார சமூகத்தில்,வாங்குபவர் இல்லையெ னில் ஒருவரும் பொருளை விற்பனை செய்ய இயலாது. விற்பனையும், கொள்முதலும் ஒன்றில்லாமல் மற் றொன்று இருக்க இயலாதவை; இரண்டிற்கும் இடையே உள்ளார்ந்த இணைப்பு உள்ளது. ஆனால், ஒரு பொருளை விற்பனை செய்பவர் வேறு ஒரு பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை.

ஆக விற்பனைக்கும் கொள்முதலுக்குமிடையே ஒரு பிரி வினையும் உள்ளது. சரக்குப் பரிவர்த்தனையில் விற்ப னைக்கும் கொள்முதலுக்கும் இடையேயுள்ள இந்த பிளவு,ஒரு மிகப்பெரிய வலைப்பின்னலான சமூக உறவு களை உருவாக்குகிறது. இது தன்னெழுச்சியாக வளரக் கூடியதும், இதில் பங்கேற்பவர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதும் ஆகும். விவசாயி தான் உற்பத்தி செய்த கோதுமையை விற்றால்தான், ஒரு நெசவாளர் தான் உற்பத்தி செய்த துணியை அந்த விவசாயியிடம் விற்க முடிகின்றது. நெசவாளர் தான் உற்பத்தி செய்த துணியை விற்றால்தான் ஒரு பாதிரி தன்னுடைய பைபிளை அந்த நெசவாளரிடம் விற்க முடிகிறது. வாழ்வின் வற்றாத நீரை விற்பனை செய்ததால்தான் அவர் தேவ மதுவை வாங்க முடிந்தது.

விவசாயி கோதுமையை விற்க முடியவில்லையென்றால் அவரால் எந்தத் துணியையும் வாங்கவும் இயலாது. ஆக நெசவாளர் பைபிள் வாங்குவதற்கு முன்வர மாட்டார். அது மட்டுமல்ல. விவசாயி கோதுமையை விற்க முடிந்தாலும், வேறு பொருள் எதனையும் வாங்குவதில்லை என்ற முடி வோடு பணத்தை பணமாகவே வைத்துக் கொண்டாலும் விற்பனை கொள்முதல் என்ற இந்த சங்கிலி அறுபடுகின் றது. விற்பனை - கொள்முதல் எனத் தொடர்ந்து நடை பெற வேண்டிய இயக்கத்தில் ஏற்படும் இந்த பிளவு பூதா கரமானதாக வளர்ந்து பரிவர்த்தனை உறவுகள் அனைத் தையும் பாதித்து நெருக்கடியாக உருவெடுக்கிறது. இங்கு நெருக்கடி என்பது நேரக்கூடிய சாத்தியம் என்ற அளவில் தான் உள்ளது. நெருக்கடி நேராமலும் போகலாம். ஏனெனில் சாதாரணமாக விற்பனையைத் தொடர்ந்து பொருட்களை வாங்குதல் என்பது நடந்தேறக் கூடியதே.

இந்த முறை (அதாவது சரக்கு பணமாகவும், பணம் சரக் காகவும் மாற்றப்படும் முறை- பதிப்பாளர்) நெருக்கடி நேர்வதற்கான சாத்தியத்தை மட்டுமே ஏற்படுத்துகிறது. நெருக்கடி ஏற்படுவதற்கான சாத்தியம் என்பது தவிர்க்க வியலாத எதார்த்தமாக மாறுவது நீண்டத் தொடர் உறவு களின் விளைவாக ஆகும். இந்தவகையான தொடர் உறவுகள் எளிமையான பண்டமாற்று பரிவர்த்தனை சுழற்சியில் இல்லை. பணம் - செலாவணி, நெருக்கடியின் சாத்தியம்:

சரக்கு உற்பத்திமுறையில் ஒரு பொதுவான சாத்தியமாக மட்டும் இருக்கிற நெருக்கடி, கடன் அடிப்படையிலான வணிகம், பணம் செலாவணியாக பரிவர்த்தனையில் பயன்படுத்தப்படுவது ஆகியவற்றினூடாக வலுவடைந்து வளர்கிறது. அதாவது சரக்கு விற்கப்படுகிறது. ஆனால் அதற்கான பணம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே அளிக்கப்படுகிறது. அதன் பிறகுதான் அந்த குறிப்பிட்ட வணிக நடவடிக்கை முற்றுப்பெறுகிறது. கடன் அடிப் படையில் நடக்கும் வணிகத்தை பணம் செயல்படுத்துகின்றது.


கடன் அடிப்படையிலான வணிகத்தின் துவக்கத்திற்கும் அந்த பரிவர்த்தனைக்குரிய பணம் கையளிக்கப்படுவதற் கும் இடையேயுள்ள கால இடைவெளியில் சரக்கின் மதிப்பு மாறிவிடலாம். பணம் உரியகாலத்தில் கையளிக்கப்படாமல் போகலாம். விற்பனையும் கொள் முதலும் விரிவுண்டு தத்தம் அளவில் சுயேச்சையான செயல்களாக ஆனதை இது காட்டுகின்றது.


விவசாயி 2 மீட்டர் துணியை 100 ரூபாய்க்கு வாங்குகிறார் என வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் இன்னமும் துணிக்கான பணத்தை கொடுக்கவில்லை. ஏனெனில் அவர் இன்னமும் தன் கைவசமுள்ள கோதுமையை விற்க வில்லை. அவரிடம் உள்ள கோதுமையின் மதிப்பு துணி வாங்கிய தினத்தன்று 100 ரூபாயாக இருக்கலாம். அதே போன்று நெசவாளர் தனக்குத் தேவைப்படும் கருவிகளை வாங்குகிறார். தான் விற்பனை செய்த துணிக்கான பணம் கிடைத்தவுடன் கருவிக்கான பணத்தை அளிப்பதாக உறுதி கூறுகிறார். ஆனால் விவசாயி தன்னிடமுள்ள கோது மையை விற்பனை செய்யும்போது அதன் மதிப்பு மாறி அவருக்கு கிடைப்பது 100 ரூபாய்க்கு குறைவாக இருக் கலாம். அல்லது அவரால் கோதுமையை விற்க இயலாம லும் போகலாம். அப்படி நேர்ந்தால் அவர் நெசவாளருக்கு பணம் கொடுக்க முடியாது. நெசவாளர் தான் வாங்கிய கருவிக்கு உரிய பணத்தை அளிக்க இயலாது. கடன் வணிகம் இந்த வகையில் அதில் ஈடுபடும் சரக்கு உற்பத்தி யாளர்கள் அனைவரையும் பரஸ்பர சார்பு எனும் ஒரு சங்கிலியால் பிணைக்கின்றது. இந்த பணப்பட்டுவாடா சங்கிலியில் ஏதேனும் ஒரு கண்ணி அறுந்தாலும இந்தத் தொடர் சங்கிலி சீர்குலைவுக்கு உள்ளாகும். அதாவது நெருக்கடி உருவாகும்.


நெசவாளர் பணம் அளிக்காத காரணத்தால் நூல் நூற்பவர் பணம் அளிக்க இயலாது. நூல் நூற்பவர், நெசவாளர் இருவருமே இயந்திர உற்பத்தியாளருக்கு பணம் அளிக்க இயலாது. அவர் தான் வாங்கிய இடுபொருளுக்கும் மரத்திற்கும் நிலக்கரிக்கும் பணம் கொடுக்க இயலாது. இவர்கள் யாவரும் தாம் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க இயலாது. ஏனெனில் இவர்களது சரக்கின் மதிப்பை இவர்கள் ஈட்டவில்லை. ஆக ஒரு பொது நெருக்கடி உருவாகின்றது.(6) பயன்பாட்டு மதிப்பு- மதிப்பு ஆகியவற்றுக்கு இடையே உற்பத்தி - கைமாறும் சுழற்றி ஆகியவற்றுக்கு இடையே விற்பனை - கொள்முதல் ஆகியவற்றுக்கு இடையே மூலதனம் - உழைப்பு ஆகியவற்றுக்கு இடையே - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் பிளவு ஏற்படுவது ஏன்?


முதலாளித்துவ நெருக்கடி, மிதமிஞ்சிய உற்பத்தியால் நிகழும் நெருக்கடி என்பதை முன்னரே கண்டோம். ஆனால் இது நவீனயுகத்தில் நிகழும் நெருக்கடியின் வெளிப்படையாய் தெரியும் தோற்றம் மட்டுமே. முதலா ளித்துவத்தில் மிதமிஞ்சிய உற்பத்தி என்பது தவிர்க்க இயலாத விதத்தில் ஏற்படுவது ஏன்? மிதமிஞ்சிய உற்பத்தி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் ஏற்படுவது ஏன்? இவையெல்லாம் விளக்கப்பட வேண்டிய வினாக்கள்.


உற்பத்தி - சமூகத்தின் கூட்டுப்பணி பலன் - தனியார் அபகரிப்பு

சமூகமயமான உற்பத்திக்கும் முதலாளித்துவ முறையி லான பங்கீட்டிற்குமிடையேயான முரண்பாடே நெருக் கடி உருவாக பிரதான காரணமாகும். உற்பத்திச்சக்திகளுக் கும் உற்பத்தி உறவுக்கும் இடையேயான முரண்பாட்டின் மூர்க்கமான மோதலின் வெளிப்பாடே நெருக்கடி என்று மார்க்ஸ் கண்டுரைத்தார். முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடாகிய, சமூகவயப்பட்ட உற்பத்திக்கும் முதலா ளித்துவ கைக்கொள்ளலுக்கும் இடையேயான முரண் பாடே நெருக்கடியை, நடந்தேத் தீரும் நிச்சயம் என்று ஆக்கும் காரணி என்று மார்க்ஸ் அவதானித்தார்.

உற்பத்தியின் பலனை தனியார் கைக்கொள்ளல், எளிமை யான சரக்குப் பொருளதார அமைப்பிலும் நடந்தது. அப்போது உற்பத்தியாளராகிய தனிநபர் தனது உற்பத்தி யின் பலனை தானே கைக்கொண்டார். ஆனால் முதலாளித்துவத்தின் கீழ் சமூகரீதியான உற்பத்தியில் மற்றவர் உழைப்பால் உருவானதை உற்பத்தி சாதனங்களின் உடமையாளர் தன்னுடையதாக கைக்கொள்கிறார்.

முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி சமூகரீதியாய் நடை பெறுகிறது என்று கூறுவதன் பொருள் என்ன? உழைப் பாளர்கள் தனிமனிதர்களாய் இல்லாமல் ஒரு பெருங் கூட்டமாய் ஒரு கூரையின் கீழ், ஒரு தொழிற்சாலையில் பணிபுரிகின்றார்கள். சமூகரீதியான உற்பத்தி என்பதன் பொருள் இதுவல்ல. இது ஒரு சிறு அம்சமே. மூலதனத் தின் குவிப்பு என்பதோடு தனித்துவ உயர்நுட்பத்தோடு கூடிய சமூக உழைப்பு உடனிணைந்து நிகழ்கின்றது. ஒவ்வொரு தொழிற்பகுதியிலும் அதில் ஈடுபடும் உடமை யாளர்களின் எண்ணிக்கை குறைந்து, தனித்துவமான தொழில்களின் எண்ணிக்கை உயர்கின்றது.பல்வேறு இடங்களில் நடக்கும் உற்பத்தி நிகழ்வுகள் சமூக உற்பத்தி எனும் ஒரு பெருநிகழ்வின் பகுதிகளாய் நடக்கின்றன.(10) ஆனால், இந்தவகையில் ஒவ்வோர் உற்பத்தி நிகழ்வும் பெருநிகழ்வான சமூக உற்பத்தியின் பகுதி நிகழ்வாய் மாறும்போது உற்பத்திமுறைக்கும் பலனை கைக்கொள் ளும் முறைக்கும் இடையே தீர்க்க முடியாததொரு முரண் பாடு தோன்றுகிறது. உற்பத்தி நிகழ்வு ஒவ்வொன்றும் ஒரு தனி முதலாளியால் அவர்தம் விருப்பம் போல் நடத்தப் படுகிறது. சமூக உற்பத்தியின் பலன் அவரது தனியுடமை என்றாகிறது.

மற்றவர் உழைப்பின் பலனை கையகப்படுத்துவதற்கு உள்ள வேட்கைக்கு நிறைவு என்பதே இல்லை. இயற்கை யாக இது வரம்பும் முடிவும் இல்லாதது. ஒரு வர்த்தகப் பரிவர்த்தனையில் லாபம் என்பதல்ல; முடிவற்ற, ஓய்வற்ற தொடர்ச்சியான லாபம் என்பதே ஒரு முதலாளியின் குறிக்கோளாய் இருக்கிறது. (12) பணம் மூல தனமாய் மாற்றமடைவது குறித்த தனது ஆய்வில் மார்க்ஸ் மூலதனத்தின் சுழற்சிக்கு வரம்பேதுமில்லை (13) என்பார்.


உழைப்பின் பலனை கைக்கொள்வதை அதிகரிக்க நடக்கும் போராட்டத்தில், ஒவ்வொரு முதலாளியும் மூல தனம் மென்மேலும் திரள்வதற்கு கடும் முயற்சி செய்கின் றனர். அதாவது, தான் ஈட்டும் லாபத்தை (உபரி மதிப்பை) மறுமுதலீடு செய்து தனது உற்பத்தியை விரிவுபடுத்தவும், பெருக்கவும் முயற்சிக்கின்றனர். வியாபாரப் போட்டி காரணமாக உற்பத்தியை பெருக்குவது ஒவ்வொரு முதலா ளிக்கும் நிர்ப்பந்தமாகிறது. இந்த கடும் போட்டியில் தேக்கம் தோல்விக்கும், வியாபாரக் களத்திலிருந்து அப்புறப்படுத்தலுக்கும் வழிவகுக்கின்றது. உற்பத்திச் சக்தி களை ஓயாது அதிகரிக்கும் இந்த ஓட்டத்தின் விளைவால் உற்பத்தி, முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் கட்டும் வரம்புகளையெல்லாம் உடைத்து மீறிப் பாய்வதாகிறது.


சமூகரீதியான உற்பத்தி அளவுகளை தீர்மானிப்பது உற்பத் திக்கு இருக்கும் சமூகத்தேவை அல்லது விற்பனைச் சாத்தியம் அல்ல; மாறாக மூலதனம்தான் உற்பத்தியை தீர்மானிக்கின்றது. முதலாளித்துவ உற்பத்திமுறையின் வளர்ச்சியில் உற்பத் தியின் அளவை அந்தப் பொருளுக்குள்ள விற்பனைச் சாத்தியம் தீர்மானிப்பதில்லை. உற்பத்தி அளவை ஒவ் வொரு தனிப்பட்ட முதலாளியின் கையிலுள்ள மூலதனம் தீர்மானிக்கின்றது. மூலதனத்தின் மதிப்பை அதிகரிப்பதற் கும், உற்பத்தியின் தொடர்ச்சியான விரிவாக்கத்திற்கான இயல்பான வேட்கையும் இதனை தீர்மானிக்கின்றது. (14)


வியாபாரத்தில் உள்ள போட்டியின் காரணமாக உற்பத்தி அதிகரிப்பு என்பது உற்பத்தி சாதனங்களை பெருக்குவது என்ற விதத்தில் நடக்கும் அளவுரீதியான மாற்றத்தால் மட்டுமல்ல; பண்புரீதியாக தொழில்நுட்ப முன்னேற்றத் தின் மூலம் உற்பத்தித்திறனைப் பெருக்குவதன் மூலமும் நடைபெறுகிறது. அதாவது சமூக உழைப்பின் திறனை உயர்த்துவதால் உற்பத்தி அதிகரிக்கப்படுகிறது. அதிகலாபத்திற்கான வேட்டை, தொழில்நுட்ப வல்லமை முன்னேற்றமடைய வழிவகுக்கிறது. முடிவற்றதும், தொடர்ச்சியானதுமான தொழில்நுட்ப செழுமைக்கும் முழுமைக்கும் வழிவகுப்பதின் மூலம் சமூக உழைப்பின் திறனுக்கு மிகுந்த உத்வேகமளிக்கின்றது.


முதலாளித்துவ உற்பத்தி நடைபெறும் சமூக நிலைமை குறித்து எந்தவித கவனமுமின்றி உற்பத்திச் சக்திகளை வளர்த்தெடுப்பது முதலாளித்துவ உற்பத்திமுறையின் இயல்பாகும். (15) மூலதனம்தான் இந்த அபரிமிதமான உற்பத்தி அதிகரிப்பை கொண்டு செலுத்தும் விசையாகும். உற்பத்தி யின் உபரியில் பெரும்பகுதி மூலதனமாக மாற்றப்படுகி றது. இருக்கின்ற உற்பத்திநிலைகளை தக்கவைத்துக் கொள்ளவும், வரம்பற்ற உற்பத்தி அதிகரிப்புக்கும் மென் மேலும் மூலதனம் தேடியும் முழுமூச்சாக பாடுபடும் முதலாளித்துவம் உற்பத்திப் பொருட்களின் சமூக நுகர்வு அதிகரிக்க ஏதும் செய்வதில்லை. (16)

இது ஒரு கண்மூடித்தனமானப் போராட்டம். மிக அனுப வமும், சமநோக்குநிலையும் கொண்ட முதலாளிகள் கூட இந்த பொதுவான சூறாவளியிலிருந்து ஒதுங்க முடிவ தில்லை. மனிதகுலம் முழுமைக்கும் புதிதாய் அளிக்க வேண்டும் என்பதுபோல் ஆலைகளும், தறிகளும், சுத்தி யல்களும் இடைவிடாது இயங்கி பொருட்கள் உற்பத்தி செய்து குவிக்கப்படுகின்றன. ஏதோ சந்திர மண்டலத்தில் கோடிக்கணக்கான புதிய நுகர்வாளர்கள் கண்டுபிடிக்கப் பட்டதுபோல் இது நடக்கின்றது. (17)


உற்பத்திச்சக்திகளின் கட்டற்ற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் இந்த நிகழ்வுப்போக்கு முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் விதிக்கும் வரம்புகளை மூர்க்கமாக அடித்துத் தகர்க்கிறது. இதன் காரணமாக உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையே மோதலை தோற்றுவிக்கிறது. இந்த மோதல் ஒரு நெருக்கடியில்தான் ஓய்கிறது. முதலாளித்துவம் சமூகரீதியான உழைப்பு என்பதை நடை முறைப்படுத்துகின்றது. ஆனால் சமூகரீதியான உழைப்பின் காரணமாக செய்யப்படும் பிரம்மாண்டமான உற்பத் தியின் பலன்கள் சமூகரீதியாய் பங்கிடப்படுவதில்லை. மாறாக அவை உற்பத்தி சாதனங்களின் உடமையாளர் களால் கைக்கொள்ளப்பட்டு அவர்களின் சொந்த பயன் பாட்டுக்கு மட்டுமே என்று ஆகின்றது. அதாவது பெரும் பான்மையான மக்களுக்கு உற்பத்திச்சக்தி வளர்ச்சியால் எந்த பயனும் இல்லை.


சரி, இந்த இயக்கப் போக்கின் மறுமுனையில், அதாவது உழைப்பாளி மக்களின் மத்தியில் நடப்பதென்ன? லாப வேட்டை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. அதேநேரத்தில் மனித உழைப்புச்சக்திக்கான தேவையை ஒப்பீட்டளவில் குறைக்கிறது. அதாவது வேலையற்றோ ரின் சேமப்படை ஒன்றை உருவாக்குகிறது. முதலாளித்துவம் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்து, எந்த அளவுக்கு உற்பத்தித்திறன் அதிகரிக்கி றதோ அதன் நேர்விகிதத்தில் மனித உழைப்பின் தேவையைக் குறைக்கிறது. 18 இதனால் சமூகத்தில் பயன்படுத்தப்படும் மூலதனத்தின் அளவில் வளர்ச்சி ஏற்படுகிறது. அதேநேரத்தில் முதலாளித்துவம் வேலைக்கமர்த்தும் தொழிலாளர் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைகின்றது.

லாபவேட்டையில் முதலாளித்துவம் உற்பத்தியில் ஈடு படும் தொழிலாளர் எண்ணிக்கையை குறைப்பதோடு, அவர்களது கூலியையும் ஒப்பீட்டளவில் குறைக்கின்றது. வேலையற்றோரின் சேமப்படை இதனை நிறைவேற்ற ஒரு கருவியாக பயன்படுகின்றது. நெருக்கடிக்கு முந்தய காலகட்டத்தில் முதலாளித்துவம் கூலியை அதிகரிக்க அனுமதிக்கும் என்றாலும் இது பலமடங்கு லாப அதிகரிப்பை ஒட்டியே நடக்கின்றது. இந்த அதிகப்படி லாபம் என்பதும் மூலதனமாக மாறுகிறது. இதன் காரணமாக உற்பத்தி, மேலும் அதிகரிக்கின்றது.

தனது நோக்கமான மூலதன அதிகரிப்பு நிறைவேற ஒரு முதலாளி சில வழிமுறைகளை கைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. ஆனால் இந்த வழிமுறைகளே தவிர்க்கவியலாதவண்ணம் வரம்புகளற்று வளர்த்தெ டுக்கப்படும் உற்பத்திக்கும் மிகக்குறுகிய நுகர்வுத்தளத் திற்கும் இடையேயான சிக்கலை உருவாக்குகிறது. முதலாளித்துவத்தின் வழிமுறையே அதன் நோக்கத்திற்கு எதிரானதாக இருக்கின்றது.

ஆக முதலாளித்துவத்தின் கீழ் மூலதனப் பெருக்கம், உற்பத்திப்பெருக்கம் ஆகியவை, அதாவது உற்பத்திச் சக்தி களின் வளர்ச்சிக்கும் முதலாளித்துவத்தின் சமூகரீதியான உற்பத்திக்கும் இடையேயுள்ள முரண்பாடு முதலாளித்துவம் மேலும் வளர்வதை தடுக்கின்றது. நுகர்வுத்தளத்தை விரிவு செய்யாமல் உற்பத்தியை மட்டும் பெருக்குகின்ற இந்த செயல் முதலாளித்துவ சமூக கட்டமைப்பின் வரலாற்றுப்பணி (19)

உற்பத்திச்சக்திகள் கட்டமைக்கும் வரம்புகளை மூலதனத் தின் இயக்கம் கட்டுடைப்பதே நெருக்கடி. இத்தோடு கடன் அடிப்படையில் வணிகம் புரிய ஏற்படும் வசதிகள் இந்த இயக்கத்தை பலப்படுத்தி, முரண்பாடுகள் கூர்மை யடைவதை துரிப்படுத்துகிறது. முதலாளித்துவத்தின் எழுச்சிக் கட்டங்களில், மூலதனத்திற்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கின்றன. இதனால் இந்தக் கட்டத்தில் உபரி- மதிப்பு மாறாமல் இருந்தாலும் லாப விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆக, கடன் மூலதனமும் முதலாளித்துவ சமூக அமைப்பு இடும் வரம்புகளைத் தாண்டி உற்பத்தி நடைபெற வழிவகுக்கின்றது. கடைசியில் வங்கி மூலதனம்:தனது கைவசமுள்ள சமூகத்தின் சேமிப்பு அனைத்தையும் தொழில் மற்றும் வணிக முதலாளித்துவம் தமது விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கிறது. இதன் மூலம் மூலதனத்தின் மேலுள்ள தனியுடமைப் பாங்கு களையும் நீக்குகிறது... வங்கி மற்றும் அதன் கடன் வசதிகள் முதலாளித்துவ உற்பத்தியை அதன் சமூக வரம்புகளைத் தாண்டி வளர்ச்சியுற வைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. இவை நெருக்கடிக்கும் ஊழலுக்கும் வகை செய்யும் கருவிகளாகவும் விளங்குகின்றன. (20)

ஆக முதலாளித்துவத்தின் சகல விசைகளும் உற்பத்தியை ஆன மட்டும் பெருக்குவது என்ற திசையில் செயல்படுகின்றன. முதலாளித்துவ உற்பத்திமுறை ஒரு நெகிழ்வுத் தன்மையை பெற்றுள்ளது. மிகக் குறுகிய அவகாசத்தில் உற்பத்தியை பல்கிப் பெருகச் செய்வது அதற்கு சாத்திய மாக உள்ளது. கச்சா ப்பொருட்களின் விநியோகம் மற்றும் உற்பத்தி பொருட்களின் விற்பனை சாத்தியம் ஆகியவை மட்டுமே பிரச்சினை. 21

முதலாளித்துவம் கச்சாப் பொருட்களின் உற்பத்தியையும் வளர்ச்சியடையச் செய்கிறது. புதிய சந்தைகளை வென் றெடுக்கிறது. புதிய வகை கச்சாப் பொருட்களை கண்டு பிடிக்கிறது. பலநாடுகளை கச்சாப் பொருள் வழங்கும் பண்ணையாகவே மாற்றுகிறது. இவற்றின் மூலம் கச்சாப் பொருள் என்கிற வடிவிலான தடைகளை வெல்கின்றது.

முதலாளித்துவத்தின் வளர்ச்சி, முதலாளித்துவ சமூக அமைப்பு ஏற்படுத்தும் மிகக்குறுகிய வரம்புகளால் தவிர்க்கவியலாத வகையில் மீண்டும் மீண்டும் சீர்குலை வுக்கு உள்ளாகிறது. உழைக்கும் வர்க்கத்தினை கடுமை யாக சுரண்டுவதன் மூலம் உற்பத்திச்சக்திகளை பிரம் மாண்டமாக வளர்த்து, உற்பத்திச் சாதனங்களையும், நுகர்வுப் பொருட்களையும் மலைபோல் செய்து இப்படி மலைபோல் குவியும் பொருட்கள் சரக்கு எனும் வடிவில், மிகப்பெரும் அளவையும் உபரி மதிப்பையும் தன்னிடத்தே கொண்டு விளங்குகிறது. ஆனால் இவற்றை வாங்கும் சக்தி கொண்டவர் இருந்தால்தான் இவை பயன் பாட்டுக்கு வரும். அதாவது மலைபோல் செய்து குவிக்கப்பட்ட சரக்குகளை விற்பனை செய்து ஆக வேண்டும்.

உழைப்பாளிகளைச் சுரண்டுவது நடந்தேறிவிட்டது. ஆனால், இச்சுரண்டலின் பலனை முதலாளிகள் இன்னும் அடையவில்லை.22 முதலாளித்துவத்தின் கீழ் வரம்பு களற்ற சுரண்டலுக்கும் சுரண்டலின் பலனை அடைவதற் குள்ள மிகக் குறுகிய சாத்தியத்திற்கும் இடையேயுள்ள இந்த முரண்பாடு நெருக்கடியில் வெளிப்படுகிறது.

சுரண்டலுக்கும், சுரண்டலின் பலனை அடைவதற்கும் வேறுவேறு விதமான நிபந்தனைகள் உள்ளன. சுரண்டலும் சுரண்டலின் பலனை அடைதலும் ஒருசேர நடப்பதில்லை. இரண்டிற்கும் இடையில் காலம், இடம் மற்றும் தனித்துவமான இயங்கு விதிகள் என்ற இடைவெளிகள் உள்ளன. சுரண்டலுக்கு சமூகத்தின் உற்பத்தி சக்திகள் மட்டுமே வரம் புகளாய் உள்ளன. ஆனால் பலன் அடைவதை வெவ்வேறு உற்பத்தி நிகழ்விலும் உள்ள உற்பத்தி உறவின் பங்குகளின் விகிதாச்சாரம் மற்றும் சமூகத்தின் நுகர்வுச்சக்தி ஆகியவை தீர்மானிக்கின்றன. பலன் என்பதை சமூகத்தின் உற்பத்தி பலமோ அல்லது சமூகத்திற்கு உள்ள நுகர்வுத் தேவையோ தீர்மானப்பதில்லை. மாறாக மிகவும் பகையுணர்வுடன் கூடிய பங்கீட்டு முறைகள்தான் நுகர்வு பலம் என்ன என்பதை தீர்மானிக்கின்றது. இது, மிகப் பெரும் மக்கட் தொகுதியின் நுகர்வானது மிகவும் குறுகிய அளவுடைய தாய் இருக்க நிர்ப்பந்திக்கின்றது... நுகர்வு மாறக்கூடி யதே. ஆனால் மிகவும் குறுகிய வரம்புகளுக்குள் மட்டுமே மாறக்கூடியதாய் உள்ளது. (23) உற்பத்தி - நுகர்வு:

உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான சிக்கலும், சமமின்மையும் முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாட் டின் வெளிப்பாடு. சமூகரீதியான உற்பத்தியும் முதலாளித் துவ முறையான கைக்கொள்ளலும் முரண்படுதலே நெருக்கடி உருவாவதற்கான பிரதான காரணம் என்பதைக் கண்டோம். இது உற்பத்திக்கும் நுகர்வுக்குமிடையேயான சமமின்மை என்ற வடிவில் வெளிப்படுகின்றது. தனக்கு முந்தைய சமூக அமைப்புகளிலும் இருந்த இம்முரண் பாட்டை முதலாளித்துவம் காத்து வளர்த்து, உழைப்பிற் கும் மூலதனத்திற்கும் இடையேயான முரண்பாடு என்ற ஒரு புதிய வடிவத்தை பெறச் செய்கின்றது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான பெரும் இடைவெளி என்கிற வடிவில் வெளிவரும் முரண்பாடு முற்றி நெருக்கடியாய் வெடிக்கிறது. உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான முரண்பாடு எப்போதும் முதலாளித்துவத்தில் இருந்து வரக்கூடியதே. சமூகரீதி யான உற்பத்திக்கும் முதலாளித் துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான முரண்பாடே இம்முரண்பாட்டை வளர்த்தெடுத்து நெருக்கடியாய் வெடிக்கச் செய்கிறது.

சமூகரீதியான உற்பத்திக்கும் முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான முரண்பாடாய் மட்டும் ஒரு ஒற்றைத் தோற்றம் தருவதில்லை. அது பல் வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. மார்க்ஸியக் கோட்பாடுகள் உற்பத்திக்கும் நுகர்வுக்குமிடையேயான உறவின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் பிரதான முரண்பாடு அதுவல்ல. அதைப் போலவே உற்பத்தியின் வெவ்வேறு பிரிவுகளுக்குள் உள்ள சமச்சீரின்மையையும் கவனிக்கத் தவறவில்லை. ஆனால் இந்த சமச்சீரின்மையும் பிரதான முரண் பாட்டின் ஒரு வெளிப்பாடு மட்டுமே என்றுதான் அவதானிக்கிறது.

உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையேயான முரண்பாடும், வெவ்வேறு உற்பத்திப் பிரிவுகளுக்கும் இடையேயான முரண்பாடும் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட் டின் வெவ்வேறு வெளித்தோற்றங்களே என்றும் ஒன்றை யொன்று சார்ந்து நிற்பவையென்றும் மார்க்ஸ் வலியுறுத்தி வந்துள்ளார்.

உற்பத்திச்சாதனங்களின் உற்பத்தி, நுகர்வுப் பொருட்க ளின் உற்பத்தி என முதலாளித்துவ உற்பத்தியை இருகூறு களாக பிரிக்கலாம். முதல் பிரிவு இரும்பு, எஃகு இயந்தி ரங்கள், ஏனைய உற்பத்தி சாதனங்களைப் படைக்கிறது. இரண்டாம் பிரிவு துணிமணி, ஆடை அணிகலன், வாழ்க் கைக்குத் தேவையான நுகர்வுப்பொருட்களை உற்பத்தி செய்கிறது. இருபகுதிகளுக்கும் இடையே ஓர் உள்ளார்ந்த உறவு உள்ளது. ஒன்றில்லாமல் மற்றொன்று இருக்கவிய லாது. ஆனால் வெளியில் முதலாளித்துவ தனியுடைமை நிலைகளின்படி இரண்டும் தன்னிச்சையாய் இயங்குவ தாய் பிரிவுள்ளது. ஒருங்கிணைந்த சமூக உற்பத்தியின் இருபிரிவுகளுக்கு இடையேயான இப்பிளவே சமச்சீரின் மையின் சாத்தியத்தை உருவாக்குகிறது. சமூகரீதியான உற் பத்திக்கும் முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான அடிப்படை முரண்பாட்டின் தொடர்ச்சி யாய் இந்த சாத்தியம் ஒரு நிச்சயமாக மாறுகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தியாகும் மதிப்பு இரண் டாகப் பிரிகிறது. ஒருபகுதி மூலதனம் என்ற வடிவில் உற்பத்திக்காகவும், மறுபகுதி வருவாய் என்ற வடிவில் முதலாளிகள், தொழிலாளர்களின் நுகர்வுக்கும் உரியதாகி றது. உற்பத்திச் சாதனங்களான சரக்குகள், நிலைமூலதனம் என்ற பகுதியால் வாங்கப்படுகிறது. அதாவது மீண்டும் மூலதனம் என்றாகிறது. எந்திரங்களை யாரும் நுகர்வுக் காக வாங்குவதில்லை, அவை உற்பத்திக்கான முதலீ டாய்த்தான் பயன்பட இயலும். எனவே அவை மூலதனப் பகுதியால் வாங்கப்பட்டு மீண்டும் மூலதனம் என்றுதான் ஆகவேண்டும். நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் வருவாய் எனும் பகுதியோடு பரிவர்த்தனை செய்யப்படுகிறது. ஆக துணிமணி, ஆடை அணிகலன் போன்ற மக்கள் உபயோகிக்கும் பொருட்களை சரக்கு களாய் உற்பத்தி செய்யும் தொழிற்பகுதி, இந்த சரக்கு களை தனிநபர்களோடு அவர்களது வருவாயோடுதான் பரிவர்த்தனை செய்து கொள்ள இயலும். இவற்றை உற்பத் திக்காக மூலதனம் வாங்கவியலாது. நுகர்வுப்பொருட்கள் ஒருவிதத்தில் மாறு மூலதனத்தின் மூலம் கொள்முதலாகும். மறுஉற்பத்திக்கான பயன்பாடற்ற தனிநபர் நுகர்வுக்காகவே கொள்முதல் ஆகும்.


மாறுமூலதனத்தோடு பரிவர்த்தனையாகும் சரக்குகள் உண்மையில் தொழிலாளர்களது வருவாயோடு பரிவர்த் தனை செய்யப்பட்டு அவர்களது நுகர்வுக்கு தேவையை ஈடு செய்கின்றது. நிலை மூலதனத்தோடு பரிவர்த்தனை செய்யப்படும் சரக்குகள் உற்பத்தி சாதனங்கள் புதிய உற்பத்திக்கான மூலதனம் ஆகின்றது. (24) என்று லெனின் விளக்குகிறார். ஆக முதலாளித்துவத்தில் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் இடையேயான உள்ளார்ந்த முரண்பாடு மூல தனத்திற்கும் கூலிக்குமான முரண்பாடாய் வடிவம் பெற்று உற்பத்தியில் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே யான முரண்பாடாய் வெளிப்படுகின்றது. இதனால்தான் சமூகத்தின் நுகர்வுச் சக்தியும் வெவ்வேறு உற்பத்திப்பகுதிகளின் விகிதாச்சார இருப்பும் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதது அல்ல, மாறாக நுகர்வுச் சக்தி இந்த விகிதாச்சாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்று என்று லெனின் வரையறுக்கின்றார்.
நுகர்வை மீறிய உற்பத்தி, மூலதனத்திரட்சியின் வேகத் தோடு ஈடுகொடுக்க இயலாத வருமான உயர்வு, சமூகத் தின் இருபகுதி உற்பத்திக்கு இடையே சமச்சீரின்மை, நுகர்வுப்பொருட்களின் உற்பத்தியை விஞ்சிய உற்பத்தி சாதனங்களின் உற்பத்தி விரிவாக்கம் என்பனவெல்லாம் சமூகரீதியான உற்பத்திக்கும் முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்கும் இடையேயான அடிப்படை முரண் பாட்டின் வெளிவடிவங்களே. அடிப்படை முரண்பாடு நெருக்கடி என்கிற வன்மையான மோதலுக்கு இட்டுச் செல்வதைப்போல, பல்வேறு உற்பத்தி பகுதிகளுக்கிடை யேயான முரண்பாடும் எந்த சமரசத்திற்கும் விட்டுக் கொடுத்து தீர்வு காண்பதற்கும் நெருக்கடி வடிவிலின்றி சாத்தியமில்லாத வகையில் வளர்ச்சியடைகிறது.

முதலாளித்துவக்கூறுகளில் ஒன்று நாளுக்குநாள் மனித உழைப்பைக் குறைத்து இயந்திரமயமாக்குதலாகும். இது நிலை முதலீடு, மாறு முதலீட்டைவிட ஒப்பீட்டளவில் வேகமாக வளர்வதில் வெளிப்படுகின்றது. மாறு முதலீட் டில்தான் தொழிலாளரின் கூலி உள்ளது. நிலை முதலீடாய் மாறக்கூடிய உற்பத்தி சாதனங்களை தயாரிக்கும் தொழிற் பகுதிகளுக்கே மூலதனம் மென்மேலும் பாய்கிறது. முதலாளித்துவம் வளரவளர இப்போக்கு மேலும் மேலும் தீவிரமடைகிறது. நிலக்கரி, இரும்பு, எஃகு, ஆகியவற்றின் உற்பத்திக்கான முதலீடு ஒப்பீட்டளவில் உணவு, ஆடை, அணிகலன்களின் உற்பத்திக்கான முதலீட்டைக் காட்டிலும் வேகமாக வளர்கிறது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி விதி களின்படி நிலை முதலீடு, மாறு முதலீட்டைக் காட்டிலும் துரிதமாக வளர்ச்சியடையும். அதாவது புதிய முதலீட்டின் பெரும் பகுதி உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் சமூக பொரு ளாதார அமைப்புப் பகுதியால் செய்யப்படுகின்றது. இந்தப் பகுதி நுகர்வுப்பொருட்களை உற்பத்தி செய்யும் அளவைவிட வேகமான வளர்ச்சியும் பெறுகிறது. (25)

மார்க்ஸியக் கோட்பாடு இதிலிருந்து மேலே செல்கின்றது. முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி நடவடிக்கையே சில வரம்புகளுக்கு உட்பட்டு அதன் சந்தையை உருவாக்குகி றது. உருவாகின்ற உபரியின் பெரும்பகுதி முதலாளிகளின் சொந்த நுகர்வுக்காக செல்லாமல் முதலீட்டு திரட்சியாக உற்பத்திப் பெருக்கத்திற்குச் செல்கிறது. இதனால் உற் பத்திச் சாதனங்களின் தேவையும் அதன் சந்தையும் விரிவ டைகின்றன. இதனால் புதிய உழைப்புச்சக்திக்கான தேவையும் அதிகரிக்கிறது. உழைப்பாளர்களின் கூலி நுகர்வுப்பொருட்களுக்காக செலவிடப்படுவதால் அப் பொருட்களுக்கான தேவையும் அதற்கான சந்தையும் விரிவடைகின்றன. ஆக முதலாளித்துவ பொருளுற்பத்தி தனக்கான சந்தையை தானே உருவாக்குகிறது. ஆனால், உற்பத்தி நுகர்வையும் சந்தையையும் மிஞ்சுகின்றது.

ஆனால் உற்பத்தி தன்னிச்சையாக நுகர்விலிருந்து தனிமைப்பட்டு வளர்கிறது. அதைப்போலவே உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் பகுதி தன்னிச்சையாக நுகர்வுப் பொருட்களை உருவாக்கும் பகுதியிலிருந்து தனிமைப் பட்டு வளர்கிறது. ஆனால் முந்தய நிகழ்வு பிந்தய நிகழ்வை நடத்தும் செல்வாக்கு பெற்று விளங்குகிறது. உற்பத்திச் சாதனங்கள் பகுதி தன்னிச்சையாய் வளர்ச்சியடைந்தால் அதற்கும் நுகர்வுப்பொருட்கள் பகுதிக்குமிடையே முரண்பாடு ஏற்படுவது தவிர்க்க இயலாததும், எப்போதும் உள்ளுறைந்து இருப்பதும் ஆகும்.

சுயேச்சையான செயலால் உற்பத்திச் சாதனங்களின் உருவாக்கம் நடைபெற்றாலும், அதற்கும் நுகர்வுப் பொருட்கள் உற்பத்திக்கும் ஒரு பிணைப்புள்ளது. இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுவது வெறும் சடங்கிற்காக அல்ல. அவை உணவும் உடையும் ஏனைய நுகர்வுப் பொருட்களும் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன. வரம்புகளற்ற உற்பத்தி, பின்தங்கி வரும் நுகர்வோடு முரண்படுவது போல, உற்பத்திச்சாதனங்களின் உற்பத்தியில் துரித வளர்ச்சி மிதமிஞ்சிய உற்பத்தியில் சென்று முடியும். வெவ் வேறு உற்பத்திப் பகுதிகளுக்கிடையேயான சமச்சீரின்மை என்ற வடிவில் வெளிப்படும் இந்நிகழ்வு ஒரு நெருக் கடியை அடைந்தே இடைவெளியை குறைக்கிறது.

நுகர்வுப்பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியைவிட உற் பத்திச் சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சி அதிகமிருப்பது, முதலாளித்துவத்தில் நுகர்வுக்கும் உற்பத்திக்கும் இடையேயான முரண்பாட்டின் வெளித்தோற்றமே. இது மூலதனத் திற்கும் கூலிக்குமிடையேயான முரண்பாடு கூர்மையடை வதைக் காட்டுகிறது. அதாவது ஒருமுனையில் செல்வம் குவிவதையும் மறுமுனையில் வறுமை வளர்ந்தோங்கு வதையும் காட்டுகிறது. உற்பத்திச்சாதனங்களின் உற்பத்தி துரித வளர்ச்சி அடைந்தது நுகர்வுப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சியை மிஞ்சி நடப்பதற்கு ஒரு எல்லைவரையில் தான். உற்பத்திச்சாதனங்களை உருவாக்கும் பகுதிக்குள் ளாக நடக்கும் பரிவர்த்தனைகளை தாங்கி நிறுத்தும் வகையில்தான். தான் சொந்தமாக உருவாக்கிய சந்தை அனுமதிக்கும் வரையில்தான் இது நடக்க இயலும்.

நீண்டகால அளவில் பார்க்கும்போது உற்பத்தி சாதனங்களின் உற்பத்தி வளர்ச்சி, நுகர்வுப்பொருள் உற்பத்தி வளர்ச் சியைப் பாதிக்கும். ஆக முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாட்டையும், வெவ்வேறு உற்பத்திப் பகுதிகளுக்கு இடையேயான முரண்பாட்டையும் கூர்மைப்படுத்தி நெருக்கடியை உருவாக்குகின்றது. நெருக்கடி குறித்த மார்க்ஸியக் கோட்பாடு இந்தவிதத்தில் ஏனைய முதலா ளித்துவமும் அதன் ஒருவகையான சமூக ஜனநாயகமும் உருவாக்கியுள்ள நெருக்கடி குறித்த கோட்பாடுகளிலிருந்து பெரிதும் மாறுபடுகின்றது.

முதலாளித்துவ நெருக்கடி குறித்து பூர்ஷ்வா மற்றும் சமூக ஜனநாயகக் கோட்பாட்டாளர்கள் செய்யும் ஆய்வு முதலா ளித்துவத்தின் உள்முரண்பாட்டை மூடிமறைக்கும், மறு தலிக்கும் முயற்சியாகவே உள்ளது. நெருக்கடியிலிருந்து முதலாளித்துவம் மீளவும் அதனை மறக்கவும் நெருக்கடி என்பது ஏதோ சில கணக்குகள் தவறாகிப் போனதால் ஏற்படுவதைப் போலவும், முதலாளித்துவத்தின் சட்டகத் திற்குள் அதற்கு ஆபத்தில்லாமல் நெருக்கடியை சமாளித்து விடலாம் என்பது போலவும் கூறிவருகின்றனர். மார்க்ஸ், நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் சாரத்திலிருந்து உருவாகிறது என்று அவதானிக்கிறார்.

முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த பண்பாகிய சமூகரீதியான உற்பத்தி - முதலாளித்துவ கைக்கொள்ளல் என்ற முரண்பாட்டிலிருந்து பீடிக்கி றது. முதலாளித்துவ உற்பத்திமுறை என்பதே நெருக்கடி யின் தோற்றுவாய். முதலாளித்துவ உற்பத்திமுறை இருக்கும்வரை நெருக்கடி தவிர்க்க இயலாததும் வெல்ல இயலாததும் ஆகும். நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க வேண்டுமெனில் முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் முடிவுக்கு வர வேண்டும். நெருக்கடிகளின் கால இடைவெளி:

முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி இரவு - பகல் போல் மாறி மாறி வரும் நெருக்கடி, மந்தம், புத்துயிர்ப்பு, பெருக்கம், நெருக்கடி என்ற சட்டகங்களின் ஊடாக நடைபெறுகிறது. இச்சம்பவங்கள் ஒன்றையொன்று தொட்டும் தொடர்ந்தும் வருவதாய் உள்ளன. பல்வேறு விஷயங்களில் மார்க்ஸை குற்றங்கூறும் பூர்ஷ்வா பொருளாதார நிபுணர்களுக்கு மார்க்ஸின் நெருக்கடி கோட்பாட்டிலும் கூறுவதற்கு குற்றங்கள் உள்ளன. மார்க்ஸ் நெருக்கடி குறித்து மிகவும் மிகையாய், ஒரு பக்கச் சார்பாய், முதலாளித்துவத்தின் பன்முக வளர்ச்சிக்கட்டங்களில் ஒன்றான அதைப்பற்றி மட்டும் அதிகப்படியான முக்கியத்துவம் அளித்து விளக்குகிறார் என்பர்.

முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் மார்க்சியத்தின் நெருக்கடி கோட்பாட்டுக்கு மாறாக வணிகத்திற்கான நல்லகாலம், கெட்ட காலம் என்ற கட்டங்களைக் கொண்ட சுழல் ஓட்டம் என்ற கோட்பாட்டை முன்வைக்கின்றனர். அவர்கள் நெருக் கடியை, முதலாளித்துவ பொருளுற்பத்தியின் தலையாயப் பண்பு என்று அவதானிப்பதில்லை. மாறாக நெருக்கடி என்பது பல கட்டங்களாய் மாறி ஓடும் சுழல் ஓட்டத்தில் கடந்து செல்லக்கூடிய ஒரு கட்டம்தான் என்று கூறுகின் றனர். நெருக்கடி என்பதும் வணிகத்திற்கு சாதகமான காலகட்டங்கள் என்பதும் இந்த சுழல் ஓட்டத்தின் மாறிமாறி வரும் கட்டங்கள்தான் என்றும் கூறுகின்றனர்.

ஆனால் மார்க்ஸ் அவர்களைப் போலில்லாது நெருக்கடிக்கு அதற்குரிய அழுத்தத்தையும் முக்கியத்துவத்தையும் அளித்தார். வணிகச்சுழற்சியின் தலையாயப் பண்பாய் விளங்குவதாலும், முதலாளித்துவ பொருளுற்பத்தி அடையும் மாறுதல்கள், வளர்ச்சிகள் அனைத்தையும் தீர்மானிப்பதாக இருப்பதாலும் மார்க்ஸ் இங்ஙனம் வலியுறுத்தினார். இதனால் மார்க்ஸிய வணிகச்சுழல் கோட்பாடு, அடிப் படையில் நெருக்கடியின் கோட்பாடே.முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை, ஒரு குறிப்பிட்ட கால இடை வெளியில் நெருக்கடியால் ஆட்டம்கண்டு போவதாலும், முதலாளித்துவத்தின் அனைத்து முரண்பாடுகளும் இணை யும் புள்ளியாய் நெருக்கடியே இருப்பதாலும் இது சரியே. ஆனால் மார்க்ஸிய நெருக்கடி கோட்பாடு வணிக மந்தம், வணிக உத்வேகம் ஆகிய கட்டங்கள் இருப்பதை நிராகரிக்க வில்லை. மாறாக நெருக்கடி எங்ஙனம் வணிகச் சுழற்சியின் தலையாயப்பண்பு என விளக்குமிடத்தில் மற்ற கட்டங்கள் குறித்த ஒரே ஒரு அறிவியல்பூர்வமான விளக்கத்தை அளிப்பது மார்க்ஸ் மட்டுமே.

மார்க்ஸின் கூற்றுப்படி நெருக்கடி இருப்பிலுள்ள முரண் பாடுகளுக்கு ஒரு தற்காலிகமான, வன்மையான தீர்வைக் காண்பது ஆகும். (26) முதலாளித்துவத்தின் அடிப்படை யானதும், அதன் வளர்ச்சிப் போக்கைத் தீர்மானிப்பதுமான முரண்பாடுகளுக்கு ஒரு தற்காலிகமான முரட்டுத்தனமான தீர்வாக நெருக்கடி விளங்குகின்றது. முதலீட்டின் மதிப்பிழப்பு, பொருட்களின் விலையாக்கம், சரக்குகளை அழிப்பது, உற்பத்திக் குறைவு ஆகிய நடவடிக்கைகள் மூலமாக உற்பத்திச் சக்திகளை இட மாற்றம் செய்கிறது. உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் தனது குறுகிய நுகர்வு அடித்தளத்திற்கும் உற்பத்திக்கும் இடையேயான தற்காலிக இடைவெளியை ஒழிக்கிறது. நெருக்கடி என்பதின் பலன் இந்த தற்காலிகத் தீர்வுதான்.

ஆகவே வளர்ச்சிநிலையிலுள்ள முதலாளித்துவத்தில் இடைவிடாத, நிரந்தர நெருக்கடிநிலை என்பதில்லை. ஏனெனில் நெருக்கடி கட்டத்தின்போது முதலாளித்துவத் தின் முரண்பாடுகளுக்கு ஒரு தற்காலிகத் தீர்வு கிடைக் கிறது. நிரந்தரமான நெருக்கடிகள் என்பன இல்லை. (27)

நெருக்கடி தற்காலிகமானதாக இருக்கின்றபடியால்தான் அது முதலாளித்துவச் சுழல் ஓட்டத்தில் முரண்பாடுகளை தீர்த்துவைக்கும் நிகழ்வாக இருக்கிறது. நெருக்கடியின் போது ஏற்பட்ட தீர்வைத் தொடர்ந்து முதலாளித்துவ உற் பத்திமுறை மீண்டும் துவங்குகிறது. நெருக்கடியின்போது முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் ஒழிக்கப்படுவ தில்லை. தற்காலிகமான தீர்வுதான் கிடைக்கிறது. இந்தத் தற்காலிகத் தீர்வைத் தொடர்ந்து ஒரு புதிய திசையில் மீண்டும் உற்பத்திக் குவிப்பை நோக்கி முதலாளித்துவம் பயணிக்கிறது. ஏனெனில் இந்தநிலையை ஏற்படுத்தும் முரண்பாடுகள் ஒழிக்கப்படுவதில்லை. இந்தப்போக்கில் முதலாளித்துவம் தனது குறுகிய உறவுகளால் மீண்டும் மீண்டும் கட்டப் போவது நேர்கிறது. ஏனெனில் முதலா ளித்துவ முறையில் சந்தையின் வரம்புகளை கணக்கில் கொள்ளாமல்தான் உற்பத்தி நடைபெறுகிறது. (28)


சமூகரீதியான உற்பத்தி முதலாளித்துவ கைக்கொள்ளல் எனும் அடிப்படை முரண்பாடு ஒழிக்கப்படாத காரணத்தால் முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சி மீண்டும் ஒரு புதிய நெருக்கடியை நோக்கி நகர்கின்றது. இந்தவகையில் நெருக்கடி மீண்டும் மீண்டும் ஒரு நெருக் கடியைத் தோற்றுவிக்கும். அதே காரணங்கள் நெருக்கடி காலச்சுழற்சியில் மீண்டும் மீண்டும் ஏற்படவும் காரண மாயிருக்கிறது. அதுவரையில் உள்ள முரண்பாடுகளை நெருக்கடி தற்காலிகமாக தீர்த்து வைக்கிறது. உற்பத்தி தொடர்ந்து வளர்ந்து ஒரு புதிய நெருக்கடிவரை செல்கிறது.


முதலாளித்துவ பொருளுற்பத்தியின் சுழல் ஓட்டத்திற்கு நிலை மூலதனம் எங்ஙனம் புதுப்பிக்கப்படுகிறது என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டும். கச்சாப் பொருட்களின் மதிப்பும், மாறு முதலீடும் தன்னகத்தே அடக்கியுள்ள சுற்று மூலதனம் ஒவ்வொரு முடிவிலும் முதலாளிகளை வந்தடைகிறது. இயந்திரங்கள், கட்டிடங்கள் தன்னகத்தே கொண்டுள்ள நிலை மூலதனம் மெதுவாகத்தான் தன் மதிப்பை இழக்கிறது. அது மெதுவாகத்தான் சிறுசிறு துளியாம் கடன் அளிப்பு தேய்மான ஈடு ஆகியன மூலம் முதலாளிக ளால் மீட்கப் படுகிறது. ஆனால் புதிய மூலதனம், மிகப் பெருமளவில் ஒற்றைத் தவணையில் ஒரு தொழிலரங்கில் இடப்படுகிறது. இது உற்பத்திச்சாதன பொருட்களான கட்டிடம், பொருட்கள், இரும்பு, எஃகு, இயந்திரங்கள் போன்றதின் தேவையை திடீரென பலமடங்கு அதிகரிக் கிறது. இதனால் இவற்றுக்கான சந்தையும், இவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் துரித வளர்ச்சி அடைகின்றன.

நிலை மூலதனத்தின் பகுதியான இயந்திரங்கள் தேய் மானம், பழுதுபடல் ஆகிய காரணங்களாக மட்டும் மாற் றப்படுவதில்லை. அறிவியல், தொழில்நுட்ப முன்னேற் றங்களின் காரணமாக நவீன இயந்திரங்கள் உருவாக்கப்படு கின்றன. இவை மேம்பட்ட பின்னர் வழக்கிலிருந்த இயந்தி ரங்களைக் காட்டிலும் அதிகத் திறனுடையவையாக இருக் கின்றன. விற்பனை அரங்கிலிருக்கும் கடும் போட்டி இந்த புதிய இயந்திரங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து பழைய இயந்திரங்களை மாற்றுவதை நிர்ப்பந்தப்படுத்துகின்றது.

புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப முன்னேற்றங்க ளும் நெருக்கடி மற்றும் தொழில் மந்தமான கால கட்டங்க ளில்தான் பெரும் எண்ணிக்கையில் நிகழ்கிறது. ஏனெனில் இந்தக் கட்டங்களின் போதுதான் முதலாளிகளுக்கிடையே யான சந்தைப் போட்டி உக்கிரமாக இருக்கும். நஷ்டத்தை தவிர்க்கவும், விலையிறக்கத்தை சமாளிக்கவும் முதலாளி கள் உற்பத்தி செலவை ஆனமட்டும் குறைக்கப் பாடுபடு கின்றனர். இது இரண்டுவழிகளில் நடைபெறுகிறது. ஒன்று கூலியைக் குறைப்பதும் வேலைப்பளுவை அதிகரிப்பது மாகிய நடவடிக்கை. மற்றொன்று பழைய இயந்திரங்களை மாற்றி புதிய மேம்பட்ட இயந்திரங்களை புகுத்தும் நடவடிக்கை அதாவது நிலை மூலதனத்தை புதுப்பிக்கும் நடவடிக்கை.


முதலாளித்துவ பொருளுற்பத்தியோடு இணைந்து கடும் வேகத்தில் முன்னேற்றமடையும் உற்பத்திச் சாதனங்களின் தொழில்நுட்பம் நிலை மூலதனத்தின் வளர்ச்சியை துரிதப் படுத்துகிறது. இயந்திரங்கள் உண்மையிலேயே தேய்மானம், பழுதுபடல் ஆகிய காரணங்களால் மாற்றப்படுவ தற்கு பதிலாக வழக்கொழிவது என்ற கண்ணுக்கு புலனா காத தேய்மானத்தின் காரணமாக மாற்றப்படுகின்றன. நெருக்கடி பல பெருமளவிலான புதிய முதலீட்டுக்கான துவக்கமாய் அமைகின்றது. (29)


ஆக வர்த்தகத்தின் நற்காலப் பொழுதுகளில் ஒன்று திரண்ட முரண்பாடுகளுக்கு நெருக்கடி கட்டத்தின்போது தற் காலிகத் தீர்வு ஏற்படுகிறது. உற்பத்திச்சக்திகளின் ஒரு பகுதி அழிக்கப்படுவதால் இந்தத் தீர்வு ஏற்படுகிறது. இது புதிய பெருமுதலீடுகள் செய்வதற்கேற்ற சூழலை உருவாக்குகி றது. வேறு வார்த்தைகளில் கூறினால் ஒரு புதிய முன்னேற் றத்திற்கான துவக்கப்புள்ளியாக நெருக்கடி திகழ்கின்றது. இந்த முன்னேற்றங்கள் முதலில் உற்பத்தி சாதனங்களை உருவாக்கும் கனரக தொழிற்சாலைகளில் ஏற்படுகின்றன. புதிய உற்பத்திச் சாதனங்களுக்கான தேவை ஏன் ஏற்படுகி றது. அது உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் பகுதி யிலிருந்து எழுகின்றதா அல்லது நுகர்வுப் பொருட்களை உருவாக்கும் பகுதியிலிருந்து எழுகின்றதா என்பதெல்லாம் கவனத்திற்குள்ளாவதில்லை. ஏனெனில் நெருக்கடி எல்லா வகை உற்பத்தியையும் பாதிக்கிறது. வியாபாரப் போட்டி உக்கிரம் அடைவது எல்லாத் தளங்களிலும் நடக்கிறது. விலைச்சரிவு எல்லாப் பொருட்களிலும் ஏற்படுகிறது. உற்பத்தி இயந்திரங்கள் அவற்றின் உண்மையான ஆயுளுக்கு முன்பே மாற்றப்படுவதற்கான அடிப்படை உருவாகிறது.


உற்பத்திச்சாதனங்களை உருவாக்கும் தொழில்பகுதிதான் சமூக உற்பத்தியின் போக்கை மாற்றும் செல்வாக்கு உடையதாகத் திகழ்கின்றது. வணிகத்தின் நற்காலத்தை நோக்கிய முன்னேற்றம் இந்த தொழில்பகுதியில் ஏற்படும் வளர்ச்சி அதில் ஈடுபடும் தொழிலாளர் எண்ணிக் கையை அதிகரிக்கின்றது. நுகர்வுப் பொருட்களின் தேவை அதிகரிக்க நுகர்வுப்பொருட்களின் உற்பத்தி அதிகரிக்க வேண்டியுள்ளது. இதனால் இதற்கான உற்பத்திச் சாதனங்களின் உற்பத்தி அதிகரிக்க வேண்டியுள்ளது.


வணிக வளர்ச்சி முழுமையாய் மலர்கின்றது. உற்பத்திச் சாதனங்களை உருவாக்கும் அரங்கு தேவையை சமாளிக்குமளவுக்கு உற்பத்தி செய்யவியலாமல் திண் டாடும் நிலைவரை இது செல்கின்றது. பின் இது மித மிஞ்சிய உற்பத்திவரை சென்று ஒரு புதிய நெருக்கடியை தோற்றுவிக்கின்றது. இந்தப் போக்கு மீண்டும் மீண்டும் நடந்தேறுகிறது. நிலை மூலதனத்தை புதுப்பிக்க கடைப்பிடிக்கப்படும் முரண்பாடுகள், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நெருக்கடி ஏற்படுவதற்கான பொருளடிப்படையை உரு வாக்குகின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி, திரட்சி மற்றும் குவிப்பு என்பதை உடன் ஒட்டி நிலை மூல தனத்தின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.


ஒவ்வொரு முறை ஏற்படும் நெருக்கடியும் அதற்கு முந்தய நெருக்கடிகளைக் காட்டிலும் அகண்டதொரு தளத்தை தாக்கிச் செல்கின்றது. ஒவ்வொரு நெருக்கடியும் அதற்கு முந்தய நெருக்கடியைக் காட்டிலும் அதிகப்படியான சேதத்தை விளைவித்துச் செல்கிறது. சமூகத்தின் உற்பத்திச் சாதன பரிமாணம் எந்த அளவுக்கு பிரம்மாண்டமாக ஆகின்றதோ அதற்கு ஏற்ப சமூகரீதியான உற்பத்திக்கும் - முதலாளித்துவரீதியான கைக்கொள்ளலுக்குமான முரண் பாடும் கூர்மையாகிறது. எனவே நெருக்கடிகளுக்கிடை யேயான கால இடைவெளி முதலாளித்துவம் வளர வளர மேலும் மேலும் சுருங்குகின்றது. அதாவது நெருக்கடி முன்னர் ஏற்பட்டதைவிட அடிக்கடி ஏற்படுகின்றது. 19ஆம் நூற்றாண்டின் இறுதிவரை சராசரியாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்ட நெருக்கடி பின்னர் ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பட்டது.


முதலாளித்துவம் அதன் உயரிய கட்டமாகிய ஏகபோகம் என்ற நிலையை அடைவதற்கு முந்தய காலத்தில் மார்க்ஸ் தனது நெருக்கடி குறித்த கோட்பாட்டை உருவாக்கினார். இது அவரது அரசியல் எதிரிகளுக்கு ஒரு வசதியான சாக்கா கியது. குறிப்பாக சமூக ஜனநாயகவாதிகளுக்கு மார்க்ஸின் நெருக்கடி கோட்பாடு ஏகபோக நிலைக்கு முந்தய முதலாளித்துவத்திற்கு வேண்டுமானால் பொருந்தக் கூடியதாக இருக்கலாம். அது ஏகபோக முதலாளித்துவத் திற்கு பொருந்தாது. குறிப்பாக உலகப்போருக்கு பிந்திய தும் மிகவும் ஒருங்கமைக்கப்பட்டதுமான முதலாளித் துவத்திற்கு இது பொருந்தாது என்றும் கூற முற்பட்டனர். ஆனால் உலகப்போர்களுக்குப் பின் வந்த ஏகபோக முதலாளித்துவம் மார்க்ஸின் நெருக்கடி கோட்பாட்டை தவறென நிரூபிக்கவில்லை. மாறாக மார்க்ஸின் நெருக் கடி கோட்பாடு அட்சரம் பிசகாமல் சரியென நிரூபித்தது. நெருக்கடி குறித்த மார்க்சிய கோட்பாடு மிகச் சரியானதும் துல்லியமானதும் ஆகும் என்பதற்கான மறுக்க இயலாத நிரூபணம் 1929ஆம் ஆண்டு ஏற்பட்டதும் முதலாளித்துவத்தின் வரலாற்றில் மிகக் கடுமையானதுமான நெருக்கடி ஆகும்.

மேற்கோள்கள்:

1.மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள், தொ 2, பகுதி 2, ப. 281
2,3. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1 ப. 127
4. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1. ப. 126
5. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1 ப. 128
6.மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள் - தொகுதி 2, பகுதி 2 பக்கம் 289 - 285
7,8,9. மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள் 10,11. லெனின் - மக்களின் நண்பர்கள் - 1894,தொ.நூ - தொகுப்பு - 1
12,13,14. மார்க்ஸ் - மூலதனம் - தொகுதி 1
15. மார்க்ஸ், மூலதனம் - தொ. 2
16. மார்க்ஸ் - தொ. 3, ப. 292
17. மார்க்ஸ், உபரி மதிப்பு கோட்பாடுகள் - தொ. 2, ப. 263
18. ஏங்கெல்ஸ் - உழைக்கும் வர்க்கத்தின் நிலை - ப. 84
19. லெனின் - தொ.நூ. தொ. 3
20. மார்க்ஸ் - மூலதனம் - தொ. 3 - ப. 712 - 713
21. மார்க்ஸ், மூலதனம் - தொ. 1 ப. 492
22,23. மார்க்ஸ் - மூலதனம் - தொ. 3, ப. 286
24. லெனின் - தொகுப்பு நூல்கள் - தொ. 2, ப. 495
25. லெனின் , தொ.நூ. தொ. 2, ப. 400
26. மார்க்ஸ், மூலதனம், தொ. 111
27,28. மார்க்ஸ் - உபரி மதிப்பு கோட்பாடுகள் தொ. 2, பகுதி 2 ப. 269
29. மார்க்ஸ், மூலதனம் , தொ. 2, ப. 130