இடதுசாரிகளின் நிலை சரியென நிரூபிக்கப்படும்

 நாட்டை ஆள்வோரின் அல்லது ஆட்சி செய்ய ‘ஆசைப்’படுவோரின் திசைவழி என்ன என்பதைக் கணிப்பதும் அதற்கேற்பத் தனது நிலைபாட்டை வகுப்பதும்தான் அரசியல் கட்சிக்கு அழகு. தமிழகத்தில் அஇஅதிமுகவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள அரசியல் முடிவு தமிழகத்தில் மட்டுமின்றி தேசிய அளவிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். 

பாரதிய ஜனதா கட்சியை அரசியல் அரங்கி லிருந்து அகற்றுவதுதான் மதவாத மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்ற நிலைபாடு கொண்ட பாஜக, நாட்டின் பன்முகக் கலாச்சாரத்தை பாழ்படுத்தி விடும் என்பதற்கு கடந்தகாலத்தில் ஏராளமான சான்றுகள் உண்டு. தமிழகத்திலும் அது தனது கோர முகத்தைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறது.

அந்த மனுவாதி கட்சியை ஆரத்தழுவி திருத்திவிடலாம் என்று உறவாடிய திமுக ஒன்றும் நடவாதத் தோல்வியோடு திரும்பி வந்தது. புலி தன் கோடுகளை எக்காலத்திலும் உதிர்த்து விடாது என்பதன் அடையாளமாகத்தான் பாஜக வின் அனைத்து முடிவுகளும் அமைந்துள்ளன. இன்றுவரை அந்தக் கட்சி தனது மதவெறி அஜெண்டாவைக் கைவிடவில்லை. மக்கள் இந்தக் கட்சியை 2004 தேர்தலில் நிராகரித்து ஆட்சியிலிருந்து அகற்றினார்கள். இதற்கான பணியில் இடதுசாரி கட்சிகளின் பங்கு மகத்தானது.

இடதுசாரி கட்சிகளின் ஆதரவோடும் வேறு சில கட்சிகளின் கூட்டணியோடும் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், நாசகர பொரு ளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதில் மாற்றம் செய்யவில்லை. இன்றைக்கு உலகமே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் போது இந்தியா ஓரளவு தப்பித்திருக்கிறதென் றால் அதற்கு காரணம் இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பே என்பதை நாடறியும்.

எனினும் மன்மோகன் சிங் தனது அமெ ரிக்க ஏகாதிபத்திய ஆதரவு நிலையை மாற்றிக் கொள்ளவில்லை. நாட்டின் எதிர்காலத்தைப் பாழாக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக் காவுடன் செய்து கொண்டார். உலக அடாவடிக் குக் கையாளாக இந்தியாவை மாற்றும் மத்திய அரசின் இந்த முயற்சி முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

மேலும், வசதி படைத்தவர்களுக்கு மேலும் மேலும் சலுகைகள்; வாழ்க்கையில் அடிபட்ட வர்களுக்கு மேலும் மேலும் வறுமை, வேதனை என்ற மத்திய அரசின் நிலையை எதிர்க்க வேண்டிய கட்டாயக் கடமை இன்று இடது சாரிகளுக்கு இருக்கிறது.

இந்தக் கடமையை நிறைவேற்ற தேசிய அள விலும், மாநில அளவிலும் இடதுசாரிகள் மேற் கொண்டிருக்கும் அணி சேர்க்கை பாஜக-காங்கிரஸ் கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டும். இந்த கட்சிகளோடு கை கோர்த்து நிற்பவர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது. பாஜக அணியைத் தோற்கடியுங்கள். காங்கிரஸ் அணி யை நிராகரியுங்கள் என்ற இடதுசாரி கட்சிகளின் முழக்கம் சரிதான் என்பதும் நிரூபிக்கப்படும்.

இந்த பின்னணியில் அதிமுகவுடன் இணைந்து இடதுசாரி கட்சிகள் தேர்தலை சந்திப்பதன் மூலம் மதவெறி பாஜகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்ற நிலை உருவாக்கப்படும். காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளி கட்சிக ளுக்கு உரிய பாடம் புகட்ட ஏதுவாகும். நாடாளு மன்றத்தில் இடதுசாரி கட்சிகளின் பலம் அதி கரிக்கும். இதன்மூலம் அமையப் போகும் நாடாளுமன்றத்தின் முகவரி மாற்றியமைக்கப் படும். அதன்மூலம் உழைக்கும் மக்களின் நலன் பேணும் மாற்றுக்கொள்கைகளை 

கருத்துகள் இல்லை: