மே தின சிந்தனைக்கு

கட்டுரையாளர் - தோழர் செம்மலர் இரா சிந்தன்


"உழைப்பே உயர்வு தரும்"


உழைப்பாளர் தின வாழ்த்துச் செய்திகளில் தவறாமல் இடம் பெற்ற வாசகம் இது, இதிலிருந்தே தொடங்குவோம்

"உழைப்பே உயர்வு தரும்" - யாருக்கு?

உழைப்பாளர் தினம என்றதும், நண்பர் இப்படித் தான் ஆரம்பித்தார் "உழைப்பு தான் நாட்டை உயர்த்தும், பாருங்கள் ஜப்பானை, (அப்போது பார்த்து ஒரு பிச்சைக்காரர் எங்களை கடந்து சென்றார் அவ்வளவ்தான்) "இது கெல்லாம் இருக்கறப்ப எப்பிடி சார் நாடு முன்னேறும்" (புலம்பல்களை ஆரம்பித்துவிடுகிறார்)

ஆம் உழைப்புதான் உயர்வு தரும் , உழைப்பு தான் காடுகளை நகரம் ஆக்கும், கரைகளை செப்பனிடும், நதியை தடுத்து நிறுத்தும், அந்த பிரம்மாண்ட அணைக்கட்டுகள் , உழைப்பின் அசாத்திய சாதனைகள் .. ஆனாலும் 100 கோடிபேர் இருக்கிற இந்தியாவில் உழைப்புக்குதான் பஞ்சமா? இருந்தும் ஏன் வறுமை? பற்றாக்குறை? ஒருவேளை நண்பர் சொன்னது போல பிச்சைகாரதான் பிரச்சனையோ? ..

"கொழுத்தவன் வளர்கிறான் - வறியவன் தெய்கிறான் " நடப்பது இதுதான்

அப்போது, உழைக்கிற மனிதன் வாழ்வான் - சோம்பேறிகள் அழிவார் என்பது தான் உண்மையா? சத்தியமாய் இல்லை ! இன்றைய சமுதாயக் கட்டமைப்பு உழைப்பவனை விட அவனை எயப்பவனுக்குத்தான் சாதகமாய் இருக்கிறது. உடனே "அதுதான் தெரியுமே". புத்திசாலி வாழ்வான். "உழைச்சா பத்தாது புத்தி இருக்கணும்" என்பீர்களே .. ம்ம்ம் அதுதான் அவர்களின் வெற்றியும் கூட . நம்மைக் (தொழிலாளிகளை) கூட சுரண்டல் வாதியாக சிந்திக்க வைத்ததுதான் அவர்களின் (முதலாளி வர்க்கத்தின்) வெற்றி. எனவே "உழைப்பே உயர்வு தரும்" என்பது பொய்த்துப் போனது .திருட்டு புத்திசாலித் தனம் ஆனது.


உழைபாளர்களுக்கு தினம் வைத்து கொண்டாடுவது, சும்மா நடந்த நிகழ்வல்ல (முழு விபரங்களுக்கு வரலாற்றை திரும்பிப் பார்க்கவும்) , அது நம் போராட்டங்களின் மொத்த அடையாளம். நமக்காய் வாழ்ந்து மடிந்த தோழர்களின் தியாக வரலாறுகளை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணம்,

உற்ப்பத்தி கருவிகள் நம்மிடம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காய், உழைப்பை சுரண்டிக் கொளுக்கிற கூட்டத்திடம் உயிரை கொஞ்சம் கொஞ்சமாய் விற்கிறோமே! .. அந்த உண்மையை புரிந்து - ஆர்த்தெளுக எம் இனமே - "உலக ப்பாட்டாளி வர்க்கமே ஒன்று சேர்வோம்" என பொதுவுடைமைப் புரட்சி காண நமக்கு நியாபகப் படுத்தும் நாள்.

இது மகிழ்ந்து களித்திருக்கவேண்டிய நாளல்ல - கிளர்ந்து கோசமிட வேண்டிய நாள்

நியாபகப் படுதிக்கொள்வோம்

"நாம் இழப்பதற்கு ஒன்றுமில்லை சுரண்டல் வன்கொடுமை தவிர - அடைவதர்க்கோ ஒரு பொதுவுடைமை பொன்னுலகம் இருக்கிறது"

உழைப்பாளர் தினத்தில் உழைப்பை போற்றுவோம் - உழைப்பாளர் நிலை கண்டு கொதித்து எழுவோம் !

கருத்துகள் இல்லை: