விலை உயர்வு இந்திய நடைமுறையும் - வெனிசுலா வழிமுறையும்

.................................................................................................................................................................

கட்டுரையாளர் - தோழர் டி.எம் ராஜாமணி

..................................................................................................................................................................

சமீபத்தில மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது அகில இந்திய மாநாடு கோவையில் நடந்து முடிந்துள்ளது. அம்மாநாட்டில் தேசத்தையும் தேச மக்களையும் பாதுகாத்திட காங்கிரஸ்-பாஜக கட்சகிளுக்கு மாற்றாக 3-வது அணி அமைத்திட வேண்டுமெனவும் அவ்வணி தேர்தலை மையமாகக் கொண்டதாக அல்லாமல் மக்கள் வாழ்க்கைப் பதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை மையமாகக் கொண்டதாக அமைத்திடப்பட வேண்டுமெனவும் தீர்மானித்து அறவிக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின் முதல் நடவடிக்கையாக வரும ஏப்.16 - 21 வரை நாடு தழுவிய விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டத்தை இடதுசாரி கட்சிகளும், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட ஜனநாயக கட்சிகளும் அறிவித்த, கூட்டாக களத்தில இறங்கிவிட்டனர்.

அரிசி,பருப்பு,இரும்பு,சிமெண்ட் உள்ளிட்ட அத்தியாவிசய பொருட்களை தாருமாறாக விலை உயர்ந்து மாதமாகிவிட்டது. நாட்டுமக்கள் விழிபிதுங்கிக் கொண்டுள்ளார்கள். காங்கிரஸ் அரசோ அவசர அமைச்சரவைக கூட்டம் நடத்திய பின் விலைகளை உயர்த்தி, பெருமுதலாளிவர்கப் பேர்வழிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திட ஏற்ப்பாடு செய்துள்ளதாம். சில வரிகளைக குறைத்தும் உள்ளார்களாம். உருப்படியாக இவ்விசயத்தில் செய்ய வேண்டியது என்ன? என்பதற்கு லத்தீன் அமெரிக்காவின் ஒரு குட்டி நாடான வெனிசுலாவின் சமீபத்திய நடவடிக்கையை நமது மாபெரும் ஜனநாயக நாட்டின் ஆட்சியாளர்களுக்கு கோடிட்டுக்காட்டுவோம்.

வெனிசுலாவில் சமீப காலமாக சிமெண்ட் விலைகள் தாருமாறாக உயர்த்தப்பட்டன. செயற்கையான சிமெண்ட் தட்டுப்பாடும் ஏற்படுத்தப்பட்டது. உற்பத்தியில் பெரும்பகுதி நாட்டிற்கு வெளியே ஏற்றுமதி செய்யப்பட்டது. உஷாரான வெனிசுலா அரசு நிலைமையை கூர்ந்து கணக்கிட்டது, அங்கே முக்காலே 3வீதம் சிமெண்ட் உற்பத்தி 3 பெரும் அன்னியக் கம்பெனிகளிடம் இருந்தன.

  1. மெக்சிகோ நாட்டின் சிமெக்ஸ்
  2. சுவிட்சர் லாந்தின் ஹோல்கிம்
  3. ஃபிரான்ஸின் லாஃபார்க்

இதில் சிமெக்ஸ் வெனிசுலாவின் மிகப்பெரும் உற்பத்தி நிருவனமாகும். அது நாடுமுழுவதும் வலைப்பின்னல்கள் போல 33 உடனடி கலவை (சநயனல அiஒ) ஆலைகளை நிறுவி ஆண்டுக்கு 4.6 லட்சம் டன் சிமெண்ட் உற்பத்தி செய்து வெனிசுலாவை சுரண்டிக்கொழுத்திருந்தது. இதன் சொத்து மதிப்பு 1.18 பில்லியன் பொலிவார்களாகும் (547 மில்லியன் டாலர்கள்). இந்த முலதனக்குவிப்பு வெனிசுலா மக்களின் உழைப்பே என்பதற்கு ஆதாரம் 2007ம் ஆண்டின் அதன் வளர்ச்சி 17 சதவீதம் ஆகும். அதோடு இக்கம்பெனியின் பனியாளர்களில் (தொழிலாளர் மற்றும் அலுவலர்கள்) 99 சதவீதம் வெனிசுலாநாட்டு மக்களே ஆவர். அந்நாட்டு முலவளத்தை அதன் மக்களைக்கொண்டே சுரண்டி தனது முதலீட்டை பெருக்கிக் கொண்டுள்ளது சிமெக்ஸ் கம்பெனி.

அடுத்து சுவிட்சர்லாந்தின் ஹோல்கிம் கம்பெனி, இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் சிமெண்ட் உற்பத்தி ஆலையாகும். இதன் உலக அளவிலான உற்பத்தியில் 1.5 சதவீதம் மட்டுமே வெனிசுலாவில் இது உற்பத்தி செய்கிறது. ஆனால் அந்த 1.5 சதவீதம் என்பது எவ்வளவு தெரியுமா? ஆண்டுக்கு 3லட்சம் டன்கள். இந்த உற்பத்தி முழுவதும் அங்கு நிறுவியுள்ள இரண்டே இரண்டு ஆலைகளால் செய்து முடிக்கப்படுகிறது. இக்கம்பெனியின் பனியாளர்களும் வெனிசுலாநாட்டு மக்களே ஆவர்.

3-வதான ஃபிரான்ஸின் லாஃபார்க் கம்பெனி. இது 1.6 லட்சம் டன்கள் சிமெண்ட்டை உற்பத்தி செய்கிறது.

இம் 3 கம்பெனிகளுமே வெனிசுலா நாட்டின் சிமெண்ட் வளத்தை அந்த நாட்டுக்கு பயன்படுத்தாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலேயே குறியாய் இருந்ததை கவனித்த சாவேஸ் அரசு சென்ற வருடமே இவற்றை எச்சரித்திருந்தது, "எங்கள் நாட்டின் தேவைகளை முதலில் நிறைவேற்றுங்கள் அடுத்ததாகவே ஏற்றுமதி இருக்க வேண்டும்" ஆனால் அதை அந்தக் கம்பெனிகள் காதில் போட்டுக்கொள்ளவில்லை, விளைவு சிமெண்ட் தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டு சிமெண்ட் விலையும் கூட்டப்பட்டது. கடந்த 3.04.08 வியாழன் அன்று இம் 3 கம்பெனிகளையும் நாட்டுடைமையாக்கி அறிவித்தார்.

அவர் கூறினார், "இந்நிறுவனங்கள் சிமெண்ட் -க்கு மிக அதிக விலை வைத்து விற்பனை செய்கின்றன, மேலும் உற்பத்தியையும் மிக மெதுவாகவே செய்கின்றன. மேலும் மாசுக்களை அதிகப்படுத்துகின்றன, அவற்றைக் குறைக்கும் நவீன தொழில்நுட்பங்களிலும் முதலீடு செய்ய மறுக்கின்றன. எனவே சிமெண்ட் உற்பத்தியை துரிதப்படுத்திடவும் அதிகப்படுத்திடவும் உள்நாட்டின் தேவைகளை நிறைவேற்றவும் இந்த ஆலைகளை நாங்களே எடுத்துக்கொள்கிறோம்.

இந்த நாட்டுடைமை அறிவிப்பு வந்தவுடனே ஃபிரான்ஸின் பிரதமர் கிரிஸ்டின் லகார்டி "இந்த விசயத்தை முழுமையாய் கையிலெடுத்துக்கொண்டு வெனிசுலாவிடம் விளக்கம் கேட்போம்" என்றார். அதன் பொருள் 2001-ல் பிரான்ஸ்-வெனிசுலா செய்துகொண்ட - இன்வஸ்மென்ட் புரடக்ஸன் அக்கார்ட்ஸ் - ஒப்பந்தப்படி "பரஸ்பரம் எந்தப்பொருளை அபகரித்துக்கொண்டாலும் அதன் முழு மதிப்பை அளித்திட வேண்டும்" என்ற சரத்தை வழியுருத்துவதாகும். சாவேஸ் தமது அறிவிப்பில் இது குறித்தும் தெளிவாகவே கூறியிருந்தார் "இந்த நிறுவனங்கள் எவ்வளவு மதிப்புபக் கொண்டவையாக இருந்தாலும், அந்த விலையை அரசு கொடுக்கும்"


கொள்ளை லாபமே நோக்கமாகக் கொண்டு உற்பத்தி பொருட்களை பதுக்கிவைத்து விலையேற்றுவதுஇ ஏற்றுமதி செய்து உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுத்தி விலை ஏற்றிவிடுவது போன்றவற்றிற்கெல்லாம் எத்தகைய நடவடிக்கைகள் முலம் பதில் சொல்வது என்பதற்கு சின்னஞ்சிறு வெனிசுலா வழிகாட்டிவிட்டது. இந்திய நாட்டு பிரதமரும் அமைச்சரவையும் எஞ்சியுள்ள ஒருவருட ஆட்சியில் என்ன செய்யப்போகிறார்கள்? யாரைப் பாதுகாத்திடப் போகிறார்கள்? தேச மக்களையா இல்லை பெருமுதலாளிகள் - வர்த்தகசுதாடிகளையா?

நாடே கவனித்துக் கொண்டிருக்கிறது!!!

ஆதாரம் - www.blomberg.com

www.bbc.com

2 கருத்துகள்:

shakthi சொன்னது…

\\கொள்ளை லாபமே நோக்கமாகக் கொண்டு உற்பத்தி பொருட்களை பதுக்கிவைத்து விலையேற்றுவதுஇ ஏற்றுமதி செய்து உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படுத்தி விலை ஏற்றிவிடுவது போன்றவற்றிற்கெல்லாம் எத்தகைய நடவடிக்கைகள் முலம் பதில் சொல்வது என்பதற்கு சின்னஞ்சிறு வெனிசுலா வழிகாட்டிவிட்டது\\
இந்திய பிரதமருக்கு இது நன்றாக தெரியும், ஆனால் உலக வங்கியின் பாசமும், உள்ளூர் முதலாளியின்
நேசமும் அவருடைய இரண்டு கண்களையும் மறைக்கின்றது என்பது மட்டும் உண்மை.

சூரியன் சொன்னது…

வணக்கம் தோழர்.
நீங்கள் CPM ல் இருக்கிறீர்களா ?
உங்களுடைய‌ புர‌ட்சிக‌ர‌ உண‌ர்வு ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.
இவை எமது பதிவுகள் பாருங்கள்.


http://arasubalraj.blogspot.com/

http://sivappualai.blogspot.com/

http://yekalaivan.blogspot.com/

http://redsunrays.blogspot.com/

http://santhippiniruttadippu.blogspot.com/

http://poar-parai.blogspot.com/