இந்திய பட்ஜெட்டில் முதலாளிக்கு 3,80,655 கோடி தள்ளுபடி

சமீபத்தில் நண்பர் வீட்டுக்கு சென்ற போது அங்கு குப்பை தொட்டியில் போட்டுவதற்காக வைத்திருந்த துக்ளக் புத்தகத்தை படிக்க நேர்த்து. அதில் சோ விவசாய கடன் தள்ளுபடி பற்றி தனது கவலையை தெரிவித்து இருந்தார். அதில், இப்படிக் கடன் தள்ளுபடி ஆவது, பொருளாதாரத்திற்கு நல்லதல்ல; கடன் வாங்கினால், நாளை அது தள்ளுபடி என்ற வழக்கம், ஊதாரிதனத்தையும், நேர்மையின்மையும் வளர்க்கும்; பொருளாதாரத்தையும் நசுக்கும். என எழுதிருக்கிறார். ஆனால், இந்த சோவும் மற்ற பத்திரிகைகளும் அரசாங்கத்தின் மற்றொரு புறத்தில் இந்திய மற்றும் பன்னாட்டு முதலாளிக்கு அரசாங்கம் தரும் சலுகைகளும், கடன் தள்ளுபடி பற்றி எழுத துப்பு இல்லை.

கடந்த (2007-) பட்ஜெட்டில், பெரும் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அள்ளிக்கப்பட்ட வரிச் சலுகையால் அரசுக்கு ஏற்பட்ட நட்டம் மட்டும் 58,655 கோடி ரூபாய்.
பங்கு நிறுவங்களுக்கு கொடுக்கப்பட்ட வரிச் சலுகை ரூபாய். 4,000 கோடி.
தனிப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்பட்ட வருமான வரிச் சலுகை ரூபாய். 38,000 கோடி.
தொழில் நிறுவங்களுக்கு அளிக்கப்பட்ட உற்பத்தி வரிச்சலுகை ரூபாய் 88,000 கோடி
சுங்க வரி விதிப்பில் கோடுக்கப்பட்ட சலுகை ரூபாய் 1,48,000 கோடி
பெரு முதலாளிகள் இந்திய அரசு வங்கிகளில் வாங்கி திருப்பி செலுத்தாமல் மத்திய அரசால் வாராக்கடன் என தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 44,000 கோடி
ஆக, மொத்தம் மத்திய அரசால் (2007-8) பட்ஜெட்டில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூபாய் 3,80,655 கோடி.

இந்தியாவின் ஓட்டு மொத்த பட்ஜெட்டில் 3,80,655 கோடி தள்ளுபடி என்ற பெயரால் இந்திய மக்களின் வரி பணத்தை முதலாளிக்கு வரி வழங்கும் சிதம்பரம், விவசாயிக்கு 66,000 கோடி (இதுவே ஒரு பிராடு) தள்ளுபடி செய்ததை பெரிதாக பீற்றிக் கொள்கிறார்.


..................................................................................................................................................

கட்டுரையாளர் - தோழர்.சக்தி தமிழ்நாடு

..................................................................................................................................................


கருத்துகள் இல்லை: