மாற்றத்திற்கு இதுவே சரியான நேரம்!
இடதுசாரிகளின் தேர்தல் அறிக்கை - தமிழகத்தில் அறிமுகம்
அத்வானியின் ஐ.டி. வாக்குறுதியும் என்.டி.ஏ-வின் கொள்கையும்
-எஸ்.ஏ. மாணிக்கம் |
மேற்கண்டவை பில்கேட்ஸ்ஸின் அறிவிப்பல்ல. பாஜகவின் 30 பக்க தகவல் தொழில்நுட்ப (ஐடி) கொள்கை அறிக்கையில் உள்ளவை. இன்னும் இது போன்ற வாக்குறுதி பட்டியல் நீளுகின்றன. அத்வானி தேர்தலுக்கு புதியவர் அல்ல. அவருடைய பாஜகவும் புதிய கட் சியல்ல. அவருடைய கூட்டணியும் புதி யது அல்ல. இவர்கள் ஏற்கனவே ஆறு ஆண்டு காலம் மத்திய அரசில் இருந்த வர்கள் என்பதை (மக்களை) மறந்து விட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள். அனைத்து பள்ளிகளுக்கும் கணினி வசதி செய்வது இருக்கட்டும், இவர்கள் ஆட்சியில் கல்வித்துறை எப்படி இருந் தது என்பதை அத்வானியின் சகாக்க ளுக்கும், நாட்டு மக்களுக்கும் மீண்டும் நினைவூட்டுவது நல்லது.
கல்வித்துறையை காவி மயமாக்கும் திருப்பணியைத் தான் ஐந்தாண்டு காலம் செய்து வந்தது. |
பாஜக-காங். சுருதி இறக்கம்
கூட்டணி ஆட்சி நடத்திய அனுபவத்தால் மாற்றத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்வோம் என்று காங்கிரஸ் கட்சியும், அத்வானியைப் பிர தமராக ஏற்றுக்கொண்டால் யாருடனும் சேர்ந்து கொள்வோம் என்று பாஜகவும் கூறி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்று இல்லை என்ற இவர்கள், தங்கள் சுருதியை மாற்றி யுள்ளனர். இவர்களின் கூட்டாளிகள் கொஞ்சம், கொஞ்சமாக கழன்று கொண்டு விட்டதால்தான் மாற்றிப் பேச ஆரம்பித்துள்ளனர்.
காங்கிரசுக்கு, திமுக மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டும் தான் துணையாக உள்ளன. உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய இரு பெரிய மாநிலங்களில் கூட் டாளிகளாக இருந்த சமாஜ்வாதி மற்றும் ராஷ் டிரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே குறைவான தொகுதிகளை ஒதுக்கியதால் காங் கிரஸ் தனிமரமாகியுள்ளது. தமிழகத்தைப் பொறுத் தவரை, பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளதால், தென் இந்தியா விலும் காங்கிரசுக்கு இழப்புதான் மிஞ்சும்.
பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருந்தபோது 26 கட்சிகளைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட் டணி இருந்தது. தற்போது ஆறு கட்சிகள்தான் பாஜகவுடன் இணைந்து நிற்கின்றன. அதிலும் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பல்வேறு விஷயங்களில் பாஜகவுடன் முரண்பட்டு நிற்கிறது. அண்மையில் வருண் காந்தியின் வன்முறையைத் தூண்டும் பேச் சுக்கு நிதிஷ் குமார் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பெரிய கட்சிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே பிரதமர் வேட்பாளர் யார் என்ற விவாதத்தை நீட்டிக்கொண்டே செல்ல விரும்புகின்றன. அத்வானியோ ஒருபடி மேலே போய் மன்மோகன்சிங்குடன் நேரடியாக விவா திக்கத் தயார் என்று அறைகூவல் விடுக்கிறார். தங்களின் ஆட்சியின் போது நாடாளுமன்ற ஜன நாயகத்திற்கு மதிப்பளிக்காத இரு கட்சிகளுமே இவ்வாறு பேசிக்கொள்வது ஆச்சரியமளிக்க வில்லை. ஆனாலும் இருவரும் பேசிக்கொள் வோம் என்ற அத்வானியின் கூற்று மாற்று அணியின் மீதான அச்சத்தையே காட்டுகிறது.
இந்த அணிகள் தகர்ந்துவரும் வேளையில், அதற்கு மாறாக, மூன்றாவது அணி என்று பொது வாக அழைக்கப்படும் மாற்று அணியின் பலம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத் தட்ட அனைத்து மாநிலங்களிலும் இந்த அணி யைச் சேர்ந்த கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் நிலை உருவாகி வருகிறது. இது மூன்றாவதாகத் தான் வரும் என்றெல்லாம் கிண்டலாகப் பேசிய வர்கள், இந்த அணி வெற்றி பெற்றால் யாரைப் பிர தமராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்ற விவாதத்திற்குத் தாவியுள்ளனர். மாற்று அணி வெற்றிபெறப்போவ தை இத்தகைய விவாதங்கள் உறுதி செய்கின்றன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா, உ.பி., கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெரும்பாலான இடங்களையும், மற்ற மாநிலங் களில் கணிசமான இடங்களையும் கைப்பற்றப் போகும் மாற்று அணியை மூன்றாவது அணி என்று அழைப்பதை விட முதலாவது அணி என்று அழைப்பதே பொருத்தமானதாக இருக் கும். பெரிய மாநிலங்களில் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கான போட்டியில் இருக்கும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை கரணங்கள் போட்டாலும் பெரும்பான்மையை எட்ட முடியாது என்பதே தற்போதைய நிலை மையாகும்
காங். தேர்தல் அறிக்கை-காற்றில் கரையும் கற்பூரம்
-மதுக்கூர் இராமலிங்கம் |
“துன்பத்தை கட்டி சுமக்கத் துணிந் தவன் சொன்னாலும் கேட்பானோ ஞானப்பெண்ணே” என்பது மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், தங்கப்பதுமை படத்திற்காக எழுதிய பாடலில் வரும் வரிகளாகும். எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மன்மோகன் சிங்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப் பதை பார்க்கும்போது மக்கள் கவிஞரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. |
மொழியாக்கம்: இரா சிந்தன்.
1 வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் மையமான பிரச்சனைகளாக எவை இருக்கும்?
இந்தியாவின் பொருளாதார நிலை. எப்போதும் அதுவே பெரிய பிரச்சனையாக இருக்கும். ஆனாலும் உலக நெருக்கடி அதனை எதிர்பார்த்ததற்கு மேலாக அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சனையாக மாற்றி விட்டது.
2 கேரளா மற்றும் மேற்கு வங்க அரசுகளின் மாநில நிதி நிலை அறிக்கைகளில் "ஊக்க தொகைகள்" (stimulus packages) அறிவிக்கப் பட்டுள்ளன. இதன் மூலம் இடதுசாரிகள் சொல்ல வருவது என்ன?
நாங்கள் சொல்ல வருவது: அரசு தனது உள்கட்டமைப்பில் அதிக நிதியை முதலீடு செய்ய வலியுறுத்துவதே பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரே வழி. அரசு முதலீட்டில் ஒரு பெரிய உயர்வு இருக்க வேண்டும். இப்போது சில முன்னேற்றங்கள் உள்ளன ஆனால் அவை போதுமானதல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிவித்துள்ள சுமார் 40,000 கோடி என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதே. இது தேவைக்கும் மிகக் குறைவான ஒதுக்கீடு. கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் ஊக்கத் தொகையாக கொடுக்கப்பட்டுள்ள தொகை அந்த மாநிலங்களின் மொத்த உற்பத்தியில் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமானது. அதாவட்டிது, நாங்கள் இதை ஐந்து மடங்கு உயர்த்தியுள்ளோம், -- இதுதான் நாங்கள் சொல்லுகிற செய்தி. பெரிய நிறுவனங்களுக்கான காப்புத் தொகை (bail-out) ஒரு எல்லை வரைக்கும் ஒரு வேலை தேவையாக இருக்கலாம். ஆனால் அதில் பணம் மற்றும் பொருளாதாரம் பற்றிய கொள்கைகளின் நியாமான கலப்பு தேவைப்படுகிறது. பொது செலவுகளை அதிகரிப்பதிலும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதிலும் மற்றும் அதற்காக உள்நாட்டு தேவையை அதிகரிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
3 மற்ற வளரும் நாடுகள் எல்லாம் வீழ்ச்சியைப் பதிவு செய்யும்போது இந்தியா எழு சதவீத வளர்ச்சியை எட்டியிருப்பதாக அரசு சொல்லுகிறதே!
இந்த ஏழு சதவீத வளர்ச்சி மேலும் வீழ்ச்சியடையும் என்றே நினைக்கிறேன். (வருங்காலத்தில்) இந்தியா 5.5 சதவீதம் வளர்சியையாவது பராமரிக்க முயல வேண்டும். ஆனால் நம்மால் ஏழு சதவீத வளர்ச்சியை எப்படி எட்ட முடிந்தது?. அதற்கு அவர்கள் தங்களின் எதிரிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.
இடதுசாரிகள் நான்கு முக்கிய விசயங்களை துவக்கத்திலேயே தடுத்ததன் மூலம் இந்த நாட்டை முழுமையான அழிவிலிருந்து காத்திருக்கிறோம்.
முதலாவது, முழுமையான நானைய மாற்றிற்கு ரூபாயை உட்படுத்தியதில் இருந்தும். இரண்டாவது, இந்திய தனியார் வங்கிகளில் வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் பங்குகளை உயர்த்துவதையும், பங்குகளின் அளவிற்கு ஏற்றார்போல வெளிநாட்டு இயக்குனர்களை அனுமதிக்க ஏற்றுக்கொள்ளும் வகையிலான அவர்களின் செயல்பாடுகளை நாங்கள் தடுத்தோம். ஒருவேளை அது நடந்திருந்தால் பல அந்நிய நாடுகள் வீழ்ச்சியைச் சந்தித்த போது, அவைகளோடு சேர்ந்து பெரும்பாலான இந்திய வங்கிகளும் வீதிக்கு வந்திருக்கும். மூன்றாவது, தொழிலாளிகளின் பென்சன் தொகையை தனியார் வசம் ஒப்படைக்கும் முயற்சியைத் தடுத்தோம். மற்றும் இறுதியாக இந்திய காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிக்காமல் பார்த்துக்கொண்டோம். இந்த முயற்சிகள் இந்திய பொருளாதாரத்திற்கு வலிமை சேர்த்துள்ளன.
வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதன் பெருமை இந்திரா காந்தியையே சாரும் என்று அவர்கள் (காங்கிரஸ்) கூறுகிறார்கள். ஆனால், வங்கிகள் மற்றும் நிலக்கரி தாதுக்கள் தேசிய மயமாக்கப்பட்டதும், முடி மன்னர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதும் 1969 இல் நடந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. மேற்ச்சொன்ன எல்லாமும் சஞ்சீவ ரெட்டியை எதிர்த்து ஜனாதிபதி வேட்பாளராக இந்திரா காந்தி நிறுத்திய வி.வி.கிரி யை ஆதரிப்பதற்காக இடதுசாரிகள் வைத்த நிபந்தனைகள். காங்கிரசில் இண்டிகேட்-சிண்டிகேட் யுத்தம் நடந்துகொண்டிருந்த பொழுது இந்திரா காந்தி யின் அரசு சிறுபான்மை அரசாக இருந்தது, அப்போது இந்திரா அரசு நிலைத்திருக்க அவருக்கு இடதுசாரிகளின் ஆதரவு தேவைப்பட்டது. அப்போதுதான் மேற்ச்சொன்னவைகள் எல்லாம் நடைபெற்றன. எனவே வங்கிகள் தேசிய மயமாக்கப் பட்டது எனில் அதுவும் இடதுசாரிகளால் நடந்தது.
4 கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே முக்கிய பாலமாக இருந்திருக்கிறீர்கள். காங்கிரசை கையாளுவதில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் என்ன? தேர்தலுக்கு பிறகு ஒரு மீண்டும் ஒரு கூட்டணிக்கான தேவை ஏற்பட்டால் உங்களின் விருப்பம் என்னவாக இருக்கும்??
உங்கள கேள்வியின் இரண்டாம் பாகத்தைப் பொறுத்தமட்டில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டோம். எனது விருப்பம் இந்த போரில் காங்கிரஸ் அல்லாத, வகுப்பு வாதிகள் அல்லாத மாற்றினை வெற்றிகொள்வதே. எனவே போருக்கு பிறகு என்ன நடக்கும் என்பதை பற்றிய கேள்விக்கே இப்போது இடமில்லை.
முதல் கேள்வியை பொறுத்த அளவில், ஆம், நாங்கள் ஒரு குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்கிரசோடு இணைந்து செயல்பட்டோம். ஆனால் இந்த காலத்தில் முழுவதும் காங்கிரஸ் தனது புதிய-பொருளாதார சீர்திருத்தத்தை தொடர்வதற்கே விரும்பியது. நாங்கள் சில விசயங்களில் கவனம் செலுத்தியிருக்கும் போது, அவர்கள் தங்களின் திட்டத்தை பின் வாசல் வழியாக நிறைவேற்றிக்கொள்ள நினைத்தார்கள்.
உதாரணத்திற்கு சிறு வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு. இதனை நாம் ஒரு முறை அனுமதித்தால் லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் தங்கள் வேளையி இழப்பார்கள். எனவே வேலை வாய்ப்பை குறைக்கக்கூடிய அந்நிய நேரடி முதலீட்டை சிறு வணிகத்தில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னோம். ஆனால் அரசு அதனை பின் வாசல் வழியாக் அனுமதிக்க முயற்சித்தது. முதலில் மொத்த வியாபாரத்தில் மட்டும் அனுமதிப்பதாக கூறினார்கள், பிறகு ஒரே நிறுவனத்தின் பொருட்களை விற்க அனுமதி என்றார்கள். பின்பு விளையாட்டு பொருட்கள விற்க அனுமதி தருவதாகக் கூறினார்கள். இவ்வாறு நேர்மையற்ற வழியில் அவர்கள் அந்நிய முதலீட்டை அனுமதித்தார்கள்.